பொது செய்தி

இந்தியா

இத்தாலி கடுப்பு: தூதரை திரும்ப அழைக்கிறது

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (7)
Share
Advertisement
இத்தாலி கடுப்பு: தூதரை திரும்ப அழைக்கிறது

புதுடில்லி:கடற்படை வீரர்கள் மீதான வழக்கை இழுத்தடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் தூதரை, இத்தாலி அரசு திரும்ப அழைத்து கொண்டது.

கடந்த, 2012ல், கேரளாவின், கொச்சி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த, நம் மீனவர்கள் மீது, இத்தாலிய சரக்கு கப்பலுக்கு பாதுகாப்பாக வந்த, கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு மீனவர்கள், பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக, இத்தாலி வீரர்கள், இருவர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. கடற்படை வீரர்கள் இருவரும், டில்லியில் உள்ள, இத்தாலி தூதரகத்தில் தங்கி, விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். இதற்கிடையே, வழக்கின் விசாரணை தாமதமாவதற்கும், கடற்படை வீரர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும், இத்தாலி அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, 'இத்தாலி வீரர்கள் மீது, எந்த வகையான வழக்கை பதிவு செய்வது என்பது குறித்து, மத்திய அரசு, விரைவாக பதில் அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு, நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இத்தாலி வீரர்கள் மீது, எந்த வகையான வழக்கை பதிவு செய்வது என்பது குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்திடமிருந்து, இன்னும் பதில் வரவில்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை, வரும், 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இந்த நடவடிக்கையால், இத்தாலி அரசு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதுகுறித்து, இத்தாலி வெளியுறவு அமைச்சர் எம்மா பொனினோ, நேற்று கூறியதாவது:
இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணை, இழுத்தடிக்கப்படுகிறது. தேவையில்லாமல், கால தாமதம் செய்யப்படுகிறது. இதனால், இந்தியாவில் உள்ள இத்தாலி தூதரை திரும்ப அழைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கை, சுமுகமாக முடிப்பதற்கு தான், இத்தாலி முயற்சிக்கிறது. ஆனால், இந்திய அரசு தரப்பில், தாமதம் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM Reddy - Hyderabad,இந்தியா
19-பிப்-201409:13:18 IST Report Abuse
RM Reddy எங்களுக்கு ஒத்துவராது, மொதல்ல உன் பொண்ண (சோனியாவ) கூட்டிக்கின்னு போய்யா
Rate this:
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
19-பிப்-201407:29:07 IST Report Abuse
ஆரூர் ரங தூதர் சனிக்கிழமைதான் போவாராம். சனியானதால் தனியாகப் போகவேண்டாம். அப்படியே சோனியா குடும்பத்தையும் அழைத்து சென்றால் புண்ணியமாகப் போகும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-பிப்-201406:44:48 IST Report Abuse
Kasimani Baskaran இந்திய நீதிமன்றங்கள் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று கட்டளையிட ரோமாபுரிக்கு உரிமை இல்லை. தூதருக்கான பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை - அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களை எப்படி தூதரகத்தில் இருக்க அனுமதித்தார்கள்? காவலில் வைத்து விசாரணை நடத்தவேன்டியவர்களை தூதரகத்தில் வைத்திருப்பது தவறு. இத்தாலிக்காரர்களுக்கு மட்டும் ஏன் சட்டம் வளைந்து கொடுக்கவேண்டும்? இந்திய கடல் எல்லைக்குள் வந்த பின்னர் சோமாலிய கடல் கொள்ளையர் என்று சுட்டதாக சொல்வது சிறிதும் பொருத்தாத விஷயம். பின்னணியில் ஏதாவது ஆயுதக்கடத்தல் வேலையில் கூட ஈடுபட்டிருக் வாய்ப்புக்கள் அதிகம். இராணுவம் செய்திருக்க வேண்டிய வேலையை சாதாரண காவலர்கள் செய்ததால் நிறைய ஆதாரங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லை. தும்பியை விட்டுவிட்டு வாலை பிடித்த கதைதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X