நான் சொல்வதை கேட்காவிட்டால் கூட்டணிக்கு 'சீட்' : கோஷ்டி தலைவர்களிடம் கருணாநிதி கண்டிப்பு

Added : பிப் 16, 2014 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்றது, காங்கிரஸ் கட்சி. அதேபோல், தி.மு.க., -- அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் இருந்தாலும், தேர்தல் என, வந்து விட்டால், கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவர்.இந்நிலையில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, திருச்சியில் நேற்று துவங்கியது. இதற்காக, திருச்சிக்கு வந்த கருணாநிதி, ஏற்கனவே திட்டமிட்டபடி, மாநாட்டு நிகழ்ச்சி, அதற்கான வி.ஐ.பி.,க்கள்,
நான் சொல்வதை கேட்காவிட்டால் கூட்டணிக்கு 'சீட்' : கோஷ்டி தலைவர்களிடம் கருணாநிதி கண்டிப்பு

கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்றது, காங்கிரஸ் கட்சி. அதேபோல், தி.மு.க., -- அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் இருந்தாலும், தேர்தல் என, வந்து விட்டால், கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவர்.

இந்நிலையில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, திருச்சியில் நேற்று துவங்கியது. இதற்காக, திருச்சிக்கு வந்த கருணாநிதி, ஏற்கனவே திட்டமிட்டபடி, மாநாட்டு நிகழ்ச்சி, அதற்கான வி.ஐ.பி.,க்கள், கூட்டணி கட்சித் தலைவர் வருகை போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.தற்போது, தி.மு.க.,வில், ஒருபுறம் அழகிரி, ஸ்டாலின் கோஷ்டி பிரச்னை; மறுபுறம் பெரும்பாலான மாவட்டங்களில், உள்ளூர் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது.
இதனால், கட்சிப் பணியை பார்ப்பதை விட, கோஷ்டி பிரச்னையைத் தீர்ப்பதிலேயே, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இதையடுத்து, கோஷ்டி பிரச்னை குறித்த பஞ்சாயத்தில், அவர் ஈடுபட்டு வருகிறார். இரண்டு நாள் மாநாடு என்றாலும், பகலில் பஞ்சாயத்திலும், மற்ற நேரத்தில், மாநாட்டிலும் கருணாநிதி பங்கேற்கிறார்.

அதில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், நான்கு முறை, எம்.பி., யாகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் இருந்த பழனிமாணிக்கத்துக்கு, இம்முறை திருச்சி தொகுதியை கொடுத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, தனக்கு தஞ்சாவூர் தொகுதியைத் தர வேண்டும் என, அடம் பிடிக்கிறார்.அதேபோல, திருச்சியில், மாவட்டச் செயலர் நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், ராஜ்யசபா எம்.பி., சிவா ஆகியோருக்குள் உள்ள பிரச்னை, நெல்லையில் மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இடையேயான பிரச்னை, ஈரோட்டில் மாவட்டச் செயலர் ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அழகிரி கோஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோஷ்டி சண்டையால் அலுத்துப்போன கருணாநிதி, 'அழகிரி, ஸ்டாலின் பிரச்னையை நானும், அன்பழகனும், தீர்த்துக் கொள்கிறோம். அதை நீங்கள் பெரிது படுத்துவது, பேட்டி கொடுப்பது, உருவ பொம்மை எரிப்பது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உள்ளூர் கோஷ்டி பூசலால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லது கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. கோஷ்டி பூசலை மறந்து ஒத்துழைக்காவிட்டால், உங்கள் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு கொடுத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இதனால், லோக்சபா சீட் பெறுவதற்காக, சண்டைக் கோழியாக இருந்தவர்கள், தங்களுக்குள் சமாதானக் கொடி பிடிக்கத் துவங்கி உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennai - Ragu - thombe,இலங்கை
16-பிப்-201412:04:19 IST Report Abuse
Chennai  - Ragu இப்பவே தலைல கை வச்சிட்டா எப்படி ... இன்னும் தேர்தல் முடிந்து துண்டு போட வேண்டி எல்லாம் இருக்கு....
Rate this:
Cancel
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
16-பிப்-201412:04:04 IST Report Abuse
B Sivanesan 90 வயதிலும் இது போன்று செயல் பட முடிவது மிகவும் ஆச்சரியமானது. இன்றைக்கும் தமிழக அரசியலில் எதிர்கட்சியாக திமுகா தன கருத்துக்களை அது எவ்வளவு விமர்சனம் வந்தாலும் சொல்லிவிடுகிறது. பாமாகாவும் ஓரளவுக்கு இதை செய்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம், இவர்கள் எழுப்பும் பிரசினயைத்தான் பேசுகிறார்களே தவிர, அவர்களாக ஒரு விசயங்களை எடுத்து விவாதங்களை ஆரம்பிப்பதில்லை.
Rate this:
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
16-பிப்-201410:54:56 IST Report Abuse
Narayan Arunachalam "இதுவும் ஒரு ஊஹ செய்தியே" தி மு க அல்லக்கைகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X