மத்திய பட்ஜெட்: வரவேற்பும், எதிர்ப்பும்| Dinamalar

தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்: வரவேற்பும், எதிர்ப்பும்

Added : பிப் 18, 2014
Share

மதுரை: மத்திய பட்ஜெட்டின் பயன்களையும், பாதகங்களையும் தங்கள் கருத்துக்களால் பதிவு செய்கின்றனர் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள்.வரிக்குறைப்பிற்கு பாராட்டுஎஸ்.பி.ஜெயப்பிரகாசம் (தலைவர், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரை):அரிசிக்கான சேவை வரியை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. 'டிவி', பிரிட்ஜ், மொபைல்போன் ஆகியவற்றிற்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், சிறியரக கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 சதவீத வரியை 8 சதவீதமாகவும் குறைத்ததை பாராட்டலாம். 9 லட்சத்து 71 ஆயிரத்து 182 சுயஉதவி குழுக்களை, தற்போது 41 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தி, அவற்றிற்கு இதுவரை 36 ஆயிரத்து 893 கோடி கடனுதவி வழங்கப்பட்டதும் பாராட்டுக்குரியது.சலுகை தந்திருக்கலாம்ஜெகசதீசன் (தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை): நேரடி வரித்தொகுப்பு, கலால், சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி என, மறைமுக வரிகளை ஒரே வரியாக இணைத்து, எளிமைப்படுத்தும் சரக்கு, சேவை வரியை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தியது வரவேற்கதக்கது. தொழில் உற்பத்தி உத்வேகம் அடைய, புதிய அரசின் பட்ஜெட் வரை காத்திராமல், தேவையான சலுகைகளை இந்த பட்ஜெட்டில் தந்திருக்கலாம்.தொழில்துறையின் ஒட்டுமொத்த தேக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலுக்கும், வரும் ஜூன் வரை வரியை குறைத்து இருக்கலாம். வருமான வரி உச்சவரம்புஜோசப் பார்ன்ஸ் (மனித வளஆலோசகர்): கல்விக்கு கடந்த ஆண்டு ரூ.10,145 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது 79,251 கோடி என்ற அளவிற்கு அபரிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை -பெங்களூரு இடையே தொழில் வழித்தடம், தொழில்பூங்கா உருவாக்குவதால், படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு மிகவும் உதவும். விலைவாசி, சம்பள விகிதங்களை பார்க்கும் போது, வருமான வரி உச்சவரம்பு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இறக்குமதி தங்கத்திற்கு ஏமாற்றம்எம்.பாலசுப்ரமணியன் (முதன்மை ஆலோசகர், தமிழ்நாடு தங்கநகை வியாபாரிகள் சம்மேளனம்): இறக்குமதி தங்கத்திற்கு சலுகைகளை எதிர்பார்த்தோம். தற்போதுள்ள 10 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால் தங்கம் கடத்துவதும், நுகர்வோர் வாங்கும் அளவு விலையும் குறையும். இதனால் பொதுமக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்த்தோம். அதுபற்றி எதுவும் கூறப்படாததால், பெரும் ஏமாற்றம் தருவதாக உள்ளது. வளர்ச்சிக்கு அணுஉலைமோகன் (பொதுச்செயலாளர், மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம்): அரிசி மற்றும் ரத்தவங்கிக்கு சேவை வரி ரத்து செய்ததற்கு பாராட்டலாம். கார், டூவீலர், மொபைல்போன், சோப்புக்கு வரிகுறைப்பால் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர். 7 புதிய அணுஉலைகள் ஏற்படுத்தப்படுவதும் வரவேற்கத்தக்கதே. கிராமப்புற குடியிருப்புகள் கட்ட சலுகை, பெங்களூரு-சென்னை இடையே தொழில் வழித்தடம் போன்றவை நல்ல அம்சங்களே. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வருமான வரியில் சலுகை, உச்சவரம்பை அதிகரித்தல் போன்ற எதுவும் இல்லாதது ஏமாற்றமே.இளைஞர்களுக்கு ஏமாற்றம்மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளியல் துறைப் பேராசிரியர் சி. முத்துராஜா: மத்திய அரசின் திட்டமிடா செலவினங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, எரிசக்தி துறைக்கு அறிவிக்கப்பட்ட மானியங்கள், எதிர்விளைவையே ஏற்படுத்தும். பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ, குறைக்கவோ எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை.நாம் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை கொண்டுள்ளோம். அந்த வகையில், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு 'யூத் பட்ஜெட்டை' உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான நேரடி திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X