காங்கிரசுடன் மீண்டும் கூட்டணியா? ஸ்டாலின் கொந்தளிப்பு; பிரசாரம் செய்ய மறுப்பு

Added : பிப் 14, 2014 | கருத்துகள் (90)
Share
Advertisement
தமிழகத்தில், புதிய கூட்டணியை ஏற்படுத்த, காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ள காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தி.மு.க., தரப்பிலும், கனிமொழி உட்பட, சிலர், காங்., கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கட்சிகள், ஓரணியில் வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் நேற்று, இந்த தகவலை
Stalin,alliance,congress, காங்கிரஸ், கூட்டணி,ஸ்டாலின், கோபம்

தமிழகத்தில், புதிய கூட்டணியை ஏற்படுத்த, காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ள காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தி.மு.க., தரப்பிலும், கனிமொழி உட்பட, சிலர், காங்., கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கட்சிகள், ஓரணியில் வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் நேற்று, இந்த தகவலை மறுத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ''தி.மு.க., தலைமையில், தற்போதுள்ள கூட்டணியில், எந்த மாற்றமும் இல்லை,'' என, தெரிவித்துள்ளார்.



கூட்டணியில் சேர்த்தால்:

கருணாநிதியின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காங்., கூட்டணிக்கு, ஸ்டாலின் காட்டிய கடும் எதிர்ப்பே, காரணம் என, தெரியவந்துள்ளது. 'காங்கிரசை மீண்டும் கூட்டணி யில் சேர்த்தால், பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்' என, ஸ்டாலின் எதிர்ப்பு கொடி பிடித்ததால் தான், கருணாநிதி இம்முடிவுக்கு வந்துள்ளார் என, அறிவாலய வட்டாரம் சொல்கிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது: தி.மு.க.,வை மீண்டும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொண்டு வர, காங்., மேலிடம் விரும்புகிறது. அதற்காகவே, மத்திய அமைச்சர், குலாம் நபி ஆசாத், சென்னை வந்து, கருணாநிதியை சந்தித்து பேசினார். கனிமொழி தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அப்போது பிடி கொடுக்காத கருணாநிதி, '2ஜி' விவகாரத்தில் நடந்த உரையாடல் தொடர்பாக, சமீபத்தில், 'சிடி' வெளியானதும், அதிர்ந்து போய் விட்டார். உடனடியாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவனை அனுப்பி, ராகுலை சந்திக்க செய்தார். காங்கிரசுடன் மீண்டும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து, இருவரும் விவாதித்துள்ளனர்.




ஏற்கவில்லை:

ராகுலை சந்திக்கச் செல்வதற்கு முன், அந்த தகவலை, ஸ்டாலினிடம், திருமாவளவன் சொல்லியுள்ளார். அப்போதே, இந்த முயற்சிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி தொடர்பாக, திருமாவளவன் கூறிய விளக்கங்களையும், அவர் ஏற்கவில்லை. மேலும், 'தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என, தீர்மானம் நிறைவேற்றி, அதை கட்சியினர் மனதிலும் பதிய வைத்த பின், மீண்டும் காங்., பின்னால் போனால், யாரும் மதிக்க மாட்டார்கள். தி.மு.க., மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும். எந்த வகையிலும், கொள்கையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை' என்றும், ஸ்டாலின் தெளிவுபடத் தெரிவித்து உள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், டில்லியில், காங்., தலைவர் சோனியாவை, கனிமொழி நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவல் அறிந்ததும், கடும் கோபம் அடைந்த ஸ்டாலின், 'காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால், நான் பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்' என, கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.




கடும் குரலில்:

'காங்கிரஸ் எந்த நல்ல காரியத்தையும், தமிழகத்திற்கு செய்யவில்லை; எனவே அதை ஆதரித்து என்னால் பேச முடியாது; வேறு யாரையாவது வைத்து பிரசாரம் செய்து கொள்ளுங்கள்' என, முக்கிய நிர்வாகிகளிடம், அவர் கடும் குரலில் பேசிய தகவலும், கருணாநிதியின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அதன்பிறகே, 'காங்கிரசுடன் கூட்டணி என, வரும் செய்திகளில் உண்மை இல்லை' என்ற அறிவிப்பை, கருணாநிதி வெளியிட்டுள்ளார். இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
14-பிப்-201423:36:08 IST Report Abuse
GUNAVENDHAN ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டு வேண்டாம் என்று சொல்வதற்கு பெரிதாக எந்த ஒரு காரணமும் இல்லை , இப்போதைக்கு ஸ்டாலினுக்கு பாராளுமன்ற தேர்தலில் திமுகவினர் அதிகம் வெற்றியடையவேண்டும் என்கிற எண்ணம் கிடையாது, பாராளுமன்றத்தில் திமுக எவ்வளவு செல்வாக்கு பெற்றாலும் அதனால் கனிமொழி தான் பயனடைவார் என்பதாலும், கருணாநிதி டில்லியில் கனிமொழியைத்தான் முன்னிருத்துவார் என்பதாலும் தான் ஸ்டாலின் இந்த முடிவுக்கே வந்தார் என்று கருதுகிறேன். கனிமொழி காங்கிரசுடன் கூட்டு வைத்திட துடிப்பது ஏன் என்பது எல்லோருமே அறிந்தது தான் , காங்கிரசுடன் கூட்டு வைத்தல் 2 ஜி சிக்கலில் இருந்து தப்பித்து விடலாம் என்று கருதுவதும் பேதைமை , அவர் இப்போதைக்கு இன்னும் 3 மாதங்களுக்கு தான் காங்கிரஸ் தயவால் தப்பிக்க முடியுமே ஒழிய , நிரந்தரமாக் தப்பிக்க வழிகள் இல்லை, எல்லா வழிகளும் அடைபட்டு விட்டது என்பது தான் உண்மை . அடுத்து பாஜக ஆட்சி வந்தாலும் , அல்லது மூன்றாவது அணியினரின் ஆட்சி வந்தாலும் யாரும் 2 ஜி வழக்கை கிடப்பில் போடப்போவதில்லை . காங்கிரஸ் அரசு சென்ற 2 , 3 வருடங்களில் 2 ஜி வழக்கில் என்ன என்ன குளறுபடிகளை செய்து வைத்துள்ளதோ அதையெல்லாம் தோண்டி துருவி எடுத்து வழக்கை இன்னும் அதிரடியாக நடத்தபோகிறது . எனவே காங்கிரசுடன் கூட்டு வைப்பதாலேயே முழுமையாக தப்பித்துவிட முடியாது . அழகிரியின் பேச்சு கருணாநிதியிடம் எடுபடாதபடி செய்தாகி விட்டது , அடுத்ததாக கனிமொழியை வளர விடக்கூடாது என்ற முடிவில் தான் ஸ்டாலின் உள்ளார் . அழகிரிக்கு செக் வைத்தது போல , சமயம் கிடைக்கும்போது கனிமொழிக்கும் செக் வைத்துவிட்டால் அதன் பிறகு தன்னுடைய குடும்பத்தில் வேறு யாரும் தன்னை மீறி கட்சியில் ஆதிக்கம் செலுத்த வர முடியாது என்று எண்ணுகிறார் ஸ்டாலின் . ஆக அண்ணாவால் கடுமையான உழைப்பால், எண்ணற்ற தொண்டர்களின் வியர்வையால், பலரின் உயிர் தியாகத்தால் வளர்ந்த திமுக வில் இப்போது எடுக்கப்படும் எந்த ஒரு அரசியல் முடிவும் கருணாநிதி குடும்பத்தினரில் யார் கை எப்போது ஓங்கி உள்ளதோ அவர்கள் வற்புறுத்தல் படித்தான் எடுக்கப்படுகின்றது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது, இப்படியொரு அவல நிலைமைக்கு கட்சியை தள்ளிவிட்டாரே கருணாநிதி என்பதை எண்ணும் போது வேதனை அடையாமல் இருக்க முடியாது . பாவம் திமுகவில் உள்ள , எந்த பலனையும் அடையாத தொண்டர்கள் , என்றைக்கு தான் மயக்கத்தில் இருந்து அவர்கள் தெளியப்போகின்றார்களோ .
Rate this:
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
14-பிப்-201421:17:40 IST Report Abuse
Ootai Vaayan பேசாமல் தி.மு.க கட்சி காங்கிரஸ் கட்சியுடன் முழுமையாக கலந்துவிட்டால் என்ன?. அண்ணன் தம்பி சண்டை முடியும். 2G பேய் இனி துரத்தாது. லவுட்டின பணத்தை வைத்துக்கொண்டு இன்னும் 1000 தலைமுறை வாழலாம். சுபம்.
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
14-பிப்-201421:13:44 IST Report Abuse
Radj, Delhi ஸ்டாலினின் முடிவு நல்ல முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X