படகில் கழிந்த இரவு | Dinamalar

படகில் கழிந்த இரவு

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (4)
Advertisement
படகில் கழிந்த இரவு

நவம்பர் 22: காலை 6 மணிக்கு இந்த 5 ஜோடிகளும் எழுந்தனர். நமாஸ் பிரார்த்தனைகளைச் செய்தனர். மும்பை மீது தாக்குதலைத் தொடங்க, காஃபா மற்றும் அபுஹம்ஸாவுடன் கராச்சியை விட்டுக் கிளம்பினார்கள். 30 நிமிட நடை பயணத்துக்குப் பின் ஒரு இடத்தை அடைந்தனர். அங்கு ஜாகியுர் ரகுமான் லக்வீ இருந்தான். தங்கள் தலைவருடன் ஹமீஸ் சையதும் தாங்களும் இந்த வேலையை முடிக்கக் கடுமையாக உழைத்துள்ளதாகவும், அதன் விளைவு வெற்றியாக முடிய வேண்டுமென்றும் வலியுறுத்தினான்.


தங்களுக்குள் மோதல் கூடாது:

இவர்கள் திறமையாகப் பணியாற்றக் கொடுத்த பயிற்சிகளை நினைவுறுத்தித் தங்களுக்குள் கேடு நினைக்க வேண்டாமென்று லக்வீ வலியுறுத்தினான். ஒவ்வொரு பணிக்கும் அவர்களுக்கு எவ்வாறு திறமையான பயிற்சி தரப்பட்டுள்ளதென்று நினைவுபடுத்தினான். இதைப் புரிந்துகொண்டு கடமையாற்ற வேண்டியது அவர்கள் பொறுப்பு என்றும், மும்பை சேர்ந்ததும் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி கூறினான்.

நரிமான் ஹவுஸ், ஓட்டல், ஓபிராய் ஓட்டல் ஜோடிகள் செய்தியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அவர்களிடம் என்ன பேச வேண்டுமென்பதை இந்த சதிகாரர்கள் பின்னர் தெரிவிப்பதாகவும், இந்திய அரசுக்குச் சவால் ஈ-மெயில்கள் அனுப்பப்போவதாகவும் கூறினார்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் சபவுதீன் மற்றும் பஹீம் மும்பையிலிருந்து அனுப்பிய வரைபடங்களை ஜாகியுர் ரகுமான் வழங்கினான். வி.டி.எஸ். மற்றும் மலபார் ஹில்ஸ் படங்களை இஸ்மாயில் வைத்துக் கொண்டான். மும்பை சேர்ந்ததும் இந்தப் படங்களைக் கிழித்தெறிந்து விடவேண்டுமென்றும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


கரை சேர்ந்ததும் கவிழ்க்க முடிவு:

பின்னர் இவர்களுக்காக ஜாகியுர் ரகுமான் பிரார்த்தனை செய்து அல்லாவின் பாதுகாப்பில் அவர்களை விட்டிருப்பதாகவும், அல்லா இவர்களைக் காப்பாற்றுவார் என்றும் கூறினான். மேலும் அவர்களது லட்சியம் முழுமையாக வெற்றியடையவும் அல்லாவை ஜாகியுர் ரகுமான் பிரார்த்தித்தான். இந்துஸ்தானி படகில் இருந்து இறங்கியவுடன் படகைக் கடலில்மூழ்கடிக்க, வால்வை எடுத்துவிடும்படி கூறினான். பின்னர் இஸ்மாயிலைத் தனிமையில் அழைத்துச் சென்று பேசினான்.


படகில் வசதிகள்: காலை சுமார் 7 மணிக்கு இவர்களை அழைத்துச்செல்ல ஒரு மரப்படகு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் இதில் பயணம் செய்த பின்னர், ஒரு பெரிய படகுக்கு இவர்கள் மாற்றப்பட்டனர். அந்தப் பெரிய படகில் ஹகீம் ஸாப் மற்றும் மூவர் இருந்தனர். சிறிய படகு சென்றுவிட்டது. சுமார் 9 மணி (காலை) அளவில் இவர்கள் இன்னும் பெரிய படகில் ஏறினார்கள். அதன் பெயர் அல்ஹுசைனி. ஹகீம் ஸாப் மற்றும் அவனது மூன்று கூட்டாளிகள் இரண்டாவது படகுக்குத் திரும்பிவிட்டார்கள். முதலில் அல்ஹுசைனி படகில் இருந்தனர். அவர்களில் மூவர் 1) முர்ஷாத் - தேடப்படும் குற்றவாளி 16, 2) ஆகுப் - தேடப்படும் குற்றவாளி 17 மற்றும் 3) உஸ்மான் - தேடப்படும் குற்றவாளி 19. இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தோய்பா உறுப்பினர்கள்.


ஆயுதங்களும் ஆகாரமும்:

வெடிகுண்டுகள், ஏகே47 அடங்கிய கோணிப்பையை (கராச்சியில் பேக் செய்யப்பட்டது) முர்ஷாத் இவர்களிடம் கொடுத்தான். மேலும் காற்றடைக்க உதவும் பம்ப் மற்றும் அதிவேக ரப்பர் படகு, உயிர் தப்புவிக்கும் ஜாக்கெட்டுகள், கம்பளி, அரிசி, மாவு, எண்ணெய், ஊறுகாய், பால்பவுடர், தீப்பெட்டி, டிடர்ஜென்ட் பவுடர், கை துடைக்கும் காகிதம், பாட்டில்கள், மலைத்தேன், குளிர்பானங்கள், பற்பசை, ஸ்ப்ரே பெயின்ட், துண்டு, ஷேவிங் செட், டூத்பிரஷ் மற்றும் தேவையான பொருட்களையும் கொடுத்தான். அன்றிரவை அவர்கள் அல்-ஹுசைனி படகில் கழித்தார்கள்.


(இவ்வாறு கசாப் வாக்குமூலம் அளித்து வருகையில், நீதிமன்ற வேலைநேரம் முடிந்துவிட்டதால், கசாப் மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டான். அடுத்தநாள், 2009 பிப்ரவரி 21ந் தேதி காலை 10.40 மணிக்குக் கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டான். காவல் சமயத்தில் அவனை யாரும் ஏதும் நிர்ப்பந்திக்கவில்லை என்று உறுதியும் திருப்தியும் கொண்டு, அவன் தன்னிச்சையாகவே தனது வாக்குமூலத்தைத் தருகிறான் என்ற உறுதியுடன், மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தை மீண்டும் பதிவு செய்யத் தொடங்கினார்)


முதல்நாள் விட்ட இடத்திலிருந்து கசாப் தனது வாக்குமூலத்தைத் தொடங்கினான்.வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sushil - Toronto,கனடா
15-பிப்-201403:01:59 IST Report Abuse
Sushil these boys could have got all money from those fellows in Pakistan and could have stated in the Bombay hotels and enjoyed their lives. But the uneducated kids destroyed the life of others and finally destroyed themselves. Foolish fellows. their religion is the cause of all these things.
Rate this:
Share this comment
Cancel
S.Harris - Sivakasi,இந்தியா
14-பிப்-201418:29:41 IST Report Abuse
S.Harris இந்த வாக்குமுலம் கொடுத்து இருக்குறத பாத்தா பாகிஸ்தான்ல போலீஸ் கிடையாது..............பாதுகாப்பு கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது போல இருக்குதே.........நாம ஊருல எங்க போறன்னு கேட்ட கோவிலுக்கு போறேன்.....கடைக்கு போறேன்னு சொல்லுவாங்க.............ஆனா அங்க பாகிஸ்தான்ல குண்டு வைக்க போறேன்...........ஆயுத பயிற்சிக்கு போறேன்னு சொல்லுவாங்க போல இருக்குதே.............என்னமோ போங்க பாகிஸ்தான்கு வடிவேல் டயலாக் தன கரெக்டு (ஆஹா.... இந்த ஊருல பூசாரி மோதகொண்டும் காவாலி பயலால இருக்கான்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X