பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம் வேளாண் அதிகாரி தகவல்

Added : பிப் 19, 2014
Advertisement


நாமக்கல்: "நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது' என, கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிக பட்சமாக, எட்டு மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது.ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடியுரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45வதுந ாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும்.ஜிப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவதுடன், காய்கள் திரட்சியாக பொக்கில்லாமல் கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X