தமிழ்நாடு

வார்டு பிரச்னை பற்றி பேசாத கவுன்சிலர்கள். . .மூச்.......! வடை, டீ, கூல்டிரிங்ஸ், முந்திரிக்கு மட்டும் 'எந்திரி'

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வார்டு பிரச்னை பற்றி பேசாத கவுன்சிலர்கள். . .மூச்.......!  வடை, டீ, கூல்டிரிங்ஸ், முந்திரிக்கு மட்டும் 'எந்திரி'

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் பிரச்னைகளைப் முறையிடாமல், முந்திரி, டீ, கூல்டிரிங்ஸ், டீ குடிப்பதை மட்டுமே, கடமையாக செய்யும் கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.'நாங்கள் வெற்றி பெற்றால், அதை செய்வோம்... இதை செய்வோம்...' என வாக்குறுதிகளை அள்ளிவீசிய வகையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும், சளைத்தவர்கள் அல்ல.'வாய் உள்ள பிள்ளை, பிழைத்துக்கொள்ளும்,' என்பது, மாநகராட்சியில் அங்கம் வகிக்கும் கவுன்சிலர்களுக்கு பொருத்தமானது. 100 வார்டுகளில், தனது வார்டிற்கு உரியதை போராடி தான் பெற வேண்டும். அதற்கு ஒரே களம், மாதந்தோறும் நடக்கும், மாமன்றக் கூட்டம்.காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 3 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், தங்கள் வார்டு பிரச்னைகளை முறையிட வேண்டியது, கவுன்சிலர்களின் கடமை; ஆனால் சிலர், எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'நானும் பங்கேற்கிறேன்' என்ற, ரீதியில் தான், ஒவ்வொரு கூட்டத்திலும் தன் பங்களிப்பை தருகின்றனர்.ஒருபுறம், அவர்களுக்கான பேசும் வாய்ப்பை, மண்டலத் தலைவர்கள் பறித்துக் கொள்வதும், தேவையற்ற விவாதங்களால் நேரம் வீணடிக்கப்படுவதால், வாய்ப்பு கிடைக்காமல் போனதாக எடுத்துக் கொண்டாலும், அடுத்தடுத்த கூட்டங்களில் கூட, பேசாமல், வேடிக்கை பார்க்கும் கவுன்சிலர்களை என்னவென்று சொல்வது?'என்னத்தை பேசுறது? இதுவரை பேசியவர்களுக்கு என்ன நடந்திருக்கு? நாங்க பேசினால் மட்டும் என்ன நடக்கும்?' என, வாய்திறக்காத கவுன்சிலர்கள் கேள்வி கேட்கலாம். ஒவ்வொரு முறை ஏமாற்றம் ஏற்படும் போதும், தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பது, எப்படி ஜனநாயக கடமையோ, அதுபோலதான், மக்கள் பிரச்னைகளை பேச வேண்டியது கவுன்சிலர்களின் கடமை.ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் மாமன்றத்தில் கொடுக்கும் 'கவர்', டீ, வடை, கூல்டிரிங்ஸ், முந்திரிக்கு மட்டும் தான், வாய் திறக்கிறார்கள் என்றால், ஓட்டளித்த வார்டு மக்களுக்கு யார் தான் குரல் கொடுப்பது?கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஒரு கூட்டத்தில் கூட முழுமையாக பங்கேற்காத தி.மு.க., கவுன்சிலர்கள், வடை, டீ, கூல்டிரிங்ஸ் கிடைக்கும் வரை கூட, சபையில் இருந்ததில்லை. ஒரு முறை இருக்க முயன்றனர்; ஆனால், எதிர்பாராதவிதமாக, அதே வடையை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடந்ததால், அதை உண்பதற்கு முன், வெளிநடப்பு செய்தனர்.இன்னும் சரிபாதி மாதங்களே, இவர்களுக்கான பதவிக்காலம் இருக்கும் நிலையில், இனியாவது, மக்கள் பிரச்னைகளை பேச, கவுன்சிலர்கள் முன்வரட்டும். மேயர் ராஜன் செல்லப்பா, அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கட்டும்.

ஈராண்டுக்கு ஓராண்டு பதம்
கடந்த இரண்டரை ஆண்டுகளில், வாய் திறக்காத கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால், அதுபற்றிய கணக்கெடுப்பு பணி, கொஞ்சம் தாமதமாகிறது. எனவே, கடந்த '2013ல்' நடந்த 12 கூட்டங்களில் வாய் திறக்காத கவுன்சிலர்களின் விபரம் இதோ...
பெயர் வார்டு கட்சிபழனியம்மாள் 8 அ.தி.மு.க.,அருண்குமார் 10 தி.மு.க.,முருகேசன் 19 அ.தி.மு.க.,ஜீவானந்தம் 25 தி.மு.க.,ஜெங்கிஸ்கான் 26 தி.மு.க.,சுசீந்திரன் 31 அ.தி.மு.க.,ராணி 34 அ.தி.மு.க.,ஆறுமுகம் 40 அ.தி.மு.க.,ஷாலினிதேவி 46 அ.தி.மு.க.,சசிக்குமார் 49 தி.மு.க.,விஜயராகவன் 51 அ.தி.மு.க.,தங்கம் 53 தி.மு.க.,ராமசுப்பிரமணியன் 58 அ.தி.மு.க.,சக்திவேல் 59 அ.தி.மு.க.,முத்தையா 61 தி.மு.க.,முபாரக் மந்திரி 67 தி.மு.க.,முனியம்மாள் 75 அ.தி.மு.க.,மாணிக்கம் 83 தி.மு.க.,ராஜேஸ்வரி 84 தி.மு.க.,சாதிக் பாட்ஷா 86 தி.மு.க.,வீரணன் 88 அ.தி.மு.க.,கண்ணன் 91 தி.மு.க.,எம்.எல்.ராஜ் 99 தி.மு.க.,
ஒரு நாள் போதுமா

'பேசாதவர்கள் இத்தனை பேர் இருக்கும் போது, பேசியவர்கள் எண்ணிக்கை நிறைய இருக்கும் போல....' என, நினைத்துவிட வேண்டாம்! 2013ல் நடந்த 12 கூட்டங்களில், ஒரே ஒரு முறை மட்டும் பேசியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்து விட்டால், உருப்படியாய் பேசியவர்கள் எத்தனை பேர் என்பதை, நீங்களே யூகித்துக் கொள்ளலாம். ஒரு முறை பேசியவர்கள் இதோ...பெயர் வார்டு கட்சிசரவணன் 2 அ.தி.மு.க.,தங்கப்பாண்டியன் 5 அ.தி.மு.க.,ராஜிவ்காந்தி 6 அ.தி.மு.க.,முத்துராஜா 7 அ.தி.மு.க.,ஜெயராமன் 12 அ.தி.மு.க.,அனுராதா 14 அ.தி.மு.க.,ஜெயலட்சுமி 15 அ.தி.மு.க.,பாஸ்கர் 16 அ.தி.மு.க.,மோகன் 29 அ.தி.மு.க.,பாலசுப்பிரமணியன் 39 அ.தி.மு.க.,நூர் முகமது 50 அ.தி.மு.க.,சரவணன் 54 அ.தி.மு.க.,சுப்பிரமணியன் 56 அ.தி.மு.க.,தங்கவேல் 66 அ.தி.மு.க.,ஜெகநாதன் 68 அ.தி.மு.க.,விஜயலட்சுமி 69 அ.தி.மு.க.,சண்முகவள்ளி 70 அ.தி.மு.க.,கலாவதி 82 அ.தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru Swamy - Madurai,இந்தியா
19-பிப்-201413:08:56 IST Report Abuse
Guru Swamy காந்தி நோட்டை காட்டினாதான் வாய் திறப்பார்கள்.யாராவது வழி செய்யுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X