பலத்த பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின் திருமணம் : மணமகனின் மாஜி தோழி மிரட்டலால் பரபரப்பு

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருவனந்தபுரம்: பிரபல, தமிழ் நடிகை, மீரா ஜாஸ்மின் திருமணம், திருவனந்தபுரத்தில் நேற்று எளிமையாக நடந்தது. மணமகனின், "மாஜி' தோழி மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. "ரன், சண்டக்கோழி' உள்ளிட்ட, பல படங்களில் நடித்தவர், மீரா ஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவருக்கும், வயலின் இசைக் கலைஞர் ஒருவருக்கும், காதல் இருந்ததாக, முதலில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், துபாயில்,
பலத்த பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின் திருமணம் : மணமகனின் மாஜி தோழி மிரட்டலால் பரபரப்பு

திருவனந்தபுரம்: பிரபல, தமிழ் நடிகை, மீரா ஜாஸ்மின் திருமணம், திருவனந்தபுரத்தில் நேற்று எளிமையாக நடந்தது. மணமகனின், "மாஜி' தோழி மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. "ரன், சண்டக்கோழி' உள்ளிட்ட, பல படங்களில் நடித்தவர், மீரா ஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவருக்கும், வயலின் இசைக் கலைஞர் ஒருவருக்கும், காதல் இருந்ததாக, முதலில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், துபாயில், மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றும், கேரளாவைச் சேர்ந்த, அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன், மீராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும், கடந்த 9ல், கொச்சியில், மீரா ஜாஸ்மின் வீட்டில், சார் பதிவாளர் முன்னிலையில், ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்கிடையே, மணமகன் அனில் சார்பில், கேரள ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன், எனக்கு நட்பு இருந்தது. தற்போது, மீராவுடன், எனக்கு திருமணம் நடக்கப் போகும் தகவல் தெரிந்ததால், அந்த பெண்ணும், அவரின் தந்தையும், திருமணத்தை நடத்த விட மாட்டோம் என, மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, எங்களின் திருமணத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.
இதையடுத்து, மீரா அனில் திருமணத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மீராவுக்கும், அனிலுக்கும், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில், நேற்று எளிமையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மலையாள நட்சத்திரங்கள் பலர், திருமணத்துக்கு வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-பிப்-201421:56:51 IST Report Abuse
Lion Drsekar சினிமா போச்சு மாண்டலின் வந்தது டும் டும் டும், மாண்டலின் போச்சு கம்ப்யூட்டர் வந்தது டும் டும் டும், கம்புட்டர் போச்சு ...வந்தது டும் டும் டும் வந்தே மாதரம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
13-பிப்-201420:10:00 IST Report Abuse
Natarajan Ramanathan பாவம் மீரா ஜாஸ்மின்.
Rate this:
Cancel
Vignesh Waran - Madurai,இந்தியா
13-பிப்-201419:54:04 IST Report Abuse
Vignesh Waran happy married life mira...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X