கேரளா செல்லும் ஆளுங்கட்சியினர்; பதைபதைப்புடன் சுற்றும் பிரமுகர்கள்

Added : பிப் 18, 2014 | |
Advertisement
பூண்டி தேர்த்திருவிழாவுக்கு போயிட்டு களைப்பா வந்த மித்ராவுக்கு, ஜூஸ் கொடுத்து வரவேற்றாள் சித்ரா."கோவில் திருவிழாவில் ஏதாவது பேசிக்கிட்டாங்களா,'' என, சித்ரா விவாதத்தை துவக்க, "திருப்பூரில் இருக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், அமாவாசை, பவுர்ணமி வந்தால், கேரளா போயிடுறாங்க. பணிக்கர்களை சந்தித்து, நேரம் நல்லா இருக்கான்னு கேட்டு மனசை தேத்திக்கிறாங்க. சிலர், உள்ளூர்ல
கேரளா செல்லும் ஆளுங்கட்சியினர்; பதைபதைப்புடன் சுற்றும் பிரமுகர்கள்

பூண்டி தேர்த்திருவிழாவுக்கு போயிட்டு களைப்பா வந்த மித்ராவுக்கு, ஜூஸ் கொடுத்து வரவேற்றாள் சித்ரா.


"கோவில் திருவிழாவில் ஏதாவது பேசிக்கிட்டாங்களா,'' என, சித்ரா


விவாதத்தை துவக்க, "திருப்பூரில் இருக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், அமாவாசை, பவுர்ணமி வந்தால், கேரளா போயிடுறாங்க. பணிக்கர்களை சந்தித்து, நேரம் நல்லா இருக்கான்னு கேட்டு மனசை தேத்திக்கிறாங்க. சிலர், உள்ளூர்ல இருக்கும் சித்தர்கள் காலில் விழுந்து கிடக்குறாங்க. எந்த நிமிஷத்துல என்ன அறிவிப்பு வருமோன்னு டென்ஷனோட சுத்துறாங்க. அதனால, எதிரிகளை சரிக்கட்ட, எந்திரத்தகடோடு சுத்திக்கிட்டு இருக்காங்க,'' என்று கொட்டித்தீர்த்தாள் மித்ரா.


"ஆளுங்கட்சிக்காரங்களுக்கு எப்பவுமே பதவி நிரந்தரமில்லையே,'' என, சொன்னவாறு, "லோக்சபா தேர்தல் கூட்டணி மேட்டர் ஏதாச்சும் தெரியுமா?,'' என அடுத்த கேள்வியை வீசினாள் சித்ரா.


"கூட்டணியை பற்றி எதிர்க்கட்சிக்காரங்கதான் கவலைப்படணும். எப்படியும், திருப்பூர் தொகுதி நமக்குத்தான்னு, ஆளுங்கட்சிக்காரங்க தெம்பா இருக்காங்க. திருப்பூர் தொகுதிக்கு லேடி வேட்பாளரை நிறுத்துவாங்கன்னு பேசுறாங்க. மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில், நாலு தொகுதி, ஈரோடு மாவட்டத்துல வர்றதுனால, அந்தப்பக்கத்தை சேர்ந்த, லேடியை நிறுத்துவாங்கன்னு பேசிக்கிறாங்க. ஆனா, ஆளுங்கட்சியில எப்ப வேண்டுமானாலும் மாற்றம் வரும்ங்கிறதால, எதையுமே உறுதியா சொல்ல முடியலை,'' என்றாள் மித்ரா.


"அரசியல்வாதி மாதிரி நடந்துக்காம, யதார்த்தமா இருந்ததால, அவரை யாருமே மதிக்கலை,'' என பொடி வைத்து, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


"ஏன், என்னாச்சு? யாரை யார் மதிக்கலை,'' என கேள்வியை மித்ரா அடுக்க, "பொறுமையா கேளு, திருப்பூர் தெற்கு தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். தொகுதிக்குள்ள எந்த விழா நடந்தாலும், தன்னை அழைக்கிறதில்லைன்னு புலம்பிக்கிட்டு இருந்தார். கொஞ்ச நாளைக்கு முன்னால, கலெக்டரை கண்டிச்சு அறிக்கையும் விட்டார். ஆனா, யாருமே கண்டுக்கல. ரெண்டு நாளைக்கு முன்னால, எல்.ஆர்.ஜி., காலேஜில் பட்டமளிப்பு விழா நடந்துச்சு. அழைப்பிதழில் பெயர் கூட போடலை; இருந்தாலும், தொகுதிக்குள் வருதுன்னு அழையா விருந்தாளியா கலந்துக்கிட்டார். மாணவியர் அமர்ந்திருந்த வரிசையில் உட்கார்ந்திருந்தார். அரை மணி நேரத்துக்கு பிறகு, பட்டமளிப்பு குழு வந்ததும், மேடைக்கு அழைச்சாங்க. ஒரு மணி நேரத்துக்கு மேல இருந்துட்டு, அமைதியா கௌம்பி போயிட்டாரு,'' என்றாள் சித்ரா.


"அதெல்லாம் சரி... எதிர்க்கட்சிக்காரங்க மேட்டர் ஏதாவது இருக்கா,'' என கேள்வி எழுப்பினாள் மித்ரா.


"தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தால் மட்டுமே காங்கிரசையும் சேர்த்துக்குவாங்களாம். இல்லைன்னா, காங்கிரசையும் சேர்க்காம, துணிச்சலா தேர்தலை சந்திப்பாங்களாம். தி.மு.க., - காங்கிரஸ், தே.மு.தி.க., கூட்டணி உறுதியானால், திருப்பூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்துடுவாங்க. அதில், தொகுதியை கைப்பற்றுவதில், தே.மு.தி.க.,வுக்கும், காங்கிரசுக்கும் போட்டி இருக்கும்னு பேசிக்கிறாங்க. ஏன்னா, கடந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே 85 ஆயிரம் ஓட்டுதான் வித்தியாசமா இருந்துச்சு. தே.மு.தி.க., வேட்பாளர் 87 ஆயிரம் ஓட்டு வாங்கியிருந்தார். அந்த ஓட்டுக்கணக்கை, இப்ப, கூட்டிக்கழிச்சு பார்க்குறாங்க. ஆனா, கூட்டணி அமையாவிட்டால், தி.மு.க.,வே நேரடியா போட்டியிடும். அப்ப, யாரை நிறுத்துறதுன்னு, வேட்பாளரை தேடிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X