சல்லடை போட்டு தேடும் அ.தி.மு.க.,: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக வேட்பாளர் தேர்வு

Added : பிப் 19, 2014 | கருத்துகள் (67)
Share
Advertisement
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் கள் தேர்வு, தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக நடந்து வருகிறது. தகுதிக் குறைவானவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக, ஜெயலலிதா, இப்படிப்பட்ட கடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பதவி காக்க...: லோக்சபா தேர்தலில், அ.திமு.க., சார்பில் போட்டியிட,
ADMK, serious,candidate,LS poll, சல்லடை, அ.தி.மு.க., ஐ.ஏ.எஸ்., தேர்வு, வேட்பாளர், தேர்வு

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் கள் தேர்வு, தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக நடந்து வருகிறது. தகுதிக் குறைவானவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக, ஜெயலலிதா, இப்படிப்பட்ட கடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பதவி காக்க...:

லோக்சபா தேர்தலில், அ.திமு.க., சார்பில் போட்டியிட, 3,000க்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்து உள்ளனர். போட்டியிட விருப்பம் இல்லாதவர்களும், தகுதி இல்லாதவர்களும், தற்போதுள்ள பதவியை, காத்துக் கொள்ள, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, விருப்ப மனு கொடுத்தனர். எனவே, அனைவரையும், நேர்காணலுக்கு அழைக்க, கட்சி தலைமை விரும்பவில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு மாவட்டச் செயலரிடம் இருந்தும், மூன்று பேரை, பரிந்துரை செய்யும் படி கேட்டது. அவர்களும், தங்களுக்கு வேண்டியவர்களை, பரிந்துரை செய்தனர். அதன்பின், விருப்பமனு கொடுத்தவர்களில், அவர்களின் தகுதிகள் அடிப்படையில், மற்றொரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
கண்டிப்பு:

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுஇருந்தவர்களை, முதற்கட்டமாக, ஐந்து பேர் அடங்கிய குழு, நேர்காணல் நடத்தியது. இந்தக் குழுவில், நிபுணர்கள் சிலர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களின் பெயர் விவரங்களை, யாரும் வெளியில் சொல்லக்கூடாது எனவும், கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஐவர் குழுவின் முதற்கட்ட நேர்காணலை சந்தித்தவர்களில், தேறியவர்கள் சிலரிடம், இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக, ஜெயலலிதா நேர்காணல் நடந்தினார். அப்போது, ஆங்கிலத்தில் பேசும் திறன் உள்ளதா என, அவர் பரிசோதித்து உள்ளார். இந்தப் பரிசோதனையில், பலர் திணறியுள்ளனர்; திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன், வழக்கறிஞராக, 'பிராக்டீஸ்' செய்வதாக குறிப்பிட்டிருந்த சிலர், வெளிமாநிலங்களில், எல்.எல்.பி., பட்டம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. 'லோக்சபா எம்.பி.,யாக தேர்வாகி, டில்லி செல்பவர்கள், இப்படி வெத்து வேட்டுகளாக இருந்தால், பார்லிமென்டில் பேசவே பயப்படுவார்களே. பின் எப்படி, தமிழக பிரச்னைகளை எடுத்துரைப்பர்' என, கோபம் அடைந்து உள்ளார் ஜெயலலிதா. உடன், வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு உள்ள, முதற்கட்ட நேர்காணலை நடத்திய, ஐவர் குழுவிற்கு செம, 'டோஸ்' விட்டுள்ளார். இதன் காரணமாகவே, வேட்பாளர் நேர்காணல், சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், தற்போது, மீண்டும் ஒருமுறை, ஐவர் குழுவினர் தாங்கள் தயாரித்த பட்டியலில் உள்ளவர்களையும், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களையும் பரிசீலித்துள்ளனர்.
தகுதியான நபர்கள்:

அதாவது, ஒவ்வொரு நபரை பற்றிய விவரங்களையும், சல்லடை போட்டு அலசுவது போல அலசி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, ஆட்களை தேர்வு செய்வது போல, மிக மிக தகுதியான நபர்களை மட்டுமே தேர்வு செய்து, அவர்களை, முதல்வரிடம் நேர்காணலுக்கு அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின், அவர்களுக்கு எதிராக புகார்கள் குவிந்து, பின், பலரை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுவதை தவிர்க்கவே, இந்த ஏற்பாடு. சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் மீது, 'பேக்ஸ்' இயந்திரமே, நின்று போகும் அளவுக்கு, புகார்கள் குவிந்ததால், அவர் மாற்றப்பட்டார். அந்த நிலைமை, மீண்டும் உருவாகாமல் இருக்கவே, ஜெயலலிதா இந்த விஷயத்தில், கண்டிப் புடன் இருப்பதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
24-பிப்-201417:52:47 IST Report Abuse
எல்.கே.மதி இவ்வளவு பக்குவமாக தேர்வு செய்யும் ஜெயாவா, வளர்ப்புப்பிள்ளை தேர்ந்தெடுத்தபோது, கஞ்சா செடி வளர்ப்பில் கை தேர்ந்தவர் என்ற விவரம் தெரியாமலா போய்விட்டது? தமிழனையே இனி நம்பாமல், வெளி மாநில பட்டதாரிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கவும்.அப்போதுதான் அவர்கள் தற்போது உள்ள ஜால்ராக்களை மதிக்க மாட்டார்கள். மொழி இடையூறுகளினால், எந்த கல்லா கட்டும் வழியும் பிறக்காது அல்லவா?
Rate this:
Cancel
AlaguMuthu - riyadh,சவுதி அரேபியா
20-பிப்-201420:40:32 IST Report Abuse
AlaguMuthu முகஸ்துதி பேசும், வளையும், குனியும். காரியம் ஆனதும் மாறும். உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும். எந்த சிறந்த தலைவரும் முகஸ்துதி பேசுபவர்களை தன் அருகிலேயே அனுமதிப்பதில்லை.மாறாக நீங்களோ மணிக்கணக்கில் முகஸ்துதி பாடவைத்து அதைக்கேட்டு (தனக்கு தானே) ரசித்தும் கொண்டிருகிறீர்கள். உங்களின் பல நேரடி நிகழ்சிகளை பார்த்ததின் விளைவுதான் இந்த கடுமையான வார்த்தை. உங்களை பீடித்துள்ள இந்த கடுமையான தொற்று நோயிலிருந்து முதலில் மீண்டு வாருங்கள். நேர்மையான, தன்மானமுள்ளவர்களை தேர்ந்தெடுங்கள். அதே சமயம் அவர்களுடைய தன்மானத்துக்கு நூறு சதவிகித மதிப்பும் கொடுங்கள். பிறகென்ன, மனதளவில் (உடளவில் அல்ல) எப்போதும் உங்கள் காலுக்கு கீழ் விசுவாசமாக இருப்பார்கள்.
Rate this:
Cancel
Jayanthan - Bangalore,இந்தியா
20-பிப்-201419:39:22 IST Report Abuse
Jayanthan அம்மா அவர்களுக்கு ஒரு யோசனை. தற்போது, கழகத்தில் பதவியில் இருக்கும் MLA, MP களின் அமெரிக்காவில் உள்ள மகன் மற்றும் மகள்களை பிடித்து போட்டு MP தேர்தலில் நிறுத்துங்கள். இவர்களில், உங்களுடைய தேவைகளை புரிந்துகொண்ட வேலை செய்வர்களாக இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X