தமிழக இலவச திட்டங்கள் நாடு முழுவதும் அமல்: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தகவல்

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (35)
Advertisement
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று, லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று முன்தினம் வெளியானது. நேற்று, கட்சித் தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் தமிழ் பிரதியை, அமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். ஆங்கிலப்
Congress, DMK, betray,Tamil Nadu,AIADMK, jayalalithaa,  தமிழக இலவச திட்டங்கள், நாடு,அமல், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று, லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று முன்தினம் வெளியானது. நேற்று, கட்சித் தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் தமிழ் பிரதியை, அமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். ஆங்கிலப் பிரதியை, கட்சியின் அமைப்புச் செயலர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கையில், 43 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில், 11 தமிழகம் தொடர்பானவை; மற்ற, 32 அறிவிப்புகள், தேசிய அளவிலான, தேர்தல் வாக்குறுதிகள்.
தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களுக்கான வாக்குறுதிகள்:

* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களான, இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்கும் திட்டங்களை, தேசிய அளவில் நிறைவேற்ற, அ.தி.மு.க., முனைப்புடன் செயல்படும்.


* கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, நடவடிக்கை எடுக்கும்.


* தனி ஈழம் அமைய, இலங்கைத் தமிழர்கள் இடையே, பொது வாக்கெடுப்பு நடத்த, உறுதி பூண்டுள்ளது.
மீனவர் நலன்


* இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே, பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய, சூழ்நிலையை உருவாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.


* ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க, மத்திய அரசு மூலம், முழு மானியம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.


* மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.


* பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள, அனைத்து கடலோர மாவட்டங்களில் உள்ள, நதி முகத்துவாரங்கள் முறையாக தூர் வாரப்படும். கடல் அரிப்பு பிரச்னையை தடுக்க, போதுமான நிதி ஒதுக்கப்படும்.


* கச்சத்தீவை திரும்பப் பெற, அனைத்து நடவடிக்கைகளையும் அ.தி.மு.க., எடுக்கும்.


* சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு என்ற கொள்கையை, தேசிய அளவில் அகற்ற, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழி


* இந்திய அரசியலமைப்பு சட்டம், எட்டாவது அட்டவணையில் உள்ள, அனைத்து மொழிகளையும், ஆட்சி மொழியாக்க, அ.தி.மு.க., வலியுறுத்தும்.


* சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடு மொழியாக, தமிழ் மொழியை அறிவிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.


* அனைவருக்கும் பொது வினியோக திட்டம் இருக்கும் மாநிலங்களில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு பதிலாக, அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய, பொது வினியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.


* தமிழ்நாட்டின் மாதத் தேவையான, 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் பெற, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.


* மின் மிகை மாநிலங்களில் இருந்து, மின் குறை மாநிலங்களுக்கு, மின்சாரம் எடுத்து செல்ல, புதிய மின் வழித்தடங்கள் அமைக்க, வலுப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.


* தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்திற்கு தேவையான, டி.ஏ.எஸ்., அனுமதி பெற, நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அளவில், மாநில அரசு கேபிள் 'டிவி' சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.


* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்., தி.மு.க., தமிழகத்திற்கு இழைத்த 17 துரோகங்கள்அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'மத்திய காங்., கூட்டணி அரசு மற்றும் தி.மு.க.,வால், தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள்' என்ற தலைப்பில், 2 பக்கங்களுக்கு, 17 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.


அவற்றின் விவரம்:* கச்சத்தீவை மீட்க, முதல்வர், சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், தமிழகத்திற்கு எதிராக, மனு தாக்கல் செய்தது.
* '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய், கொள்ளை அடித்தது.


* 2007ல் வழங்கப்பட்ட, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிடாமல், திட்டமிட்டே காலம் தாழ்த்தியது.


* முதல்வர் முயற்சியால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை, மத்திய அரசிதழில் வெளியான பிறகும், இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கர்நாடகாவிற்கு, சாதமாக நடப்பது.


* மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில், வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை, நிறைவேற்ற முயல்வது.


* மாநில நிதி ஆதாரங்களை குறைக்கும் வகையிலான, பொருட்கள் மற்றும் சேவை வரியை, அறிமுகப்படுத்த முயல்வது.


* தவறான பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்து, விலைவாசி உயர வழிவகுத்தது.


* விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை, பலமுறை உயர்த்தியது.


* மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படும் போது, அதற்கு தி.மு.க., உறுதுணையாக இருந்தது.


* சமூக நீதிக்கு, சாவு மணி அடிக்கும் வகையில், மருத்துவப் படிப்பில், பொது நுழைவுத் தேர்வை நுழைக்க, நடவடிக்கை எடுக்க முனைவது.


* தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை, மத்திய மின் தொகுப்பில் இருந்து, வழங்க மறுப்பது.


* தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்திற்கு, டி.ஏ.எஸ்., அனுமதி வழங்க மறுப்பது.


* தமிழகத்திற்குரிய மண்ணெண் ணெய் ஒதுக்கீடை குறைப்பது.


* இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி, ஆயுதங்களை, மத்திய அரசு வழங்கிய போது, தி.மு.க., அதை தட்டி கேட்காமல், மவுனம் சாதித்தது.


* இலங்கைத் தமிழர்களை, கொத்து கொத்தாக, இலங்கை ராணுவம் கொன்று குவிக்க, உறுதுணையாக இருந்தது.


* சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு கொள்கைக்கு, தி.மு.க., ஆதரவு அளித்தது.


* தமிழகத்தை, மின் குறை மாநிலமாக மாற்றி, தமிழகத்தை இருளில் மூழ்க செய்வது. இவ்வாறு, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gowtham Padmanaban - Tiruppur,இந்தியா
19-மார்-201413:22:33 IST Report Abuse
Gowtham Padmanaban இது அனைவரையும் ஏமாற்றும் அறிக்கை. முழுக்க சோம்பேறி ஆக்கும் இலவசங்கள். நடுத்தர மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் , வேலை இல்லா பற்றாகுறை என்று ஒழிகிறதோ அன்று தான் தமிழகத்திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.
Rate this:
Cancel
Vidyala Venkataraman - Chennai,இந்தியா
19-மார்-201413:00:23 IST Report Abuse
Vidyala Venkataraman Hats off Amal Anandan
Rate this:
Cancel
Thirumalai Chakravarthy Raman - Kanchipuram,இந்தியா
19-மார்-201412:10:01 IST Report Abuse
Thirumalai Chakravarthy Raman அப்பா கங்கையிலும் பிரம்ம புத்திராவிலும் தண்ணீருக்கு பதில் சாராயம் தான் ஓடும். இந்த அம்மா தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதை போல இந்தியா முழுவதையும் குடிகார நாடாக மாற்றிவிடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X