எஸ்கேப் ஆன் 7 பேரு: எகிறும் போலீஸ் ஆபிசர் யாரு?| Dinamalar

எஸ்கேப் ஆன் 7 பேரு: எகிறும் போலீஸ் ஆபிசர் யாரு?

Added : பிப் 18, 2014
Share
''அக்கா! இந்தா...ஸ்வீட் எடுத்துக்கோ!,'' என்று உற்சாகமாய் துள்ளிக்குதித்தபடி, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா. ''என்னடி! புதுசா ஏதும் புரமோஷன் கிடைச்சிருக்கா...?,'' என்று கேட்டபடி, ரசகுல்லா ஒன்றை எடுத்து வாயில் போட்டாள் சித்ரா. ''அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா...போன வாரம் நாம பேசிட்டிருந்த பல விஷயங்களுக்கு நல்ல 'ரிசல்ட்' கிடைச்சிருக்கு; உளவு பார்த்து
எஸ்கேப் ஆன் 7 பேரு: எகிறும் போலீஸ் ஆபிசர் யாரு?

''அக்கா! இந்தா...ஸ்வீட் எடுத்துக்கோ!,'' என்று உற்சாகமாய் துள்ளிக்குதித்தபடி, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.


''என்னடி! புதுசா ஏதும் புரமோஷன் கிடைச்சிருக்கா...?,'' என்று கேட்டபடி, ரசகுல்லா ஒன்றை எடுத்து வாயில் போட்டாள் சித்ரா.


''அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா...போன வாரம் நாம பேசிட்டிருந்த பல விஷயங்களுக்கு நல்ல 'ரிசல்ட்' கிடைச்சிருக்கு; உளவு பார்த்து சம்பாதிச்ச இன்ஸ்பெக்டர் சாரை, இங்கயிருந்து வேதாரண்யத்துக்கு தூக்கி அடிச்சிட்டாங்க; அப்புறம்...வடவள்ளியில போலி பில்டிங் அப்ரூவல் கொடுத்த விவகாரத்துல, 4 லட்ச ரூபா கை மாறுனதா பேசுனோமே; அவரையும் 'அரெஸ்ட்' பண்ணிட்டாங்க,'' என்றாள் மித்ரா.


''பரவாயில்லையே...! ஆனா, ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு, போலி வரைபடம் தயாரிச்சு மோசடி பண்ணுனது எல்லா விவகாரத்துலயும் கார்ப்பரேஷன் கொடுத்த 'கம்பிளைன்ட்' மேல, எந்த நடவடிக்கையும் எடுக்கிறதேயில்லைன்னு பெரிய ஆபீசர் புலம்புறாங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் பெரிய ஆபீசரைப் பார்த்தாத்தான் காரியம் நடக்குதாம்,''


''அது சரிக்கா...! இந்த ஊர்லயே மாத்தி மாத்தி ஒவ்வொரு ஸ்டேஷனா 'டேரா' போட்ட பல போலீஸ் ஆபீசர்களை மாத்திட்டாங்க; ஆனா, பட்டியல்ல முதலிடத்துல இருக்கிற 'பவர் ஸ்டார்லு'ஆபீசரை மட்டும் மாத்த மாட்டேங்கிறாங்களே...எப்புடி?,''


''அவருக்குதான், செகரட்டேரியட்ல இருந்து 'ரெகமண்டேஷன்' வருதாமே...'நான் எங்க போகணும்னு முடிவு பண்ணிட்டு, அங்கதான் போவேன்'னு அந்த ஆபீசர் 'தெனாவட்டா' சொல்றாருன்னு இன்னொரு போலீஸ் ஆபீசர் புலம்புறாரு,'' என்றாள் சித்ரா.


''இவராவது புலம்புறாரு; இங்கயிருந்து சேலம் சரகத்துக்கு தூக்கி அடிச்சிருக்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர், 'என்னை மட்டும் இவ்வளவு தூரத்துக்கு மாற்றியிருக்கிறீர்கள்; அதே ஊரில் பல ஆண்டுகளாக பணியாற்றும் 7ஆய்வாளர்களை ஏன் மாற்றவில்லை?'ன்னு கேட்டு, அந்த 7 பேரோட பேர்களையும் குறிப்பிட்டு, தூய தமிழ்ல சி.எம்., செல்லுக்கு பெட்டிஷன் போட்ருக்காராம்,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.

''இந்த 7 பேரை மட்டுமில்லை; எத்தனை ஆபீசர்களை மாத்துனாலும், உளவு பார்க்கிற முக்கிய ஆபீசர் மட்டும், எந்த 'டிஸ்டர்ப்'பும் இல்லாம, 'ரேஸ்'ல தனியா ஓடிட்டே இருக்காரே; அடுத்த வருஷம் ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் அவர்தான் 'கலெக்ஷன் கிங்'கா இருப்பார் போலிருக்கு...!,'' என்றாள் சித்ரா.


''அக்கா! நீயும் நானும் சேர்ந்தா சி.எம்.ஆயிரலாம்...!,'' என்று திடீரென புதிர் போட்டாள் மித்ரா.


''என்னடி உளர்ற...!, '' என்று கையிலிருந்த 'டெடிபியரை' மித்ரா மீது எறிந்தாள் சித்ரா.


''இல்லக்கா...நம்ம பேரோட முதல் எழுத்தை வச்சு, நம்மளுக்கு 'சி.எம்.'னு சுருக்கமா போலீஸ்ல பேரு வச்சுப் பேசிக்கிறாங்க; இது எப்படி இருக்கு?,''


''நல்லாத்தான் இருக்கு...! நீ சி.எம்.,ன்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது; இந்த பட்ஜெட்லயாவது கோயம்புத்தூருக்கு ஏதாவது திட்டம் அறிவிப்பாங்கன்னு பார்த்தா, ஒண்ணுமேயில்லையே; மோனோ ரயில் ஆய்வுக்கு 200 கோடின்னு சொல்லிருக்காங்க; ஆனா, அதுல கோயம்புத்தூருக்கு எவ்வளவுன்னே சொல்லலை...பார்த்தியா?,''

''ஆமாக்கா! ஸ்டாலின் சொன்னது மாதிரி, அநேகமா இதுவும் ஒரு 'அனவுன்ஸ்மென்ட்'டாத்தான் இருக்கப்போகுது,'' என்றாள் மித்ரா.

''கார்ப்பரேஷன் கமிஷனருக்கு எதிரா, நர்ஸ்கள் எல்லாம் போராட்டம் நடத்துனாங்களே...என்ன விஷயம்னு விசாரிச்சியா?,'' அடுத்த மேட்டருக்குத் தாவினாள் சித்ரா.


''ஓ....! பீளமேடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மையத்துல, ஜனவரி மாசத்துல 60 கர்ப்பிணிப் பொண்ணுங்க சிகிச்சைக்கு வந்திருக்காங்க; ஆனா, ஒரே ஒரு 'டெலிவரி' மட்டும்தான் நடந்திருக்கு; மத்த 59 பேரையும், இவுங்களே பிரைவேட் ஆஸ்பிடலுக்கு அனுப்பி விட்ருக்காங்கன்னு தகவல்; அதைக் கேள்விப்பட்டுதான், 'உங்களுக்கெல்லாம் கார்ப்பரேஷன்ல சம்பளம் வாங்க கை கூசலையா?'ன்னு 'சுருக்'ன்னு நெஞ்சுல தைக்கிறது மாதிரி மேடம் கேட்ருக்காங்க; அடுத்து ஏதாவது 'சஸ்பெண்ட்்' பண்ணிருவாங்களோங்கிற பயத்துல, பிரச்னைய வேற மாதிரி திருப்பிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''எலக்ஷன் சூடு பிடிச்சிருச்சுடி...கோயம்புத்தூர்ல 'சிட்டிங் எம்.பி., நடராஜனுக்குதான் சீட்டாம்; பா.ஜ.,வுல வானதி சீனிவாசனுக்குதான் வாய்ப்புங்கிறாங்க; பொள்ளாச்சியை ம.தி.மு.க.,வுக்குக் கொடுத்தா, அங்க ஈஸ்வரன் நிப்பாருங்கிறாங்க...! டி.எம்.கே.,வுலதான் ஒரே குழப்பமா இருக்கு!,'' என்றாள் சித்ரா.


''எப்பிடியோ...இந்த முறையாவது, கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைச்சா நல்லாயிருக்கும்,'' என்றாள் மித்ரா.

''ஏய்...! ஒரு முக்கியமான போலீஸ் மேட்டரை மறந்துட்டேன்டி...ஏலச்சீட்டு நடத்தி, 130 கோடி ரூபா மோசடி பண்ணுன நகைக்கடை சகோதரர்களை மிரட்டியே...ஒரு போலீஸ் ஆபீசர் செமத்தியா 'செட்டில்' ஆயிட்டாராம்; அவர் யாரு தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


''நான் யோசிச்சுச் சொல்றேன்...இப்போ, கெளம்புறேன்; எனக்கு நிறையா வேலை இருக்கு,'' என்று வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X