அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.,நீதி தாமதமானதாக புகார்

Added : செப் 25, 2010 | கருத்துகள் (16)
Share
Advertisement
அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.,நீதி தாமதமானதாக புகார்

புதுடில்லி:""அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில், நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே அந்தப் பிரச்னை முடிவடையாததற்கு காரணம்,'' என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் நிதின் கட்காரியின் வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், முரளிமனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, அலுவாலியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் நிருபர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு 61 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை ஏற்படுத்திய காலதாமதமே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னை முடிவடையாததற்கு காரணம்.கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுடன் தீவிரமாக கலந்து ஆலோசித்த பின்னரே இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன். குஜராத் சோம்நாத் கோவிலுக்கு செல்வதால், பா.ஜ., மேல் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அத்வானி பங்கேற்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ம் தேதி அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வார்.இவ்வாறு ஜெட்லி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - சென்னை,இந்தியா
25-செப்-201021:59:02 IST Report Abuse
பாலா பாபர் என்கிற வெளிநாட்டுக்காரன் நம் இந்தியாவை பிடித்த போது அதன் வெற்றி சின்னமாக கட்டிய ஒன்று இந்த பாபர் மசூதி. இது பாபருக்கு வேண்டுமானால் வெற்றி சின்னம். நமக்கு இது அவமான சின்னம். நாம் தோற்றதை நினைவு படுத்தும் சின்னம். இப்போ சொல்லுங்கள் ஒவ்வொரு இந்தியனும் இதை இடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?.இடிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் தேசத் துரோகிகள். நாளையே என் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்தியா மீது போர் தொடுத்தால் நான் எதிர்த்து நிக்கனுமா இல்லை நாட்டை விட்டு விட்டு என் மதத்தை சேர்ந்தவனுக்கு உதவி செய்வேனா.சிந்திக்கவும்
Rate this:
Cancel
syed - uae,இந்தியா
25-செப்-201021:47:42 IST Report Abuse
syed ஷினிவாசன் மஸ்கட்,கதைகளிலும்,கற்பனை காவியங்களிலும் வரக் கூடியதை கடவுள் என்று சொன்னால்,தொல்பொருள் ஆராச்சியாளர்கள் எப்படி அத்தாட்சி உள்ளது என்று சொல்வார்கள்?அவர்களெல்லாம் முட்டாள்களா?இதே போல் ராமர் பாலம் என்று சொன்னீர்கள்,அதிலும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லை என்றார்கள்.உடனே அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.பிரசனை செய்தார்கள்.இதெல்லாம் உங்களை போன்றவர்களை முட்டாளாக்கி,நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தி,அவர்கள் சுகம் அனுபவிக்கவே,உங்களை போன்ற ஆட்களை பயன்படுத்திகிறார்கள்.
Rate this:
Cancel
ஹுசைன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201021:22:38 IST Report Abuse
ஹுசைன் இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித் என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி ஏக மஜும்தார் நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம். ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல. இராமர் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X