'எல்லாம் தொழிலாகி விட்டது; அரசு பணி மட்டும் விலக்கா?'அரசு ஊழியர் சங்கம் குமுறல்

Updated : பிப் 19, 2014 | Added : பிப் 18, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
'தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக செலவிடப்படுவதில்லை' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர், தமிழ்செல்வி தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த, சிறப்பு பேட்டி:அரசின் வருவாயில், பெரும்பகுதி, அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?அரசு நிர்வாகத்திற்கும்,
'எல்லாம் தொழிலாகி விட்டது; அரசு பணி மட்டும் விலக்கா?'அரசு ஊழியர் சங்கம் குமுறல்

'தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக செலவிடப்படுவதில்லை' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர், தமிழ்செல்வி தெரிவித்தார்.

'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த, சிறப்பு பேட்டி:
அரசின் வருவாயில், பெரும்பகுதி, அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?

அரசு நிர்வாகத்திற்கும், அரசு ஊழியர்களுக்கும். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு, அதிகம் செலவாகிறது என, பெரும்பாலானோர் கூறுகின்றனர். அரசில், நிரந்தர ஊழியர்களாக இருப்போர், நான்கு லட்சம் பேர்; தொகுப்பூதியம், மதிப்பூதியம் என, மாதம், 5,000 ரூபாய் வாங்குவோர், மூன்று லட்சம் பேர்.தமிழக மக்கள் தொகை, 8 கோடி; இவர்களுக்கு, நான்கு லட்சம் நிரந்தர அரசு ஊழியர்கள் போதுமா. இன்னும், மூன்று மடங்கு ஊழியர்கள் தேவை. அரசு துறையில், இரண்டு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு, அகவிலைப்படி அறிவித்து விட்டு, 260 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படுகிறது என்பர். ஆனால், 100 கோடி ரூபாயை, யாரும் வாங்குவதில்லை. அது, வேறு வகையில் செலவிடப்படுகிறது.தற்போது, ஓய்வூதியம் தனியாரிடம் சென்று விட்டது. ஒருவர், 20 வயதில், அரசு பணிக்கு வந்து, 58 வயதில், ஓய்வு பெறும்போது, இனி, எந்த வருமானமும் கிடையாது என்றால், என்ன செய்வார்? அரசு ஊழியர்களுக்கு, போதுமான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

சில பதவிகளுக்கு, தேவையின்றி, அதிக சம்பளம் வழங்கப்படுகிறதே?
மாதம், 6,000 ரூபாய், சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களும் உள்ளனர். ஆனால், குரூப் - ஏ, குரூப் - பி அதிகாரிகள், சாதாரண ஊழியர்களை விட, கூடுதலாக, 150 மடங்கு, சம்பளம் வாங்குகின்றனர்; அதை குறைக்க வேண்டும்.அதிகாரிகள், அமைச்சர்கள், மேலாண் இயக்குனர்கள், வாரியத் தலைவர்கள் ஆகியோரின் சம்பளம், அவர்களுக்கு, ஜீப், கார் வாங்கும் செலவு, காவல் துறைக்கான செலவு ஆகியவையும், அரசு ஊழியர் சம்பளத்தில் அடங்குகிறது.அரசு ஊழியர்கள் என, மொத்தமாக விமர்சிப்போருக்கு, உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை, சந்திக்கும் தைரியம் இல்லை. மக்களின் கோபம், கடைமட்ட ஊழியர்களோடு முடிந்து விடுகிறது. நிரந்தர அரசு ஊழியர்களில், 10 சதவீதம் பேர், 25 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து, பணி வரன்முறை செய்யாததால், நயா பைசா இல்லாமல், வீட்டுக்கு செல்கின்றனர்.

அரசுப்பணி என்பது சேவைப்பணி என்ற நிலை மாறி, அரசுப் பணியும் தொழிலாக மாறிவிட்டதே?
லஞ்ச பிரச்னையில், நாங்களே பாதிக்கப்படுகிறோம். அரசியல் என்பது சேவை; அதுவே தொழிலாக மாறிவிட்டது. சமூகப் பணிகளும், தொழிலாகி விட்டன. இதில், அரசு பணி மட்டும் விலக்கல்ல. நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் போதுமானதாக இல்லை. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, யாருடைய பாக்கெட்டுக்கோ செல்கிறது; இதில், வெளிப்படைத்தன்மை இல்லை. பண மதிப்பை பார்க்கின்றனர்; யாருக்கு போகிறது என, பார்ப்பது இல்லை; எங்களுக்கும் தெரிவதில்லை.அரசு ஊழியர் சம்பளம், மார்க்கெட்டிற்கு வந்து விடுகிறது. ஆனால், அரசு பணியை இயக்க, கணிசமான தொகை செல்கிறது. அதில், பாதி பணம், கொள்ளை அடிக்கப்படுகிறது.திட்டத்திற்கு ஒதுக்கப்டும் பணத்தில், பெரும்பகுதி,கொள்ளை அடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களை, ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது; தவறு செய்வோரை, திருத்தணும் அல்லது தண்டிக்கணும்.

சில துறைகள் தேவையே இல்லை என்ற நிலை உள்ளதே?
ஒவ்வொரு ஆண்டும், துறை வாரியாக, ஆய்வு செய்ய வேண்டும். எங்கெல்லாம் தேவையின்றி, ஊழியர்கள் உள்ளனரோ, அவர்களை தேவைப்படும் இடங்களுக்கு, மாற்ற வேண்டும். பெரும்பாலான துறைகள், அரசியல்வாதி களின் ஏவல் துறையாக மாறிவிட்டதால், இதுபோன்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு, தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழ்செல்வி
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
19-பிப்-201418:33:08 IST Report Abuse
Chenduraan நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் போதுமானதாக இல்லை என்றால் குடும்பத்துடன் போய் வேறு வேலை செய்யுங்கள் அல்லது தொழில் செய்யுங்கள். வாங்குகிற பணத்துக்காவது வேலை செய்யுங்கள். உங்களை விட 90% மக்கள் வருமானம் குறைவே. அந்த 90% மக்களிடம் அல்லவா உங்கள் அதிகாரத்தை காட்டி கொள்ளை அடிக்கிறீர்கள். கொஞ்சமாவது மனச்சாட்சி உண்டா. +2 படித்து விட்டு வேலைக்கு சார்ந்தால் போதும் 10 வருடம் கழித்து மாதம் 30000 இது போதாதா..இது போக retired ஆனா பிறகு 50% சம்பளம் பென்சொனாக வருகிறது. எல்லாம் ஓட்டுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பண்ணிய திருவிளையாடல் நீங்கள் உங்கள் தகுதிக்கு மேல், உழைப்புக்கு மேல் வாங்குகிறீர்கள். இது உங்களுக்கு போதாது.. லஞ்சம் வாங்குகிற நீங்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒரு அட்டை மாதிரி ( நேர்மையாக, லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிற மகான்களுக்கு என் தலை தாழ்த்திய வணக்கங்கள். )
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
19-பிப்-201417:38:40 IST Report Abuse
Rajarajan லஞ்சத்தால் நீங்கள் பாதிக்கபடுவதாக குறிபிட்டுள்ளீர்கள். உங்களுக்கில்லாத செல்வாக்கா ??? உங்களிடம் லஞ்சம் கேட்பவரை நீங்கள் ஏன் தண்டிக்கவில்லை ??? அப்படியென்றால் நீங்கள் மறைமுகமாக அதை ஊக்குவிக்கிறீர்கள் என்றுதானே பொருள் ??? பின்னர் பொதுமக்களுக்கு மட்டும் ஏன் உபதேசம் ???? 20 வயது என்பது படிக்கவேண்டிய வயது, 20 வயதுக்குள் அப்படி என்ன படித்துவிட முடியும் ??? சாதாரண பட்டம் முடிக்கவே (தொடர்ந்து FAIL ஆகாமல் படித்தாலே), 21-22 வயது ஆகிவிடும். அதற்கு பின்னர் குறைந்தபட்சம் 25 வயது வரை உயர்கல்வி படிக்கவேண்டாமா ??? பெரிய பதவிக்கு பின்னர் எப்படி செல்ல முடியும் ??? தகுதி இருந்தால் தானே உயர்பதவிக்கு போகமுடியும் ??? தனியார் ஊழியர் பணிஓய்வு பெற்றபின் அவருக்கு ஏது ஓய்வூதியம் ??? அவர் வாயை கட்டி, வயிற்றை கட்டி தானே சேமிக்கிறார் ?? அவர்கள் புலம்புவதில்லயெ ??? அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் கல்வி / திருமணம் எல்லாம் உண்டே ??? தங்கள் எதிர்கால வயிற்றுபாட்டிக்கும் செமிக்கின்றனரெ ?? இதுதவிர, 40+ வயதிலும், மாலைகல்லூரியில் சேர்ந்து செலவு செய்து படித்து திறமையை வளர்க்கின்றனரே ??? அவர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லையே ??? குறைந்தபட்சம் 10 மணிநேர வேலை. MARKETING / CE0 / DIRECTOR போன்ற உயர்பதவி வகிப்பவர்கள், பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு, ஊர் ஊராக / நாடு நாடாக அடிக்கடி சென்று திரும்புகின்றனரே ???? இதையெல்லாம் நீங்கள் ஏன் உங்கள் ஊழியருக்கு எடுத்து சொல்லி EDUCATE செய்வதில்லை ??? தொடர்ந்து போராட மட்டுமே கற்றுக்கொடுக்கின்றீர்கள் ??? உங்கள் தொழில் சேவை இல்லை என்பதை ஒதுக்கொண்டமைக்கு நன்றி. இது அனைவருக்கும் பல வருடங்களாக தெரிந்த உண்மை. சேவையாக பார்க்காத பிறகு எப்படி உங்களால் மனநிறைவோடு பொதுமக்களுக்கு சேவை செய்யமுடியும் ??? உங்கள் கோபம் பொதுமக்கள் மீதுதானே திரும்புகிறது ??? அவர்கள்மீது தானே உங்கள் கோபத்தை திணிக்கிறீர்கள் ???? அதிகாரவர்கத்திடம் உங்கள் கோபம் செல்லுபடி ஆகுமா ??? பின்விளைவுகள் நீங்கள் அறிந்ததே ?? வியாபாரம் என்று வந்துவிட்ட பின்னர் சேவை துறையில் தனியாரை ஏன் ஊக்குவிக்கக்கூடாது ??? நீங்கள் நன்றாக வியாபாரம் செய்தால், பொதுமக்கள் உங்களை தானே விரும்புவர். பின்னர் தனியார் துறையை பார்த்து நீங்கள் ஏன் பயந்து எதிர்க்கவேண்டும் ??? தனியார் என்றால், மாற்றம் / வளர்ச்சி / திறமையை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அரசு வேலை என்றால் அந்த தேவை இல்லை. அது உங்கள் துறை சம்பந்தப்பட்ட விஷயம். அதை ஏன் எங்களிடம் கூறவேண்டும் / கோபத்தை காட்டவேண்டும் ??? உங்களை தனியார் துறைக்கு விரும்பி வரவேற்கிறோம். வாருங்கள் உங்கள் சேவையை தாருங்கள். உங்கள் திறமை மதிக்கப்படும். கல்வி தகுதி / திறமை / தொடர்ந்து முன்னேறும் மனப்பான்மை ஆகியவை VALID செய்யப்பட்டு, மென்மேலும் பல நிறுவனங்களில் உங்கள் திறமை மதிக்கப்பட்டு, கூடிய விரைவிலேயே உயர் பதவி அடைவீர்கள். தனியார் ஊழியர்களை உங்களுடன் போட்டிக்கு அழைத்து அவர்களை வெற்றி கொள்ளுங்கள். வாழ்க உங்கள் திறமை / வெல்க உங்கள் முயற்சி. முடிவு உங்கள் கையில். யதார்த்தம் / நிதர்சனம் என்றும் சுடும்.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
19-பிப்-201410:29:12 IST Report Abuse
Rajarajan சம்பிரதாயத்துக்காக சொன்னாலும், அருமையா சொன்னீங்க, வாழ்த்துக்கள். தவறு செய்யும் அரசு ஊழியரை திருத்தனும் இல்லன்ன தண்டிக்கணும்னு. எங்கே நீங்களே இந்த உன்னத முயற்சிய ஆரம்பிச்சு வெய்யுங்க பாப்போம் ?? எத்தன பேரை இப்படி பண்ணமுடியும் ??? உங்க தொழிற்சங்கம் உங்களை சும்மா விடுமா ??? தனியார் துறைல நீங்க சொல்றது மிக மிக சாத்தியம். நீதிமன்றம் மூலம் ஒரு NOTICE அனுபிச்சா போதும், சம்பந்தபட்டவங்க ஓடி வந்து தவறை திருத்தி, மன்னிப்பு கேப்பாங்க. இல்லன்ன அவர் பதவி அன்றே பறிக்கப்படும் அல்லது அலவலகம் மூடப்படும் அல்லது இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அரசு அலுவலகத்தை மூட முடியுமா ??? / அல்லது தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்தமுடியுமா ??? அரசு அலவலகம் நாடி வரும் பொதுமக்களை ஓருமைல திட்டறது, தரகுறைவா பேசறது, எங்கவெனாலும் போய் சொல்லு, ஒன்னும் பண்ணமுடியாதுன்னு ஆணவமா சொல்றது, விவரம் கேட்டா சுத்தி விடறது போன்ற நிகழ்சிகள். இதுமட்டுமா, எத்தனதடவ apply பண்ணினாலும், application தொலைக்கறது, விவரம் கேட்டா தெரியாதுன்னு பொத்தாம் பொதுவா சொல்றதும், தனியா கூப்பிட்டு அல்லது இடைத்தரகர்கள் மூலம் பேரம் பேசறது, இதுக்கு ஒதுவரலன்ன, வேலைய கிடப்பிலேயே போடறது. ஒரே ஒரு உதாரனத்திற்க்கு, பாஸ்போர்ட் துறை (சென்னை) இப்ப போய் பாருங்க. ONLINE வர்ரதுகுமுன்னால, அங்க இருந்த கடைநிலை ஊழியர்கள் மோசமா நடந்துகிட்ட விதம், பொதுமக்களை ஓருமைல திட்டி, கேவலமா பேசி அவமானபடுதினர். இப்ப நிலைமையே தலைகீழ். ONLINE மற்றும் தனியார் வந்த அப்பறம், வீட்டிலிருந்தபடியே appointment நேரம் முன்னரே பெற்று, அங்க படித்த தனியார் ஊழியர்கள் பணிவா பேசறதும், மரியாதையா பதில்சொல்றதும், நாங்கள் உதவுகிறோம் என்று ஒத்துழைப்பதும், ஒரே மணி நேரத்தில் எல்லா வேலையும் முடித்து நிம்மதியா வரமுடியுது. மனசாட்சி தொட்டு சொல்லுங்க. உங்க வீட்ல கூட, அடுத்த தலைமுறையினர் இந்த வித எளிய / ஒழுக்கமான நடைமுறயதான விரும்புவாங்க ??? அதனாலதான, அரசு ஊழியரா இருந்தாலும், தனியார் பள்ளில பணம் கட்டி படிக்கவெக்கரீங்க ????? எல்லாவற்றிலும் தரம் தான் வேணும்னு எல்லோருக்கும் தெரியும், அதைதான் நேரடியாகவோ / மறைமுகமாகவோ விரும்புகிறோம். ஆனா ஒரு சிலருக்கு, வெளிய சொல்ல தன்மானம் இடம் கொடுக்கறதில்ல. அவ்ளோதான். காலத்திற்கேற்றாற்போல் நம்மையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இது. அடுத்து கட்டம் / அடுத்த தலைமுறையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லையேல், தனித்துவிடபடுவோம். தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைசுடும். இங்கு பகிர்ந்தவை அனைத்தும் முற்றிலும் அனுபவத்தை சார்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X