தி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்?

Added : பிப் 14, 2014 | கருத்துகள் (24)
Share
Advertisement
தி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்?

'தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம்' என, சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்கு செல்லும் முன், சென்னையில், நேற்று முன்தினம், பேட்டி அளித்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, அப்படிப்பட்ட ஒரு கூட்டணி அமையாது என, தெரிவித்தார்.

நேற்று, திருச்சியில் பேட்டி அளித்த போது, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை, குறிப்பால் உணர்த்தும் வகையில், 'கூடா நட்பு கூடாது' என, தெரிவித்தார். அதே நேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, தே.மு.தி.க.,வுக்கு மட்டும், அழைப்பு விடுத்து வருகிறார்.இன்றும், நாளையும், திருச்சியில் நடைபெற உள்ள, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டில், சேது சமுத்திர திட்டம், தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர்கள் பிரச்னை, கச்சத்தீவு, காவிரி, அரிசிக்கு சேவை வரி, மாநில சுயாட்சி, நதிநீர் இணைப்பு உட்பட, சில பிரச்னைகளில், மத்திய அரசின் பாரபட்சமான செயல்பாடுகளைகண்டித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை என்பது, மீண்டும் உறுதிப்படுத்தப்பட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், லோக்சபா தேர்தல் வருவதால், அனைத்து கட்சியினரும், பொதுமக்களும், தி.மு.க.,வை திரும்பி பார்க்கும் வகையில், மாநாட்டு தீர்மானங்கள் அமையும் என்றும், தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் உறுதியாக இருப்பதாலும், லோக்சபா தேர்தலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, பிரசாரம் செய்ய வேண்டியது நேரிடும் என்பதாலும், அதற்கேற்ற வகையில், தீர்மானங்கள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201416:31:24 IST Report Abuse
K.Sugavanam புள்ளை பூச்சி வரலையா????
Rate this:
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
15-பிப்-201413:32:39 IST Report Abuse
Tamilar Neethi அறுவடை முடிந்து போனது. கூட்டணி மூலம் அதிக லாபம் பார்த்துவிட்டார்கள் . இனி எடுத்ததை காத்திட மதில் மேல் அமர்ந்து தாவுவது நல்லது . இவர் என்ன கெஜ்ரியா... மக்கள் நல சட்டம் வரவேண்டும் என்று பதவி விலகிட ..இல்லை குரல் கொடுக்க .. மகளுக்காக கட்சி நடுத்துபவர்
Rate this:
Cancel
Raj kumar - mashad,ஈரான்
15-பிப்-201412:37:32 IST Report Abuse
Raj kumar மக்களின் பணம் வீணாக போகின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X