அயோத்தியில் கெடுபிடி தொடர்கிறது| Dinamalar

அயோத்தியில் கெடுபிடி தொடர்கிறது

Added : செப் 24, 2010 | கருத்துகள் (1)

லக்னோ: அயோத்தி விவகாரத்தில் இன்று வெளியாக இருந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையிலும், மாநிலம் முழுவதும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்றும் தொடர்ந்தன. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை இன்று தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கோர்ட் மற்றும் மாவட்ட அதிகாரி அலுவலகத்தின் வெளியில் இருந்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப் படவில்லை.கோர்ட்டின் எல்லா நுழைவாயில்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதேபோல் அலகாபாத் கோர்ட்டிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஐகோர்ட் நீதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகளவில் செய்யப்பட்டிருந்தன. சர்ச்சைக்குரிய இடத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேபாள நாட்டின் எல்லை அமைந்த உத்தரகண்ட் பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. மருத்துவமனைகள் மற்றும் அதன் ஊழியர்கள் உஷார் நிலையில் இருந்தனர். அரசு மருத்துவர்கள், மருத்துவமனைகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X