லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தங்கள் கட்சி செல்வாக்கை காட்டிக் கொள்ளும் வகையில், மாநாடு நடத்தி வரும் அரசியல் கட்சிகள், கூட்டம் சேர்ப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை, 'சென்டிமென்ட்'டை கையில் எடுத்துள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள், தங்களின் பலத்தை காண்பித்து, தங்கள் அணிக்கு உதிரிக் கட்சிகளை வளைத்து போடும் வகையில், மாநாடு, கூட்டங்களை நடத்தி வருகின்றன.அந்த வகையில், தே.மு.தி.க., சார்பில், பிப்.,2 (ஞாயிற்றுக் கிழமை) உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பா.ம.க., சார்பில், லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில், ஞாயிற்றுக் கிழமையை மையப்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில், பெண்கள் கலந்து கொள்ளும், மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதில், வெள்ளி, சனிக்கிழமைகளில், தாலுகா மற்றும் சிறு நகரங்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளில் தொகுதியின் தலைமை இடம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.ஞாயிற்றுக் கிழமையான, பிப்.,16ல், திருச்சியில், தி.மு.க., மாநாடும், நெல்லையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மாநாடும் நடத்தப்பட்டது. பிப்ரவரியில் மட்டும் கடந்த வாரம் வரை, நான்கு மாநாடு, கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, ஞாயிற்றுக் கிழமையை மையப்படுத்தியே நடத்தப்பட்டுள்ளன.
அடுத்ததாக, வரும், 23ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சேலத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், மாநாடு நடத்தப்படுகிறது. அன்றைய தினமே, தமிழகத்தின் நான்கு நகரங்களில், ஜாதிய அமைப்புகள் சார்பிலும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அனைத்தும், ஞாயிற்றுக் கிழமை நடப்பதற்கு, கூட்டம் சேர்ப்பதே மைய நோக்கம் என்றாலும், அது சென்டிமென்ட் எனவும், கூறுகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமைகளில், மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தும் நிலையில், தங்களின் ஆதரவு அரசு அதிகாரிகள், தனியார் துறை ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள், அதிக அளவில் கலந்து கொள்வர். அதன் மூலம், கூட்டம் அதிகம் இருக்கும். அதை தங்களின் பலமாக கருதி, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள், கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவர் என்பதும் ஒரு ஐடியா வாம். இந்த, ஐடியா, லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக இருந்தால், சரிதான்.
.- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE