14 சீட் தந்தால் கூட்டணி; இல்லையேல்...: தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., நிபந்தனை| DMDK wants 14 seats in DMK alliance, set conditions | Dinamalar

14 'சீட்' தந்தால் கூட்டணி; இல்லையேல்...: தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., நிபந்தனை

Added : பிப் 19, 2014 | கருத்துகள் (38)
Share
'எங்களுக்கு, 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில், பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடுவோம்' என, தி.மு.க.,வுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.திரைமறைவு: உள்ளாட்சித் தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றதால், விஜயகாந்தின், தே.மு.தி.க.,விற்கு, இந்த தேர்தலில், மவுசு உருவாகியுள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ்
DMDK, want,14 seats,DMK, alliance, conditions, 14 'சீட்',  கூட்டணி,தி.மு.க., தே.மு.தி.க., நிபந்தனை

'எங்களுக்கு, 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில், பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடுவோம்' என, தி.மு.க.,வுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.திரைமறைவு:

உள்ளாட்சித் தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றதால், விஜயகாந்தின், தே.மு.தி.க.,விற்கு, இந்த தேர்தலில், மவுசு உருவாகியுள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக, திரைமறைவு பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன. பா.ஜ., கூட்டணியில், ஏற்கனவே, ம.தி.மு.க., - -ஐ.ஜே.கே., -புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்றவை உள்ளன. பா.ம.க., மற்றும் என்.ஆர்., காங்., கட்சியை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அத்துடன், தே.மு.தி.க.,வையும், கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தன. ஆனால், இதற்கு, விஜயகாந்த் தரப்பில், சரியான பதில் தரப்படாததால், 'வந்தால் வரட்டும்... போனால் போகட்டும்...' என்ற, ரீதியில், பா.ஜ.,வினர் வெறுப்பில் உள்ளனர். பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தால், அதில், ஏற்கனவே இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., மற்றும் இனி இடம் பெற உள்ள, பா.ம.க.,வின் ஓட்டுகள், தங்கள் கட்சி வேட்பாளருக்கு, முழுமையாகக் கிடைக்காது என, விஜயகாந்த் நம்புகிறார். அதனால், பா.ஜ., உடன் கூட்டணி சேரும் விஷயத்தில், அதிக தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
நாடகம்:

அதேநேரத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இணைந்தால், எளிதில் வெற்றியை சுவைக்க முடியும் என, நினைக்கிறார். ஆனால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, அதிகபட்சமாக 10 'சீட்'கள் மட்டுமே, தர முன்வந்துள்ளனர். அதை சிறிதும் ஏற்றுக்கொள்ள விரும்பாத விஜயகாந்த், தி.மு.க.,விற்கு நெருக்கடி ஏற்படுத்தி, அதிக சீட்களைப் பெற விரும்புகிறார். அதற்காகவே, டில்லி சென்று பிரதமரை சந்தித்தது உட்பட, சில நாடகங்களை நடத்தினார். தற்போது, கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர், தி.மு.க.,விற்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வர வேண்டாம்:

இது பற்றி, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், இணைய வேண்டும் என்றால், 14 லோக்சபா தொகுதிகளை, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். கூட்டணி தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்திய, இரண்டு முக்கிய பிரமுகர்களிடம், இந்த நிபந்தனைகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை எனில், கூட்டணிக்காக என்று சொல்லி, தி.மு.க., தரப்பில், யாரும் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டாம். பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், 16 சீட்கள் வரை அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும், அந்த முக்கிய பிரமுகர்களிடம், அவர் சொல்லி அனுப்பியுள்ளார். விஜயகாந்தின், இந்த கோரிக்கையை, தி.மு.க., ஏற்றால், இரு கட்சிகள் இடையே கூட்டணி அமையும்; இம்மாத இறுதிக்குள், தொகுதி உடன்பாடுகளும் முடிவடையும். இனி, முடிவெடுப்பது, தி.மு.க.,வின் கையில் தான் உள்ளது. இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X