ரயில்வே பட்ஜெட் மீது பார்லி.,யில் விவாதம் இல்லை: தெலுங்கானா அமளியால் அப்படியே நிறைவேற்றம்

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி:பார்லிமென்டில், எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல், வரலாற்றிலேயே முதல்முறையாக, இடைக்கால ரயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது போலவே, இன்று அல்லது ஓரிரு நாட்களில், தெலுங்கானா மசோதாவையும் நிறைவேற்ற, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதால், பரபரப்பு காணப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டுக்கு முன், ரயில்வே பட்ஜெட், லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது
ரயில்வே பட்ஜெட் மீது பார்லி.,யில் விவாதம் இல்லை: தெலுங்கானா அமளியால் அப்படியே நிறைவேற்றம்

புதுடில்லி:பார்லிமென்டில், எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல், வரலாற்றிலேயே முதல்முறையாக, இடைக்கால ரயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது போலவே, இன்று அல்லது ஓரிரு நாட்களில், தெலுங்கானா மசோதாவையும் நிறைவேற்ற, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதால், பரபரப்பு காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டுக்கு முன், ரயில்வே பட்ஜெட், லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பொதுத் தேர்தல் ஆண்டு என்பதால், ஏப்ரலுக்கு பிறகு, நான்கு மாதங்களுக்கான, செலவினங்களுக்கு தேவையான நிதி, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.இடைக்கால பட்ஜெட்டாகவே இருந்தாலும் கூட, அந்த பட்ஜெட் மீது, முழு அளவிலான விவாதம் நடத்தி, அதன் பின்னரே, சபையில் நிறைவேற்றப்படும்; அது தான், இத்தனை ஆண்டுகளாக பின்பற்றப்படும் மரபு. ஆனால், இந்த ஆண்டு, இந்த மரபு, தூக்கி கடாசப்பட்டது.


வாசிப்பு இல்லை:


ரயில் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, சபையில், வரலாறு காணாத அமளி காணப்பட்டது. தெலுங்கானா விவகாரத்திற்காக, ஆந்திர மாநில, எம்.பி.,க்கள், ரகளையில் ஈடுபட்டதால், பட்ஜெட்டை, முழுமையாக வாசிக்கக் கூட, அமைச்சரால் முடியவில்லை.இந்நிலையில், நேற்று லோக்சபாவில், மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் சிதம்பரம், காலை 11:00 மணிக்கு துவக்கி, 80 நிமிடங்கள் வாசித்து முடித்தார். பட்ஜெட் தாக்கல் ஆன பிறகு, சபாநாயகர் மீரா குமார், ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தை, எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.மத்திய பட்ஜெட்டை, சிதம்பரம் வாசிக்கத் துவங்கியதில் இருந்தே, ஆந்திராவைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள், சபையின் மையப்பகுதியில், நின்று கொண்டு, கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஆனாலும், அவர்களை, சிதம்பரம் கண்டுகொள்ளவில்லை.

மத்திய பட்ஜெட் தாக்கலான பிறகு, அடுத்த அலுவலாக, ரயில்வே பட்ஜெட் விவாதத்தை, சபாநாயகர் எடுத்துக் கொண்டது, எதிர்க்கட்சிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, அ.தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, எம்.பி.,க்கள், சபாநாயகருடன் வாக்குவாதத்தில், இறங்கினர். சபையில் ஒழுங்கும், அமைதியும் இல்லாத நிலையில், எப்படி விவாதத்தை, நடத்த அனுமதிக்க முடியும் என, அவர்கள் கேட்டனர்.


முரண்பாடு:

அவர்கள், 'ரயில்வே பட்ஜெட் மீது விவாதம் நடத்த வேண்டும் என்கிறீர்கள். அந்தத் துறையின் இணையமைச்சர், சூரியபிரகாஷ் ரெட்டி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த, முரண்பாட்டை, எப்படி ஏற்க முடியும்?' என, வாதிட ஆரம்பித்தனர். அதுவரை, அமைதியாக இருந்த, எதிர்க்கட்சித் தலைவர், சுஷ்மா சுவராஜ், அதன் பிறகு, எழுந்து சபாநாயகரிடம், தன் எதிர்ப்பை தெரிவித்தார். "சபையில் அமைதி இல்லாத நிலையில், ரயில்வே பட்ஜெட் விவாதத்தை, எப்படி நடத்த முடியும்?” என, அவர் கேட்டார். அமளி அதிகமாகிக் கொண்டே இருக்க, சபையில், விவாதம் எதுவும் நடக்காமலேயே, ரயில்வே இடைக்கால பட்ஜெட், நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர், திடீரென அறிவித்தார்.


முதல் முறை:


பின், சபையையும், ஒத்திவைத்து விட்டார். விவாதம் நடத்தாமலேயே, இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டிருப்பது, பார்லிமென்ட் வரலாற்றிலேயே, இது தான் முதல்முறை.இந்நிலையில், தெலுங்கானா மசோதாவை, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்து, நிறைவேற்றுவதற்கான, அடுத்த கட்ட நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் முக்கிய பகுதியாக, பா.ஜ., மூத்த தலைவரான அத்வானியை, அவரது அலுவலகத்தில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.


அமளியுடன் பார்லி: இது தான் தொடர்கதை!


நிதியமைச்சர் சிதம்பரம், லோக்சபாவில், நேற்று காலை, 11:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்ய எழுந்தார். தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபையில், தினமும் அமளி நிலவி வந்த நிலையில், நேற்றும், அது தொடர்ந்தது. 17 எம்.பி.,க்கள், இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், கோஷங்கள் போட, எம்.பி.,க்கள் இல்லை.அந்த குறையை, காங்., மத்திய அமைச்சர்கள் தீர்த்து வைத்தனர். அமைச்சர்கள் சிரஞ்சீவி, கே.எஸ்.ராவ், புரந்தேஸ்வரி போன்றவர்கள், சபையின் மையப் பகுதியில் நின்று கோஷமிட்டவாறு இருந்தனர். இவர்களுடன், சமாஜ்வாதி மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்களும், அமளியில் ஈடுபட, ஆரம்பித்தனர். கூச்சல், குழப்பம் அதிகரித்ததால், பட்ஜெட் உரையை, வாசித்துக் கொண்டிருந்த சிதம்பரம், ஒரு கட்டத்தில், அதிருப்தி அடைந்தார்.பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், சிதம்பரத்திடம், "பட்ஜெட் உரையை, வெறுமனே, தாக்கல் செய்திடுங்கள்,” என கூறினார். அதை ஏற்றுக் கொள்ளாத சிதம்பரம், "பட்ஜெட்டை, முழுவதுமாக படித்தே தீருவேன்,” என்றார்."இது தான், கடைசி கூட்டத்தொடர். தவிர, பட்ஜெட் நிறைவேற்றத்தின் போது, இடையூறு செய்யக் கூடாது. பட்ஜெட் நிறைவேற்றம் என்பது, அரசின் அரசியல் சாசன கடமை; அதை, தடுக்க வேண்டாம்,” என, காங்., அமைச்சர்களை, சபாநாயகர், மீரா குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சமாஜ்வாதி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமைதியாயினர். இருப்பினும், ஆந்திர அமைச்சர்கள், பிடிவாதமாக நின்று கொண்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜன் - சென்னை,இந்தியா
18-பிப்-201415:04:42 IST Report Abuse
ராஜன் சாதனை மேல் சாதனை போடும் அட சாமி....
Rate this:
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-201410:07:29 IST Report Abuse
Aboobacker Siddeeq இழுத்து மூட இருக்கும் அரசாங்கத்தின் பட்ஜெட்டை பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது. அடுத்து அமைய இருக்கும் புதிய ஆட்சி புதிய அனுகூலங்களுடன் அனைத்து பட்ஜெட்டையும் நிறைவேற்றிக்கொள்ளட்டும்...
Rate this:
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
18-பிப்-201409:22:57 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN தமிழக முன்னேற்ற திட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கப் படாத நிலையில், தமிழக எம்பிக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் அதைவிட என்ன முக்கிய வேலை செய்துகொண்டிருந்தார்கள். கூச்சலும் குழப்பமும் செய்துகொண்டிருந்த வேளையில் ரயில்வே பட்ஜெட்டே நிறைவேறி விட்டது. இவர்களை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு செய்யும் சேவை இதுதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X