ரயில் மோதி 7 யானைகள் பலி: மந்திரி ஜெய்ராம் அதிருப்தி

Added : செப் 25, 2010 | கருத்துகள் (5)
Share
Advertisement
ரயில் மோதி 7 யானைகள் பலி: மந்திரி ஜெய்ராம் அதிருப்தி

புதுடில்லி:மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது, சரக்கு ரயில் மோதியதில் ஏழு யானைகள் பலியாயின. இந்த சம்பவத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில், பைனாகுரி அருகே அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை, யானைகள் கூட்டமாக கடக்க முயன்றுள்ளன. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒன்று, யானைகள் மீது மோதியுள்ளன. இதில், ஏழு யானைகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன; சில யானைகள் படுகாயம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, பைனாகுரி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வலம் வரும். இரண்டு நாட்களுக்கு முன், இந்த பகுதியில் 25க்கும் மேற்பட்ட யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில், ஏழு யானைகள் சிக்கி பலியாயின; மூன்று யானைகள் படுகாயம் அடைந்தன என்றார்.தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், யானைகள் பலியான சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது:யானையை நமது தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. யானைகளை பாதுகாக்க, தேசிய பாதுகாப்பு ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பாதையையொட்டி யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, யானைகள் அதிரடிப்படை பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், பைனாகுரி வனப்பகுதியில், ஏழு யானைகள் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது போன்ற சம்பவம் ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. அப்போது ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், ரயில்வே வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். நான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கடந்த 1987ம் ஆண்டு முதல், ரயில் தண்டவாளங்களில் நடந்த விபத்துகளில் 150 யானைகள் பலியாகியுள்ளன.நான் இந்தியா திரும்பியதும், ரயில்வே வாரியத்துடன் இது குறித்து விவாதித்து, உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யானைகள் இறந்த சம்பவத்தையடுத்து பிராணிகள் பாதுகாப்பு நல வாரியத்தினர், ரயில்வே அமைச்சகத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.மேற்கு வங்க முதன்மை வனவிலங்கு வார்டன் மோன்டோல் நிருபர்களிடம் கூறுகையில், "ரயில்வே வாரிய அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் இடையே, வரும் 28ம் தேதி டில்லியில் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது' என்றார். 


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குருநாதன் - திருப்பூர்-இந்தியா,இந்தியா
25-செப்-201016:28:09 IST Report Abuse
குருநாதன் இது ரொம்ப வருந்ததக்க விஷயம். ஒரே நாளில் 7 யானைகள் இறந்திருப்பதை கேள்வி பட்டவுடன் மனதுக்கு சொல்லமுடியாத வேதனையாக உள்ளது. இந்த யானைகளின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிராத்திக்க வேண்டுகிறேன். கடந்த சில மாதங்களாகவே யானைகளின் இறப்பு அதிகமாக இருக்கிறது. இனிமேலும் தொடராமல் இருக்க மத்திய மற்றும் அணைத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
பகவத் - தேனீ,இந்தியா
25-செப்-201013:08:32 IST Report Abuse
பகவத் யானை கும் அடி சறுக்கும்
Rate this:
Cancel
ரமேஷ் க - சென்னை,இந்தியா
25-செப்-201007:22:03 IST Report Abuse
ரமேஷ் க இனி என்ன பேசினாலும் அந்த அப்பாவி வாயில்லாத ஜீவன்களின் உயிரை திருப்பி கொண்டு வர முடியுமா? இத்தகைய கொடுமைகள் எல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும்.. பொறுப்பற்ற அரசியல் வியாதிகள், பொறுப்பில்லாத மக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X