விட்டு கொடுத்த சீட்டா; வெவரமா வச்ச வேட்டா?| Dinamalar

விட்டு கொடுத்த சீட்டா; வெவரமா வச்ச வேட்டா?

Added : பிப் 13, 2014
Share
"'மித்து! ஆவாரம்பாளையம் ரயில்வே 'கேட்'ல மாட்டிட்டு இருக்கேன்; எப்படியும் அங்க வர்றதுக்கு அரை மணி நேரமாகும்னு நினைக்கிறேன்; அங்கேயே 'வெயிட்' பண்ணு,'' என்று மொபைலில் சித்ரா உத்தரவிட, ''அய்யோ! அந்த 'கேட்'ல மாட்டிக்கிட்டியா? டிரெயின் வந்து, 'கேட்' திறந்து, டிராபிக்ல நீ மீண்டு வர்றதுக்கு எப்படியும் ஒரு மணி நேரமே ஆயிடும். நான் கெளம்புறேன்,'' என்றாள் மித்ரா.
விட்டு கொடுத்த சீட்டா; வெவரமா வச்ச வேட்டா?

"'மித்து! ஆவாரம்பாளையம் ரயில்வே 'கேட்'ல மாட்டிட்டு இருக்கேன்; எப்படியும் அங்க வர்றதுக்கு அரை மணி நேரமாகும்னு நினைக்கிறேன்; அங்கேயே 'வெயிட்' பண்ணு,'' என்று மொபைலில் சித்ரா உத்தரவிட, ''அய்யோ! அந்த 'கேட்'ல மாட்டிக்கிட்டியா? டிரெயின் வந்து, 'கேட்' திறந்து, டிராபிக்ல நீ மீண்டு வர்றதுக்கு எப்படியும் ஒரு மணி நேரமே ஆயிடும். நான் கெளம்புறேன்,'' என்றாள் மித்ரா.

''ஆமாடி! நட்ட நடு சிட்டிக்குள்ள தினமும் பல ஆயிரம் பேரு, சிக்கித்


தவிக்கிறாங்களே; ஏதாவது பண்ணி, சீக்கிரமா பாலம் கட்டுறதுக்கு ஏற்பாடு பண்றாங்களா? கேஸ் இருக்கு, அது, இதுன்னு காரணம் சொல்லியே காலத்தை ஓட்றாங்க,'' என்று கொதித்தாள் சித்ரா.


''நீ வேற! இந்த பாலத்துக்கு, டி.எம்.கே.,பீரியடு முடியுற 'டைம்'ல அவசர அவசரமா அடிக்கல் நாட்டுனாங்களே; ஞாபகமிருக்கா? அது நடந்து மூணு வருஷமாச்சு; இந்த கவர்மென்ட் வந்து, பாலம் கட்டுறதுக்கு எந்த முயற்சியையும் பண்ணுனதாத் தெரியலை,'' என்று மேலும் சூடேற்றினாள் மித்ரா.


''இந்த ஊருக்கு எதுவும் பண்ணலைங்கிற பயத்துலதான், தோழர்களுக்கு கோயம்புத்துார் தொகுதியை விபரமா ஒதுக்கிட்டாங்களோ?,''


''இருக்கலாம்; மூணு, நாலு அணி நிக்கிறப்ப, ஓட்டுப் பிரியுறதை வச்சு, ஜெயிச்சுரலாம்னு கணக்குப் போடுறாங்களோ என்னவோ?,''


''இவுங்க கதைய விடு! அவசர அவசரமா அடிக்கல் நாட்டுன தி.மு.க.,காரங்க என்ன பண்றாங்க?,'' என்றாள் சித்ரா.


''அவுங்க என்ன பண்ணுவாங்க? அடுத்ததா 'சீட்' கேக்குற வேலையில இறங்கிருக்காங்க; பைந்தமிழ் பாரி, பொள்ளாச்சி தொகுதிக்கு 'சீட்' கேட்ருக்காராம்,'' என்றாள் மித்ரா.


''எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறாங்களே...இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்கடி...!,'' என்று சிரித்தாள் சித்ரா.


''டாஸ்மாக் பெரிய ஆபீசர் பண்ற அதிரடியில, தனியாருக்குப் போயிட்டு இருந்த வருமானமெல்லாம் இப்ப கவர்மென்ட் கஜானாவுக்குப் போயிட்டு இருக்கு; ஆனா, அவரைத் துாக்குறதுல, விவசாயம் பார்க்குற வி.ஐ.பி.,யோட மருமகன் ரொம்ப தீவிரமா இருக்காராம்,'' என்றாள் மித்ரா.


''புரபசர் போஸ்ட்டிங், மானியம், டிரான்ஸ்பர்ன்னு எல்லாத்துலயும் அவர்தான் 'விஐபி' மாதிரி விளையாடுறாருங்கிறாங்க; அவுங்க மாமாட்ட சொன்னா, 'மாப்ளதான் எனக்கு எல்லாமே; அவரு அப்படித்தான் செய்வாரு; என்ன பெட்டிஷன் போட்டாலும், என்ன நியூஸ் போட்டாலும் என்னைய யாரும் அசைக்க முடியாதுங்கிறாராமே,'' என்றாள் சித்ரா.


''ஆமா...இன்ஸ்பெக்டர்களுக்கு ரியல் எஸ்டேட்காரங்களோட தொடர்பு இருக்கிறதா தகவல் வந்திருக்குன்னு திடீர்னு நம்ம ஐ.ஜி., எச்சரிக்கை விட்ருக்காரே; என்னக்கா விஷயம்?,'' என்றாள் மித்ரா.


''அவர் சொல்றது உண்மைதான...சிட்டியில இருக்கிற இன்ஸ்பெக்டர்கள் மட்டுமென்ன அன்னா ஹசாரே ஆதரவாளர்களா? 15 ஸ்டேஷன்கள்ல எனக்குத் தெரிய ஒரே ஒருத்தர்தான் கை நீட்டாதவர்,'' என்றாள் சித்ரா.


''அதான் நிறைய்யப்பேரை மாத்திட்டாங்களே...!,''

''முக்கியமான தலைகளெல்லாம் தப்பிச்சிருச்சே...பேர்லயே மரியாதையை வச்சிருக்கிற இன்ஸ்பெக்டர், உளவு பாக்குறதா சொல்லி ஊரையே அரிச்சிட்டு இருந்தாரு; அவருக்கு ஏ.சி.,புரமோஷன் கொடுத்து, ஊருக்கு நடுவுல போஸ்ட்டிங் போட்ருக்காங்க; உருப்பட்டாப்புலதான்...! அது சரி, இப்ப இருக்கிற இன்ஸ்பெக்டர்கள்ல 'கலெக்ஷன் கிங்' யார்ன்னு சொல்லவே மாட்டேங்கிறே,''


''வேற யாரு...? சிட்டிக்குள்ளயே பல வருஷமா குப்பை கொட்டுற வாசமான ஆபீசர்தான்; பேர்லயே சர்க்கரை வச்சிருக்கிற அவர், பேசுறதெல்லாம் இனிப்பா இருக்கும்; ஆனா, கலெக்ஷன் விஷயத்துல செம கறார் பார்ட்டி. அவர்தான் இப்போதைக்கு 'டாப்'ல இருக்காரு,'' என்றாள் மித்ரா.


''பா.ம.க.,வுல இருந்து பல விதமான 'அனுபவ'த்தோட ஆளும்கட்சிக்கு வந்தவரு, சிட்டிக்குள்ள ஏகப்பட்ட நில மோசடி வேலை பண்ணிட்டு இருக்காருங்கிறாங்க; சீக்கிரமே அவர் மேல 'கம்பிளைன்ட்' வரும்னு எதிர்பார்க்கலாம்,'' என்று அரசியல் மேட்டருக்கு மாறினாள் சித்ரா.


''நானும் ஒரு அரசியல் மேட்டர் சொல்றேன்; வடவள்ளியில போலியா 'பில்டிங் அப்ரூவல்' கொடுத்த ஆளைக் காப்பாத்துறதுக்கு அங்க இருக்கிற சுந்தர'மான உடன் பிறப்பும், கார்ப்பரேஷன்ல மேற்கால முக்கிய பொறுப்புல இருக்கிற தலைவரோட குடும்பத்தலைவரும் கை கோர்த்திருக்காங்க; ஸ்டேஷனுக்கு மட்டும் 4 லட்ச ரூபா 'செட்டில்' பண்ணிருக்கிறதா தகவல்,'' என்று மித்ரா சொல்லும்போதே, 'கட் பண்ணுடி; கேட் திறந்துட்டாங்க,'' என்று மொபைலைத் துண்டித்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X