தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவார்: கருணாநிதி நம்பிக்கை

Added : பிப் 14, 2014 | கருத்துகள் (36)
Share
Advertisement
"தி.மு.க., கூட்டணிக்கு, யாராக இருந்தாலும் ஆதரவு தருவர். பிடிகொடுக்காமல் இருக்கும், 'ஸ்டன்ட்' நடிகர் விஜயகாந்த், இதில் விதிவிலக்கு அல்ல,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், இன்று துவங்குகிறது. மாநாட்டு திடலை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று காலை பார்வையிட்டார். பின், அவருக்காக கட்டப்பட்ட, குடிலில் பத்திரிகையாளர் களை
விஜயகாந்த், ஆதரவு தருவார், கருணாநிதி நம்பிக்கை, Vijayakanth, DMK, Karunanidhi

"தி.மு.க., கூட்டணிக்கு, யாராக இருந்தாலும் ஆதரவு தருவர். பிடிகொடுக்காமல் இருக்கும், 'ஸ்டன்ட்' நடிகர் விஜயகாந்த், இதில் விதிவிலக்கு அல்ல,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், இன்று துவங்குகிறது. மாநாட்டு திடலை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று காலை பார்வையிட்டார். பின், அவருக்காக கட்டப்பட்ட, குடிலில் பத்திரிகையாளர் களை சந்தித்தார்.

அவர் அளித்த பேட்டி:
திருச்சி மாநாட்டை, லோக்சபா தேர்தல் வெற்றிக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா?
லோக்சபா தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும், ஆரம்ப அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

காங்., கூட்டணியிலிருந்து,நீங்கள் வெளியே வந்த பின், பரூக் அப்துல்லா போன்றவர்கள், உங்களை சந்தித்துப் பேசிஉள்ளனர். காங்கிரசுடன் மீண்டும் இணைய, தி.மு.க.,விற்கு தயக்கம் உள்ளதா?
பரூக் அப்துல்லா மற்றும் குலாம்நபி ஆசாத், என் நெருங்கிய நண்பர்கள். அதனால், தமிழகத்திற்கு வந்த போது, என்னை சந்தித்தனர். என்னை சந்தித்த, காங்., தலைவர்களோ அல்லது வடமாநில தலைவர்களோ, என்னிடம், தேர்தல் கூட்டணி பற்றி விவாதிக்கவில்லை.

கனிமொழி, சோனியாவை சந்தித்தாரே?
கனிமொழிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதை பத்திரிகைகளில் பார்த்த சோனியா, கனிமொழியின் உடல்நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். ராஜ்யசபாவுக்குச் சென்ற கனிமொழி, சோனியாவை சந்தித்தார்; அரசியல் பேசவில்லை.

'2ஜி' விசாரணையை கையில் எடுத்து, தி.மு.க.,வை காங்கிரஸ் மிரட்டுகிறதா?
செய்திகளைப் படித்து விட்டு, பொதுமக்கள் அப்படி இருக்குமோ என, கருதுகின்றனர். அதில்,
அடிப்படை உண்மை என்ன என்பது எனக்குத் தெரியாது.

மாநாட்டுக்கு பெரும் பொருட்செலவில், பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளீர்கள். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'தி.மு.க.,வின் நிதி நிலை மோசமாக உள்ளது' என்று கூறினீர்கள். தற்போது, நிதி நிலை சரியாகி விட்டதா?

நிதி நிலைமை பெருகி வருகிறது. இருந்தாலும், முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு சரியாகவில்லை.

பாரதிய ஜனதா தான், அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும், என, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தலுக்கு பின் கூட்டணி மாறுமா?
மக்களின் எண்ண மாறுதல்கள் அடிப்படையில், அணிகள் மாறுவதும், அதன் காரணமாக ஆட்சி மாறுவதும், நடைபெறுகின்றன என்பதை, மறுப்பதற்கு இல்லை. திட்டவட்டமாக எந்த ஆட்சி அமையும் என்பதை, நான் சொல்ல முடியாது; சொல்லவும் விரும்பவில்லை.

'2ஜி' பற்றிய ஒரு குற்றச்சாட்டு, உங்கள் மீது இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில், அதை எப்படி முறியடிக்கப் போகிறீர்கள்?
'2ஜி' குற்றச்சாட்டு, ராஜா மீதோ அல்லது வேறு யார் மீதோ கூறப்பட்டிருந்தாலும், அப்போது, அது பூதாகரமாக பத்திரிகைகளில், வெளியிடப்பட்டது. வெடித்த பலூனைப் போல, இப்போது சுருங்கி கேள்விக் குறியாகியுள்ளது.

எந்த கட்சியாக இருந்தாலும், பெரிய கட்சியான, தி.மு.க., உடன் கூட்டணி சேர விரும்புவரே? ஆனால், விஜயகாந்த் பிடிகொடுக்காமலேயே உள்ளாரே?

விஜயகாந்த், நல்ல, 'ஸ்டன்ட்' நடிகர். அவர் சினிமாவில், எதிரிகளுக்கு பிடிகொடுக்காமல் எப்படி நடிப்பாரோ, அதைப்போல, இப்போதும் பிடிகொடுக்காமல் இருக்கிறார். அவரும், அவரது கட்சியினரும், தி.மு.க., கூட்டணியுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை நான், இரண்டொரு முறை குறிப்பிட்டு உள்ளேன். தமிழக மக்களை இன உணர்வோடும், ஒற்றுமையோடும் வாழவைக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தருவர் என்று நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு,
விஜயகாந்தும் விதிவிலக்கு அல்ல.

கட்சியில், தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்படுவரா?
மன்னிக்கக் கூடிய அளவுக்கு நடந்து கொண்டால், மன்னிக்கப்படுவர்.

மூன்றாவது அணியில் உள்ள தலைவர்கள் பலர், பிரதமராக ஆசைப்படுகின்றனர். உங்களுக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளதா?
என் உயரம், எனக்கு தெரியும்.

மாநாட்டு முடிவில், 40 தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவரா?
சிறிது நேரம் அமைதியாக இருந்த கருணாநிதி, சிரித்துக் கொண்டே, 'இதுதான் பதில்' (மவுனம்) என்றார்.

தி.மு.க.,- - தே.மு.தி.க., - காங்கிரஸ் மெகா கூட்டணி அமையாது என, நேற்று சொன்னீர்கள். தற்போதைய நிலை என்ன? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

வாய்ப்பு, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் இருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி பேட்டி
அளித்தார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurusamy - Ilayarasanendal,இந்தியா
18-பிப்-201407:21:09 IST Report Abuse
Gurusamy கலைஞர் அவர்களே, தன்னை 'பெருந்தலைவர்' என நினைத்துகொண்டிருக்கும் 'கரும்' தலைவரை நீங்கள் ' வெறும்' தலைவர் ஆக்கி விடுவீர்கள் என்பதை 'பிரேமா' மணாளன் அறியமாட்டார். பாவம் அவர். அவரிடம் கூட்டணி வைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. பேசாமல் நீங்கள் முன்பு இடித்து தூள் தூள் ஆக்கிய கல்யாண மண்டபத்தை தேர்தலுக்கு முன்பு மறுபடியும் கட்டிகொடுத்து, அதற்கு 'சுதீஷ்' திருமண மண்டபம் என்று பெயர் வைத்து விடுங்கள். காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் அதை மறுபடியும் இடித்து விடலாம். உங்களுக்கு தெரியாத விஷயமா? என்ன? பாவம் கேப்டன். சிந்திக்க தெரியாத ஒரே அரசியல்வாதி. நல்லவேளை, பண்ருட்டியார் ஒதுங்கி விட்டார். இல்லையேல் அவர் இப்போது கீழ்பாக்கத்தில் தான் இருந்திருப்பார்.
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
15-பிப்-201407:24:07 IST Report Abuse
தங்கை ராஜா வெளிப்படையாகத்தான் அழைப்பு, வீரம் காட்டினால் காட்டியவருக்குத்தான் ஆப்பு........கலைஞரின் பொறுமைக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு.
Rate this:
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
15-பிப்-201406:42:27 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் தி.மு.க. என்ற கட்சிக்கு கொள்கை, சுய மரியாதை என்றெல்லாம் என்றுமே இருந்ததில்லை.....அப்படி ஒன்று இருந்திருந்தால் இப்படி ஒரு ஸ்டான்ட் நடிகர் பின்னால் அலைய வேண்டிய அவசியம் என்ன?....பெருவாரியான மக்கள் ஆதரவு இல்லை என்பதையே இந்த அலைச்சல் காட்டுகிறது....தமிழ நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால் இந்த பிச்சை எடுக்கும் கீழ் நிலை வந்திருக்காது.....கடந்த மாநில தேர்தலில் இதே விஜயகாந்தை (வடிவேலுவை வைத்து) எந்த அளவுக்கு கீழே இறங்கி பிரச்சாரம் செய்தார்கள்.......கஷ்டம்டா சாமி...
Rate this:
red - brisbane,ஆஸ்திரேலியா
15-பிப்-201406:54:02 IST Report Abuse
redஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. அம்மா சோனியாவ திட்டாத திட்டா? கூட்டணி வைக்கல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X