2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : செப் 24, 2010
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில், 28 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். வடக்கு காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் அருகே உள்ள டோரு கிராமத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநில போலீசாரும் அந்த பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர சண்டையில், பயங்கரவாதி ஒருவனை நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. தொடர்ந்து 28 மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில் நேற்று காலை மேலும் ஒரு பயங்கரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X