மோடி கூட்டங்களுக்கு சேவை வரி: பா.ஜ., கடும் கண்டனம்

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (79)
Advertisement
மோடி கூட்டங்களுக்கு சேவை வரி: பா.ஜ., கடும் கண்டனம்

புதுடில்லி : 'பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கூட்டங்களில் பங்கேற்பவர்களிடம், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதற்கு சேவை வரி செலுத்த வேண்டும்' என, பா.ஜ.,வுக்கு, மத்திய கலால் வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.

மத்திய கலால் வரித் துறை இயக்குனரகத்தின், லூதியானா பிரிவு சார்பில், பஞ்சாப் மாநில பா.ஜ.,வுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:சேவை வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில், மோடியின் பெயரோ, பா.ஜ.,வின் பெயரோ, இடம்பெறவில்லை. எனவே, பா.ஜ., சார்பில், மோடி பங்கேற்கும் கூட்டங்களுக்கு, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதற்கு சேவை வரி செலுத்த வேண்டும்.கடந்த, 2012, ஜூன் மாதத்தில் இருந்து, மோடி பங்கேற்ற பல கூட்டங்கள் இங்கு நடந்துள்ளன. எனவே, அவற்றுக்கு சேவை வரி செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி, கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், ''நரேந்திர மோடியை சமாளிப்பதற்கு, ஒரு விசித்திரமான நடவடிக்கையை, காங்., தலைமையிலான, மத்திய அரசு, கண்டுபிடித்துள்ளது. மோடி பங்கேற்கும் கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதன் மூலம், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, நிதி அமைச்சர் முயற்சிக்கிறார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
19-பிப்-201420:42:53 IST Report Abuse
N.Purushothaman நாட்டை பத்து வருஷமா சுரண்டின காங்கிரஸ் கட்சி மேல சுரண்டல் வரி போடலாமுன்னு நாங்க முடிவு செஞ்சிருக்கிறோம்........சம்மனை சிவகங்கைக்கு அனுப்பனுமா அல்லது டெல்லிக்கு அனுப்பனுமா ????. சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Leiden,நெதர்லாந்து
19-பிப்-201418:11:23 IST Report Abuse
Dynamo கூட்டதுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்தால், சேவை வரி தான் போடுவாங்க. DMK மாநாட்டுக்கும் போடணும்....
Rate this:
Share this comment
Cancel
Raguraman M - Chennai,இந்தியா
19-பிப்-201417:03:30 IST Report Abuse
Raguraman M நீங்கள் என்னதான் வரி போட்டாலும், உங்க வயித்திலயும் வாயிலையும் அடிச்சுக்கிட்டாலும் திரு மோடி அவர்களை உங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது... இந்த மாதிரி அல்பத்தனமக யோசிப்பதை விட்டுவிட்டு, முடிந்தால் மீதம் இருக்கிற ஒன்றிரெண்டு மாதங்களை எப்படி ஊழல் இல்லாமல் ஆட்சியை நடித்தி முடிப்பது என்று கொஞ்சம் யோசியுங்கள் பாப்போம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X