காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி| Is vijayakanth seek congress help? | Dinamalar

காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (30) | |
லோக்சபா தேர்தல் கூட்டணி விஷயத்தில், எந்தக் கட்சிக்கும் பிடிகொடுக்காத விஜயகாந்த், கடந்த 13ம் தேதி, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி சென்று, மறுநாள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழக பிரச்னைகள் குறித்து பேசினார்.அத்துடன், காங்., மேலிட தலைவர்களைச் சந்திக்க, அவர் முயற்சித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களுக்காக, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர்
 காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி

லோக்சபா தேர்தல் கூட்டணி விஷயத்தில், எந்தக் கட்சிக்கும் பிடிகொடுக்காத விஜயகாந்த், கடந்த 13ம் தேதி, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி சென்று, மறுநாள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழக பிரச்னைகள் குறித்து பேசினார்.

அத்துடன், காங்., மேலிட தலைவர்களைச் சந்திக்க, அவர் முயற்சித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களுக்காக, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் மற்றும்
முக்கிய தலைவர்கள், மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதால், விஜயகாந்தால், யாரையும் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், காங்., இரண்டாம் மட்ட தலைவர்கள் மூலம், விஜய காந்த் கோரிக்கை ஒன்றை வைத்ததாக, புரளி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஊழல் விவகாரத்தால், துவண்டு கிடக்கும் தி.மு.க.,விற்கு, ஆதரவு தெரிவித்து, அக்கட்சி, அதிக எம்.பி.,க்களைப் பெற, நாம் ஏன் உதவ வேண்டும் என, விஜயகாந்த் கணக்கு போடுகிறார். அதனால், லோக்சபா தேர்தலை தனித்து எதிர்க்கொள்ளலாமா என்ற யோசனையில் உள்ளார். அப்படி, தனித்து நின்றால், தேர்தலுக்கு நிறைய செலவாகுமே என்றும் கவலைப்படுகிறார்.அதனால், தே.மு.தி.க.,வும், காங்கிரசும், தமிழகத்தில் தனித்தனியே, தேர்தலை சந்திப்பது, ஒருவருக்கொருவர் மறைமுக ஆதரவு தெரிவிப்பது; அதற்கேற்ற வகையில், ரகசிய உடன்பாடு அடிப்படையில், வேட்பாளர்களை நிறுத்துவது என்றும், இதற்கு காங்., சம்மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, காங்., இரண்டாம் மட்ட தலைவர்களிடம், விஜயகாந்த் முன்வைத்துள்ளார். அதற்கு, காங்., தரப்பில், எந்த பதிலும் இல்லை. அதனால், விரக்தி அடைந்த விஜயகாந்த், வெறுப்பில் சென்னை திரும்பி விட்டார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X