ஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அமைதி!| Alagiri greets his supporters | Dinamalar

ஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அமைதி!

Added : பிப் 17, 2014 | கருத்துகள் (18)
சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தால், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அதனால், திருச்சியில், நேற்றும், நேற்று முன் தினமும் நடந்த, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டிற்கு, அழகிரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும்அழைப்பிதழ் எதுவும்
ஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அமைதி!

சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தால், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அதனால், திருச்சியில், நேற்றும், நேற்று முன் தினமும் நடந்த, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டிற்கு, அழகிரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும்அழைப்பிதழ் எதுவும் அனுப்பப்படவில்லை.

திருச்சியில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, நேற்றும், நேற்று முன் தினமும் ஆரவாரமாக நடந்து, அதில், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணி தலைவர்கள் எல்லாம், ஸ்டாலின் புகழ் பாடிக்கொண்டிருக்க, மதுரையில், அவரது அண்ணனும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, தென் மண்டல அமைப்புச் செயலருமான, அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், தொலைக்காட்சி யில், தி.மு.க., மாநாட்டு நிகழ்ச்சிகளை அமைதியாக கண்டு களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


மன வேதனை:


என்னதான், தங்களை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தாலும், அழகிரியும், அவரின் குடும்பத்தினரும், முதல் முறையாக, தி.மு.க., மாநாட்டில் பங்கேற்காதது, அவரின் ஆதரவாளர்களிடயே, மன வேதனையைஏற்படுத்தியுள்ளது. அழைப்பிதழ் வராததால், திருச்சி மாநாட்டிற்கு, அழகிரி செல்லவில்லை. ஆனாலும், அவரின் ஆதர வாளர்கள் பலர், கார், வேன்களில் திருச்சி சென்றனர். செல்லும் முன், 'மாநாட்டிற்கு செல்லலாமா' என, அழகிரியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவரும், தாராளமாக, சென்று வாருங்கள் என்று கூறி, வாழ்த்தி அனுப்பியுள்ளார்.மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு, உட்கட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட, அழகிரியின் ஆதரவாளர்கள் பலர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்காமல், அவர்கள் மதுரையில் தங்கினால், மாநாட்டிற்கு வராத காரணத்தை முன்வைத்து, தேர்தலில் போட்டியிட விடாமல், ஸ்டாலின்ஆதரவாளர்கள் சதி செய்து விடுவர் என்ற காரணத்தால், அவர்களை, அழகிரி வாழ்த்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அழகிரி ஆதரவு, தி.மு.க., - எம்.பி.,க்களில், ஒருவரான, நடிகர் நெப்போலி யன், அமெரிக்கா சென்று விட்டதால், மாநாட்டில் பங்கேற்கவில்லை. மற்றொரு எம்.பி.,யான, ரித்தீஷியிடம், விளக்கம் கேட்டு, கட்சித் தலைமை, நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இருப்பினும், ராமநாதபுரத்தில் உள்ள, தன் ஆதரவாளர்களுக்கு, வாகனங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.


அழைத்திருக்கலாம்:


இவர்கள் இருவர் தவிர, மற்றொரு தீவிர ஆதரவாளரான, கே.பி.ராமலிங்கம், எம்.பி., மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.மாநாட்டிற்கு செல்லாத அழகிரி, மதுரை யில், தன் வீட்டில், குடும்பத்தினருடன் அமர்ந்து, தொலைக்காட்சி யில், மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளார். அவரின் மகன் தயாநிதியோ, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு மதிய உணவுவழங்கியுள்ளார். தென் மண்டல அமைப்பு செயலர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், கருணாநிதியாவது மகன் என்ற முறையிலாவது, அவரையும், அவரின் குடும்பத்தினரை யும், மாநாட்டிற்கு அழைத்திருக்கலாம் என்றும் புலம்புகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X