"திருச்சி தி.மு.க., மாநில மாநாட்டில், வசீகரமான பேச்சு இடம் பெறவில்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தலைவர்கள் பலர் பேசவில்லை' என, மாநாட்டில், பங்கேற்ற தொண்டர்கள் பலர், அதிருப்தி தெரிவித்தனர். சுதந்திரம் அடைந்த காலம் முதல், தமிழகத்தில், பல ஆண்டுகளாக இருந்த, காங்கிரஸ் ஆட்சியை, தி.மு.க., பேச்சாளர்கள் மேடையில் முழக்கமிட்டு, பேசிப்பேசியே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மறைந்த தலைவர்கள் அண்ணாதுரை, சம்பத், நெடுஞ்செழியன் உள்ளிட்ட, பல தலைவர்கள், தங்களின் பேச்சாற்றல் மூலம், தி.மு.க.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். ஆனால், திருச்சி தி.மு.க., மாநில மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, திருச்சி சிவா, ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் லியோனி தவிர, மற்ற தலைவர்கள் பேசிய பேச்சு எல்லாம், தொண்டர்களை வசீகரிக்கவில்லை. மாநாட்டில் பேசிய, கட்சி நிர்வாகிகளில் பலர், மக்களை பாதிக்கக் கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி பேசாததால், ?தாண்டர்களை ஈர்க்க முடியவில்லை தலைமை கழக பேச்சாளர்களில் சிலர், சிறப்பாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இப்படி மாநாடு உற்சாகமில்லாமல் சென்றதால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
"தொண்டர்களை, மக்களை கவரும் வகையிலான, வசீகர பேச்சு, மாநாட்டில் இல்லாதது, பிரமாண்டமாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு, ஒரு திருஷ்டிப் பொட்டாக அமைந்து விட்டது' என்றும், பலர் குறைபட்டுக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE