பானுரேகாவின் உன்னத லட்சியங்கள்...

Added : பிப் 14, 2014 | கருத்துகள் (12)
Share
Advertisement
பானுரேகாஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையம் கிராமத்தின் விடிவெள்ளிவிவசாயம் செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்தவர், கடுமையான உழைப்பு மற்றும் படிப்பின் காரணமாக அமெரிக்காவின் உச்சம் தொட்டவர்.தாய் தந்தையர் மீதான பற்றின் காரணமாகவும்,தாய்நாட்டின் மீதான பாசம் காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் தற்போது சொந்தமாக தொழில் துவங்கும் ஆலோசனையில் உள்ளார்.தொழில்
 பானுரேகாவின் உன்னத லட்சியங்கள்...

பானுரேகா
ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையம் கிராமத்தின் விடிவெள்ளி
விவசாயம் செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்தவர், கடுமையான உழைப்பு மற்றும் படிப்பின் காரணமாக அமெரிக்காவின் உச்சம் தொட்டவர்.
தாய் தந்தையர் மீதான பற்றின் காரணமாகவும்,தாய்நாட்டின் மீதான பாசம் காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் தற்போது சொந்தமாக தொழில் துவங்கும் ஆலோசனையில் உள்ளார்.
தொழில் துவங்குவது பணம் சம்பாதிப்பதற்குதான், ஆனால் அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் சொன்ன விதத்தில்தான் மிகவும் உயர்ந்து போனார்.
வெளிநாடுகளில் வயதில் பெரியவர்களை கொண்டாடுகிறார்கள் அவர்களை வாழ்க்கையின் வழிகாட்டுதல்களாக மதிக்கிறார்கள், நாட்டின் மூத்த குடிமக்களாக போற்றுகிறார்கள். இது போலவே பெற்றோர்களாலும்,பொருளாதாரத்தாலும் ஆதரிப்பார் இல்லாதவர்களையும் அங்கே இதயத்தாலும்,இருகரத்தாலும் அரவணைக்கிறார்கள்.
இங்கே இந்த விஷயம் நேர்மாறாக இருக்கிறது,இதில் நான் யாரையும் குறை சொல்லப்போவது இல்லை நான் ஒரு ஆசிரமம் அமைக்கப்போகிறேன். அதை மாதிரி ஆஸ்ரமமாக மாற்றிக்காட்டுவேன். அந்த ஆஸ்ரமம் அமைக்கவும்,அதை வழிநடத்திச்செல்லவும் தேவையான பணம் சம்பாதிக்கவே தொழில் துவங்க இருக்கிறேன்.
மேலும் பசுமை நிறைந்த இந்தியாவை பார்க்க வேண்டும்,நமது விவசாயிகள் கார்ப்ரேட் நிறுவனத்தார் போல மதிக்கப்பட வேண்டும்,அதற்கேற்ற சம்பாதிக்க வேண்டும்,எங்கு பார்த்தாலும் செடிகளும்,கொடிகளும்,மரங்களுமாக இயற்கை பூத்து குலுங்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
இப்படி சின்ன வயதிலேயே எதை நோக்கி போகவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ள பானுரேகாவின் வாழ்க்கையில் புகைப்படம் நுழைந்தது அவரது பள்ளிப்பருவத்தில்தான்.ஒவியராக,தீவிர புத்தக வாசிப்பாளராக இருந்தாலும் மனதில் தனி இடம் பிடித்தது புகைப்படக்கலையே.
பள்ளிப்பருவத்தில் புகைப்படங்களை ரசிக்க ஆரம்பித்தவர் கல்லுõரி காலகட்டத்தில் தோழிகளின் கேமிரா உதவியோடு படம் எடுக்க துவங்கினார்,பின்னர் அமெரிக்காவில் இருக்கும் போது சொந்தமாக டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமிரா வாங்கிய பிறகு புகைப்படக்கலையில் சிறகு விரித்து பறக்கத்துவங்கினார்.தான் எடுக்கும் படங்கள் படங்கள் தனக்கு மட்டும் சந்தோஷத்தை தராமல் அதைப்பார்ப்பவர்கள் மனதிலும் சந்தோஷத்தை வரவழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்,நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.நட்பை மதிப்பவர்.ஒரு வார்த்தையில் சொல்வதானால் சந்தோஷ மனுஷி.
இணையதளம்,புத்தகங்கள்,நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்ட புகைப்படங்களை முகநுõலில் போட்ட பிறகு இவருக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு நிறைய பாராட்டுக்கள்.
ஆனாலும் இந்த புகைப்படக்கலையை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,காடுகளுக்குள் சென்று கானுயிர்களை படம் எடுத்து அந்த திரில்லை அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் புகைப்பட கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இப்போதும் கற்றுக்கொண்டு வருகிறார்.அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்பட பிரியன் மெர்வின் ஆண்டோ கன்னியாகுமரியில் நடத்திய புகைப்பட கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அப்போது இவருடன் நடத்திய கலந்துரையாடலின் போதுதான் இவரது புகைப்பட ஆர்வம் வெளிப்பட்டது அதன் தொடர்ச்சியாக அவரது படங்களும்,அவரைப்பற்றிய விவரங்களும் இங்கே இடம் பெற்றுள்ளது.
இவரது படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம்.
பானுரேகாவின் மேலும் பல படங்கள் பற்றி தெரிந்து கொள்ள அவரது பெயரில் உள்ள முகநூலின் தனிப்பகுதிக்கு செல்லவும்.


https://www.facebook.com/banu.dsm

https://www.facebook.com/pages/AB-Photography/794174007265771?ref=hl

mail id : tr.banureka@gmail.com

- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
18-பிப்-201411:39:39 IST Report Abuse
Anantharaman சகோதரி பானு அவர்களின் புகைப்படங்களின் நேர்த்தி போலவே அவரது எண்ணங்களும் நேர்த்தியானவை. அவரது எண்ணங்கள் ஈடேற இறைவன் துணை நிற்பார்.
Rate this:
Cancel
Malar Kannan - tirupur,இந்தியா
15-பிப்-201412:08:26 IST Report Abuse
Malar Kannan சகோதரி பானுரேகா முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
15-பிப்-201411:50:47 IST Report Abuse
A. Sivakumar. விவசாயத்திலேயே முதலீடு செய்யுங்க தோழர். நியாயமான வருமானமும் கிடைக்கும், முதலீடும் பத்திரமா இருக்கும். அதில் கிடைக்கும் விளைச்சலே உங்க ஆசிரம நோக்கங்களுக்கும் ரொம்பப் பயன்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X