நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 16 ஆயிரத்து, 100 குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்படும் என, குடிநீர் பாதுகாப்பு வார விழா பேரணியில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று, குடிநீர் பாதுகாப்பு வார விழா பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, பேரணியை துவக்கி வைத்தார்.உடல் நலத்திற்கு உகந்த குடிநீர் பருகுதல், தரமற்ற தொற்று நோய் பரப்பக்கூடிய குடிநீரை தவிர்த்தல், குடிநீர் சிக்கனம் ஆகியவை குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், யூனியன் அளவில் சுகாதாரமான குடிநீர் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்படும். முகாமில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, நீர் மாதிரி தர பரிசோதனை பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 16 ஆயிரத்து, 100 குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். ஒருவார கால விழாவில், முதல்நாள் மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஊர்வலம், இரண்டாம் நாள் யூனியன் அளவில் விழிப்புணர்வு கூட்டம், மற்ற நான்கு நாட்களில், நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE