சென்னை செங்குன்றத்தில், புழல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம், நேற்று நடந்தது.அதில், கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது: நம் நாட்டில், தொழிலாளிகள் மட்டுமே, மனிதநேய மிக்கவர்களாக இருக்கின்றனர். நாள் முழுக்க கணினி மூலம் பணியாற்றி, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள், ஏழைத் தொழிலாளிகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
அவர்கள் வாழ்க்கை மேம்பட எதையுமே, யாருமே செய்வதில்லை. இதே நிலையில்தான் விவசாய கூலிகளும் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளிகள் மட்டுமே, நாட்டில் லஞ்சம் வாங்குவதில்லை. மற்ற அனைவரும், லஞ்ச ஊழலில், சிக்கி உள்ளனர். பெரும்பாலும் பொருளா தாரத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பவர்களே, அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். அவர்களிடம் இருந்து வருங்கால சந்ததியினரை எப்படி காப்பது என்பதுதான், கம்யூனிஸ்ட் கட்சி யின் சிந்தனையாக, உழைப்பாக உள்ளது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் மட்டும் சிந்தித்தால், பாடுபட்டால் போதாது. அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, மற்ற கட்சிகள் இன்னமும் கூட்டணிக்காக பேசிக் கொண்டே இருக்கின்றன. ஒரு தலைவர், கூட்டணி சேருவதற்காக, மற்றொரு கட்சித் தலைவரிடம், 400 கோடி வரை கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான், 1967ல் இருந்து இன்று வரை சம்பாதித்ததை, கூட்டணிக்காக மொத்தமாக கேட்கிறாரே என, குறிப்பிட்ட அந்த தலைவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இப்படி எந்தவிதமான நெருடல்களும், கூட்டணி பேரங்களும் இல்லாமல், நியாய மாகவும், தர்மமாகவும், கம்யூனிஸ்ட்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையில் கூட்டணி அமைந்திருக்கிறது. தொகுதி பங்கீடும் அப்படியே சுமூகமாக நடந்து முடியப் போகிறது. இதைக் கண்டு மற்ற கட்சியினர் எங்களை பொறாமையோடு பார்க்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு, எங்கள் வெற்றி யால், வெறுப்போடு பார்க்கப் போகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE