அயோத்தியில் கெடுபிடி தொடர்கிறது

Added : செப் 24, 2010 | கருத்துகள் (1)
Advertisement

லக்னோ: அயோத்தி விவகாரத்தில் இன்று வெளியாக இருந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையிலும், மாநிலம் முழுவதும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்றும் தொடர்ந்தன. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை இன்று தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கோர்ட் மற்றும் மாவட்ட அதிகாரி அலுவலகத்தின் வெளியில் இருந்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப் படவில்லை.கோர்ட்டின் எல்லா நுழைவாயில்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதேபோல் அலகாபாத் கோர்ட்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஐகோர்ட் நீதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகளவில் செய்யப்பட்டிருந்தன. சர்ச்சைக்குரிய இடத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேபாள நாட்டின் எல்லை அமைந்த உத்தரகண்ட் பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. மருத்துவமனைகள் மற்றும் அதன் ஊழியர்கள் உஷார் நிலையில் இருந்தனர். அரசு மருத்துவர்கள், மருத்துவமனைகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Dr S Sekar - Chennai,இந்தியா
24-செப்-201006:31:59 IST Report Abuse
Lion Dr S Sekar இது ஒரு தீபாவளி பட்டாசு தான், பாம்புக்கும் கீரிக்கும் சண்டைக்காட்டி விதைக்காட்டி பணம் சம்பாதிக்கும் தொழில் போல் இன்று நம் நாட்டில் ஒரு இடத்தை வைத்துக்கொண்டு இரு கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். சத்தியமாக இவர்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரப்போவது இல்லை . மக்கள்தான் பயித்தியம் பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என்று, முடிவு மேல்முறையீடு? முடிந்தது பிரச்சினை., இது ஒரு ஐம்பது ஆண்டுகள், தற்போது உள்ளவர்கள் செத்தே போய்விடுவார்கள், அடுத்து நம் தலைமுறையினர் இதுதான் நடக்கப்போகிறது. இந்த கூத்தைப் பார்க்க நாம் இருக்கப்போவது இல்லை., மிகப் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து இந்த பிரச்னை படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இன்னும் படம் வெளிவரவில்லை. விரைவில் சப்பென்று போகுப்படும் படம்தான் இது. தீர்ப்பு வந்தவுடன், ஒவ்வொரு மாநில வாரியாக பந்த் நடுத்துவார்கள்,. சில இடங்களில் துப்பாக்கிசூடு, அடுத்து மதிய அரசின் சார்பில் ஒரு பந்த், மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு, இந்த காட்சிகள் எல்லாம் இந்த படத்தில் வரும் சண்டைக்காட்சிகள்,. வில்லன்கள் அரசியல் கட்சிகள், குணசித்திர நடிகர்கள் நீதியரசர்கள். இந்த படத்தை அதிகம் ரசிதுப்பர்க்கப்போவது உலக மக்கள். விரைவில் வெளிவரைருக்கும், ராமர் அல்லா திரைப்படம். இதற்குதான் இந்த ஆர்பாட்டம், இதனால் பாமர மக்களுக்கே திண்டாட்டம். வந்தே மாதரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X