எடுபடுமா இலவசங்களுக்கான அறிவிப்பு கட்டுப்பாடு?

Added : பிப் 25, 2014
Share
Advertisement
"தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே, பாரபட்சம் ஏற்படும் வகையிலான, வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் வெளியிடக்கூடாது. குறிப்பாக, இலவசங்கள் தொடர்பாக, நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. தேர்தல் அறிக்கையில், இடம் பெறும் அம்சங்கள், அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும், விரோதமாக
எடுபடுமா இலவசங்களுக்கான அறிவிப்பு கட்டுப்பாடு?

"தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே, பாரபட்சம் ஏற்படும் வகையிலான, வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் வெளியிடக்கூடாது. குறிப்பாக, இலவசங்கள் தொடர்பாக, நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. தேர்தல் அறிக்கையில், இடம் பெறும் அம்சங்கள், அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும்,
விரோதமாக இருக்கக் கூடாது' என, தேர்தல் அறிக்கைகளில், இலவசங்கள் குறித்த, அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக, தேர்தல் கமிஷன், சில கட்டுப்பாடுகளை, அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ளது. தேர்தல் கமிஷனின், இந்த கட்டுப்பாடுகள், சரியா, தவறா என்பது தொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

அரசியல் கட்சி, வாக்குறுதிகளை அளிப்பதும், ஆட்சிக்கு வந்த பின், அவற்றை நிறைவேற்றுவதும் வழக்கமான ஒன்று. தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வருபவர்கள் நிறைவேற்றவில்லை எனில், அடுத்த தேர்தலில், அவர்களுக்கு பாடம் புகட்டுவது வாக்காளர்களின் உரிமை.
இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கக் கூடாது, நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் கடிவாளம் போடுவது முறையற்றது.
இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணான, இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் திட்டங்களை, தேர்தல் அறிவிப்பு களாக வெளியிட்டால், அதைத் தடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு.
அதைவிடுத்து, மக்கள் நலத் திட்டங்களை, அரசியல் கட்சிகள் அறிவிப்பதை, தேர்தல் கையூட்டு என, எப்படி முடிவு செய்ய முடியும். ஒரு திட்டம், மக்கள் நலத் திட்டமா, இல்லையா என்பதை, யார் முடிவு செய்வது. அதற்கு என்ன அளவுகோல்.கடந்த சட்டசபை தேர்தலில், மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை இலவசமாக அளிப்போம் என, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் அறிவிப்பு. இப்பொருட்களை எப்படி இலவசமாகக் கொடுக்க முடியும் என, கேள்வி எழுப்பினர். ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த வாக்குறுதிகள், 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஒரு வாக்குறுதியை, ஒரு கட்சி அறிவிக்கும்போது, அது மக்களின் தேவைகளில் ஒன்றாகவே இருக்கும். எனவே, அந்த வாக்குறுதியை அளிக்கக்கூடாது என, தேர்தல் ஆணையம் எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு, மாதந்தோறும், 20 கிலோ அரிசி இலவசமாக அளிப்பது, பசியை தீர்க்கும் நடவடிக்கை. மக்களின் பசியைத் தீர்ப்பது, ஒரு அரசின் கடமை. அதை எப்படித் தடுக்க முடியும்.
தேர்தல் ஆணையத்தின் தலையீடு, சட்டத்திற்கு புறம்பானது.

தனியரசு, எம்.எல்.ஏ., - தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

அனைத்து அரசியல் கட்சிகளும், ஆட்சிக்கு வந்தால், செய்யப்போகும் திட்டங்களை, தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. அதில் குறிப்பிடும் திட்டங்கள், பிற கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, மக்களை மயக்கி, ஓட்டு வாங்கும் வாக்குறுதிகளாக இருக்கக் கூடாது என, தேர்தல் ஆணையம் கட்டளையிட்டு உள்ளது, வரவேற்கத்தக்கது.தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இலவச திட்டங்களை மாறி மாறி அறிவித்து, ஓட்டு வாங்கின. ஆட்சிக்கு வந்ததும், இலவச திட்டங்களைப் பெற, நிபந்தனை கள் விதிக்கின்றன. ஆனால், வாக்குறுதி அளிக்கும்போது, நிபந்தனைகளை சொல்வதில்லை.அதனால், வாக்குறுதிப்படி, தங்களுக்கும் திட்டப் பயன் கிடைக்கும் என, நம்பி ஓட்டுப்போட்ட பெருவாரியான மக்கள், ஏமாற்றப்படுகின்றனர்.இலவச திட்டங்களை அறிவிக்கவே கூடாது என, தேர்தல் ஆணையம் கூறவில்லை. அத்திட்டத்துக்கான, நிதி ஆதாரம் எப்படி திரட்டப்படும். யாருக்கெல்லாம் அத்திட்டப் பயன் கிடைக்கும் போன்ற, திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்தும், தெரிவிக்க வேண்டும் என, கூறியுள்ளது பாராட்டுக்குரியது. இதன்மூலம், இலவச திட்டங்களுக்கு, அரசின் பிற துறை வருவாய் பயன்படுத்துவது, தவிர்க்கப்படும்.அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை எனில், அடுத்த தேர்தலில், தோற்கடித்து தண்டனை அளிக்கப்படுகிறதே என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்கிறார். குற்றவியல் சட்டம், 420ன் படி, அவருக்கு தண்டனை அளிக்கப்படும். ஆனால், அரசியல் கட்சி ஒன்று, வாக்குறுதி அளிக்கிறது. அதை நம்பி ஓட்டளித்தவர்கள் ஏமாற்றப்பட்டால், ஐந்தாண்டு கழித்து, அவரை தோற்கடித்தால், ஏமாந்த மக்களுக்கு நியாயம் கிடைத்துவிடுமா?மக்கள் ஏமாறுவதற்கு முன், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகர திட்டங்கள், இலவங்களை தேர்தல் ஆணையம் தடை செய்வது நியாயமானது. ஆட்சியில் உள்ளவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும், சமமாக மக்களிடம் ஓட்டு வாங்க, இம்முறை தான் சரியானது.

சந்திரகுமார், எம்.எல்.ஏ., - தே.மு.தி.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X