சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு மணல் கடத்த முயற்சி லாரி பறிமுதல்; இருவர் கைது

Added : செப் 24, 2010
Advertisement

பந்தலூர் : கேரள மாநிலத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி இரவு, நாடுகாணி சோதனைச் சாவடியில், தேவாலா டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் ரஹீம், மோகன், உன்னி, காவலர்கள் மோகன், தாமோதரன், ஜெயக்குமார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சர்க்கரை லோடு ஏற்றி வருவதாகக் கூறி, அதற்குரிய ஆவணங்களை காட்டி விட்டு, கேரள மாநிலம் நோக்கி லாரி சென்றுள்ளது. சந்தேகத்தின் பேரில், கீழ்நாடுகாணி அண்ணாநகர் பகுதியில் லாரியை நிறுத்தி, தார்ப் பாலினை அகற்றி சோதனையிட்டதில், மணல் இருப்பதும், கேரளா மாநிலம் அரப்பட்டா பகுதிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. கேஎல்.13 ஜே6699 எண் கொண்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சேரம்பாடி இன்ஸ்பெக்டர் தண்டபாணி விசாரித்து, லாரி டிரைவர் கபூர் (24), கிளீனர் அப்துல்பாரி (18) கைது செய்தார்.


சேரம்பாடி வனத்துறை சோதனைச் சாவடியில், 22ம் தேதி இரவு, வனச்சரகர் தேவராஜன் தலைமையில் வனவர் கிருஷ்ணராஜ், வனக்காப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், ஜம்புலிங்கம் மற்றும் வனத்துறையினர், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மணல் ஏற்றி வந்த டி.என்.43 இசட்5995, டி.என்.38 ஏடி 9144, டி.என்.39 ஆர்5733 எண் கொண்ட லாரிகளின் ஓட்டுனர்கள், முரணான தகவல் தெரிவித்ததால், சந்தேகமடைந்த வனத்துறையினர், வாகனங்களை பறிமுதல் செய்து, வன அலுவலர் சதீஷ் உத்தரவின் படி, கிராம நிர்வாக அலுவலர் தனராஜிடம் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக, சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X