சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடியிசமும்...பாதுகாப்பில்லாத போலீசாரும்..

Added : ஏப் 28, 2010
Share
Advertisement

சாத்தூர் : லத்தியுடன் பாதுகாப்பற்ற நிலையில் பந்தோபஸ்துக்கு சென்றதால், போலீஸ்காரர் நாகரத்தினம் நிராயுதபாணியாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


படுகொலை செய்யப்படுவதற்கு முன் போலீஸ்காரர் நாகரத்தினத்துடன் பேசிக் கொண்டிருந்த, சக போலீஸ்காரர் தம்பித்துரை கூறியதாவது: ஓ.மேட்டுப்பட்டி கோயில் திருவிழா, பந்தோபஸ்து பணிக்கு லத்தியுடன் சென்ற நாங்கள் இருவரும், நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கிருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டோம். பின் அங்கிருந்த மடம் அருகேயிருந்த இரண்டு சேரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "சத்' என்ற சப்தம் கேட்டது. அருகிலிருந்த நாகரத்தினம், சரிந்து கீழே விழுந்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே பின்னால் திரும்பிப்பார்த்தேன். "எங்கள் மீது வழக்கு போட்டு தேடிக்கொண்டிருந்தவர்கள்' நீங்கள் தானே என்ற கூறியபடி ஒருவன், அரிவாளுடன் ஓடினான். அவனை துரத்திக் கொண்டு ஓடினேன். மக்களும் சிதறி ஓடினர். அந்தக்கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டான். உடனே நாகரத்தினம் விழுந்த கிடந்த இடத்திற்கு திரும்பி ஓடிவந்தேன். அவரை ஜீப்பில் ஏற்றி சாத்தூர் கொண்டு வந்தேன். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எல்லாம் ஒருநிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது. நாகரத்தினம் மிகவும் அமைதியானவர். அதிர்ந்து பேசமாட்டார். என்ன வேலை சொன்னாலும் உடனே செய்வார்,'' என்றவாறு கண் கலங்கினார்.


பாதுகாப்பில்லாத போலீசார்: பொதுவாக பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸ்காரர்கள் லத்தியுடன் தான் செல்வது வழக்கமாக உள்ளது. அவர்களது பாதுகாப்பிற்கு கூட ஆயுதங்களை எடுத்து செல்வதில்லை. கலவரம் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது தான் துப்பாக்கி எடுத்த செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஜன., 7ம் தேதி அம்பாசமுத்திரத்தில் வெற்றிவேல் எஸ்.ஐ., ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், சாத்தூர் சம்பவங்கள் போலீசாருக்கே பாதுகாப்பில்லை என்பதையே உணர்த்துகின்றன. இனியாவது பாதுகாப்புக்கு செல்லும் போலீசாருக்கு ஆயுதங்கள் எடுத்து செல்ல வலியுறுத்த வேண்டும். பாதுகாப்பிற்கு செல்லும் போலீசார், ஒதுக்குப்புறமாக ஒதுங்கி நிற்பது, அமர்வதை தவிர்க்க வேண்டும். பணியில் இருக்கும் போலீசாரையே வெட்டி சாய்க்கும் துணிச்சல் உள்ள ரவுடிகளை என்கவுன்டர் செய்வதில் தயக்கம் காட்டக்கூடாது.


தொடரும் சோகம்: மேலும் மனைவி புவனேஸ்வரி, குழந்தைகள் கவுசி(14), சுவைதா(8) ஆகியோரிடம் மிகவும் பாசமாக இருந்தார். மனைவியின் சகோதரி இறந்துவிட்டதால் அவரது இரண்டு குழந்தைகளான ராதிகா(19), பிரியா(18) ஆகியோரின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை நாகரத்தினமே செய்து வந்துள்ளார். ஒரு ரவுடியின் வீண் ஜம்பத்திற்கு, ஒரு போலீஸ் குடும்பம் நிர்கதியாய் பரிதவித்து நிற்கிறது. ரவுடி குமார் மீது வழிப்பறி, மிரட்டல் உட்பட மூன்று வழக்குகள் சாத்தூர் தாலுகா போலீசில் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக ஒருவாரம் முன் குமாரை போலீசார் பிடித்துள்ளனர். பின் யாரோ கொடுத்த ஜாமீனில், குமாரை வெளியே விட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் போலீசாருக்கு படிப்பினையை தர வேண்டும். ரவுடிகள் மீது தயவுதாட்சண்யம் காட்டக்கூடாது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தினமலர் டாட்.காம் என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். கிருஷ்ணமூர்த்தி எஸ்.பி., கூறியதாவது: கோயில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு செல்வோர், ஆயுதங்களை கொண்டு செல்வதில்லை. போலீஸ்காரர் நாகரத்தினத்தை கொலை செய்த குமார், ரவுடியல்ல. பிக்பாக்கெட் அடிப்பவர். போலீஸ்காரர்கள் மீதே தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X