தமிழ்நாடு

நீரின்றி கருகிய செடிகளால்... பாதிப்பு வறட்சியின் பிடியில் விவசாயிகள்

Added : பிப் 18, 2014
Advertisement



ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கத்தரி, காலிபிளவர் கருகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் காய்கறிகள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல கிராமங்களில் ஆயிரம் அடிக்கும் கீழ் போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. காவேரியம்மாபட்டி, தேவத்தூர் பகுதிகளில் காலிபிளவர், கத்தரி மற்றும் மிளகாய் செடிகள் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் போர்வெல்லில் இருந்த சொற்ப நீரைக்கொண்டு நடப்பட்டன. அவை அறுவடைக்கு வரும் சமயத்தில் வறட்சி அதிகரித்ததால் போர்வெல்களில் இருந்த சிறிது நீரும் வற்றியது.நீர்பாய்ச்ச முடியாததால், பல ஏக்கர் பரப்பில் நடப்பட்டிருந்த அத்தனை செடிகளும் அடிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கருகிவிட்டன. செடிகள் கருகியதால் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த காலிபிளவர், கத்தரிக்காய், மிளகாய் காய்ந்தன.நட்ட பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு வராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X