இந்தியப் படகை மடக்கினர்| Dinamalar

இந்தியப் படகை மடக்கினர்

Added : பிப் 18, 2014
Advertisement
இந்தியப் படகை மடக்கினர்

நவம்பர் 23: இரவு 12 மணிக்கு இவர்கள் அல்-ஹுசைனி படகில் 30 நிமிடங்கள் பயணம் செய்தனர். அவர்களை நோக்கி ஒரு படகு வருவதைக் கண்டனர். உஸ்மான் அவர்களை நோக்கி ஒரு இஞ்சினின் உடைந்த பெல்டை கொடியசைப்பதுபோல் வீசிக் காட்டித் தங்களுக்கு உதவிகோரி அழைப்பது போல பாசாங்கு செய்தான். தங்கள் படகை அவர்களை நோக்கி நடத்தி, அந்தப் படகை இவர்கள் கைப்பற்றினார்கள். இந்த இந்துஸ்தானி படகின் பெயர் குபேரா. ஹக்கீம்சாப், உஸ்மான் இருவரும் குபேரா படகில் இருந்த நால்வரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்தனர். அந்தப் படகில் இருந்த டிவி, விசிஆர் மற்றும் பிற பொருட்களை அல்-ஹுசைனி படகுக்குக் கொண்டுவந்தனர். பின்னர் இந்த 10 பேரும் படகுக்குத் தங்கள் உடைமைகளுடன் மாறினார்கள். குபேரா படகின் மாலுமி (நக்வா)யையும் இவர்கள் பாதுகாப்புக்குக் கொண்டுவந்தனர். பின்னர் ஹகீம்சாப் உத்தரவுப்படி புதிய படகில் இருந்த டீசல் அளவைச் சோதித்தனர். அதில் 700 லிட்டர் டீசல் இருந்தது. தவிர 4 டிரம்களில் டீசல் நிரம்பியிருந்தது. இந்த டீசல் மும்பை வரை போய்ச்சேர போதுமானதா என்று இஸ்மாயில் கேட்டதற்கு, போதாது என்று மாலுமி பதில்கூற, இவர்கள் அல்-ஹுசைன் படகில் இருந்த டீசல் டிரம்கள், கேன்களை குபேர் படகுக்கு மாற்றினார்கள்.


இந்திய மாலுமியை மிரட்டி:

பின்னர் திட்டமிட்டபடி, மும்பையை நோக்கி தங்களிடமிருந்த படங்கள் மற்றும் குபேரின் மாலுமி அமர்சந்த ஸோலன்கி உதவியுடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். உணவு தயாரிக்கும் பணி இம்ரான் பாபருக்குத் தரப்பட்டது. மற்ற 9 பேரும் மூவர் மூவராகக் காவல் பணியில் ஈடுபட்டனர். இஸ்மாயில்கான், நசீருடன் கசாப் இப்பணியில் இருந்தான். இந்த மூன்று குழுவும் இரண்டு மணிக்கு ஒரு முறை மாறி மாறிக் காவல் வேலையைச் செய்தனர். கால அளவை இஸ்மாயில் தனது டைரியில் குறித்துக் கொண்டு, பெயர் வாரியாக இப்பணியை இவர்களுக்கு மாற்றிக்கொடுத்தான்.

சிறிது தூரம் சென்றதும் மாலுமியின் கைகளைக் கட்டிப்போட்டு கண்களை மறைத்துக் கட்டினார்கள். இந்த மூன்று குழுவினரும் வேறு ஏதாவது வேண்டாத குறுகீகடுகள் வருமா என்பதை 24 மணி நேரமும் மிக விழிப்புடன் கண்காணித்தார்கள். குபேராவின் மாலுமி அமல் சந்த் மீதும் ஒரு கண் வைத்திருந்தனர். இவன் உதவியுடன், இஸ்மாயில், ஜாவேத் இருவரும் படகைச் செலுத்தினார்கள். இந்தப் பயணத்தின்போது அபு அம்சாவுடன் சேடலைட் தொலைபேசியில் பேசினார்கள். தாங்கள் சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருப்பதை ஜிபிஎஸ் சிஸ்டத்தின் மூலம் இஸ்மாயில் சரிபார்த்துக்கொண்டே வந்தான். இவர்கள் குபேரா மாலுமிக்கும் உணவளித்தார்கள். மும்பை பயணத்தில் இவர்கள் படகு இஞ்சினுக்கு 3 முறை டீசல் ஊற்றினார்கள். இதற்கு மாலுமி உதவி செய்தான்.நாசவேலையில் முதல் பலி:

நவம்பர் 26, நேரம் முற்பகல் 11 மணி: திட்டமிட்டபடி இவர்கள் தங்களது மணிக்கட்டில் மஞ்சள் - சிகப்பு நூல்களைக் கட்டிக் கொண்டார்கள். மாலை 4 மணி அளவில் மும்பையை நெருங்கினார்கள். மும்பையில் நெடிதுயர்ந்த கட்டிடங்கள் இவர்கள் கண்களுக்குத் தெரிந்தது.

கசாப் அபுஹம்ஸாவிடம் சேடலைட் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மும்பையை அடைந்துவிட்ட செய்தியைத் தெரிவித்து, மாலுமியை என்ன செய்வதென்று கேட்டான். அபுஹம்ஸா சிரித்துக்கொண்டே "விரும்புவது போல் செய்துகொள்' என்று சொன்னான். அவனைக் கொன்றுவிடுவதே நல்லது என்று கசாப் கூறியதை அவன் கூட்டாளி இல்லாமல் ஒப்புக்கொண்டான். பின்னர் ஸோஹிப், நசீர் இருவரும் மாலுமியின் (அமர்சந்த்) கால்களை இஞ்சின் அறையில் இறுகப் பிடித்துக்கொள்ள, கசாப் அவன் தலைமுடியை இறுகப் பிடித்து, கழுத்தை இறக்கி வெட்டிக் கொன்றுவிட்டான். அவன் உடலை இஞ்சின் அறையில் மறைத்துவிட்டனர்.


(இந்த நாசவேலையின் முதல் பலி குபேர் படகின் மாலுமி அமர்சந்த் ஸோலங்கி)ரப்பர் படகுக்கு மாறினர்:

இந்தக் கொலை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில், ரப்பர் ஸ்பீட் போட்டில் பம்ப் மூலம் காற்றடிக்கும் வேலையில் பகதுல்லா, ஜாவேத் மற்றும் நசீர் அகமது ஆகியோர் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில் இந்த வேலை முடிந்தது. படகு கடலில் இறக்கப்பட்டது. கராச்சியில் இருந்து கொண்டுவந்த புதிய ஆடைகளை இவர்கள் அணிந்துகொண்டனர். சிவப்பு டி ஷர்ட், அதற்கு மேல் நீல டி ஷர்ட் (குல்லாய் உள்ளது), கிரீன் கார்கோ பேன்ட் என கசாப் அலங்கரித்துக்கொண்டான். மற்றவர்களும் தக்கவாறு உடை மாற்றிக் கொண்டனர். எல்லோரும் சிகப்பு லைப் ஜாக்கெட், மஞ்சள் வாட்டர் புரூப் டிரவுசர்கள் அணிந்துகொண்டார்கள். பழைய துணிகளை குபேர் படகில் விட்டுவிட்டார்கள்.


எல்லோரும் நமாஸ் செய்தார்கள். தங்கள் பைகளில் இருந்த மொபைல் போன்களை எடுத்து சுவிட்ச் செய்தனர். ஆனால் கடலில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. தங்களது பொருட்களை எல்லாம் ஸ்பீட் படகுக்கு மாற்றினார்கள். அப்போது அவர்களை நோக்கி ஒரு படகு வருவதைப் பார்த்து பதறிப் போனார்கள். அது கடற்படை படகாக இருக்கலாம் என்று பயந்து, தங்களது ஸ்பீட் படகை செலுத்தத் தொடங்கினார்கள். இந்த அவசரத்தில் குபேர் படகின் கடல் வால்வைக் கழட்டவும், அதிலிருந்த தனது சேட்டலைட் போனை எடுத்துக்கொள்ளவும் இஸ்மாயில் மறந்துவிட்டான்.


குபேர் படகை மும்பையில் இருந்து சுமார் 4 கடல் மைல்கள் (நாடிகல் மைல்) தூரத்தில் விட்டுவிட்டு, ஸ்பீட் போட் மூலம் பயணம் செய்தார்கள். இஸ்மாயில் படகை ஓட்டினான். இந்தப் படகின் இஞ்சின் யமஹா கம்பெனி தயாரிப்பு. ஜி.பி.எஸ். உதவியுடன் நசீர் வழிகாட்டிக்கொண்டு வந்தான்.இலக்குகள் நிர்ணயம்:

கரையிறங்கிய பின்னர் கசாப், இஸ்மாயில் இருவரும் டாக்சி மூலம் விடிஎஸ் செல்வது, ஸோஹெப் - நசீர் அகமது லியோபோல்ட் ஓட்டலுக்குச் செல்வது, ஜாவேத் - ஹபீஸ் ஹர்ஷத் தாஜ் ஓட்டலுக்குச் செல்வது என்று இவர்கள் திட்டம் வகுத்துக் கொண்டனர். இம்ரான் பாபர்-நசீர் ஜோடி நரிமான் ஹவுசுக்கு நடந்து சென்றுவிடுவதாகவும் முடிவு செய்தனர். கடைசியாக பகதுல்லா மற்றும் அப்துல் ரகுமான் சோட்டா இருவரும் ஓபிராய் ஓட்டலுக்கு ஸ்பீட் போட்டிலேயே செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி கசாப், ஸோஹெப் மற்றும் ஜாவேத் ஆகியோர் டாக்சி டிரைவர் சீட்டுக்கு அடியில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வைக்க வேண்டுமென்றும், மற்றவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளுக்கு அருகில் குண்டுகளை வைக்க வேண்டுமென்றும் இஸ்மாயில் இவர்களிடம் கூறினான்.


சுமார் ஒன்றரை - இரண்டு மணி நேரத்தில் இவர்கள் மும்பையில் கரையேறினார்கள். அபு அலி வெளியே குதித்துக் கரையருகே படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினான். முதலில் இஸ்மாயில் - கசாப் இறங்கினார்கள். லைப் ஜாக்கெட், வாட்டர் புரூப் டிரவுசரைக் கழற்றிக் கடலில் எறிந்தார்கள். பின்னர் கசாப் தனது ஷூக்களை அணிந்துகொண்டான். கசாப் - இஸ்மாயிலை அடுத்து மற்றவர்களும் படகை விட்டு இறங்கினார்கள். அப்போது மணி இரவு 9. குறித்த நேரத்தைவிட 90 நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.வாசகர் கருத்து

y raman - london,இந்தியா
30-ஜூலை-201419:08:49 IST Report Abuse
y raman கதைகள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது , மற்றும் விசேஷமாக . எப்படி திருட வேண்டும் எப்படி ஆளை மடக்க வேண்டும் ,எப்படி பொய் சொல்லி படகை ,பிறரை ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டும் என்பதை பாடம் சொல்லி கொடுப்பது போல் உள்ளது , இதிலிருந்து நான் தெரிந்துக்ண்டதுஎன்னவென்றால் , இப்படியெல்லாம் திருடலமா என்றுதான் . பொது உங்களது முழு விபரம் இவரது திருட்டுத்தநதி பற்றி , எனக்கு இப்போவே திருடனும்னு ஊகம் வந்து விட்டது அந்த அளவுக்கு உங்களுடைய கதை யின் விளக்கம் சுவாரஸ்யமாகவும், எங்களை திருடுவதற்கு ஊக்குவிப்பதுமாக உள்ளது , வாழ்க தினமலர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X