அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழசுகளை, வாரிசுகளை ஓரங்கட்டுகிறார் ஸ்டாலின்: அ.தி.மு.க., போல தி.மு.க.,வில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு?

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (8)
Share
Advertisement
அ.தி.மு.க., வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், தி.மு.க.,வில் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 40 பேர் கொண்ட, ஆளுங்கட்சி பட்டியலில், 11 பேரை தவிர்த்து, மற்ற 29 பேர், புதுமுகங்கள் என்பதால், அதேபோன்ற எதிர்பார்ப்பு, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,விலும் எழுந்துள்ளது.ஆதரவு: பழைய முகங்களுக்கும், கட்சி நிர்வாகிகளின் வாரிகளுக்கும், 'சீட்' தரக் கூடாது எனவும்,
Stalin,preference,youngster,LS, poll, பழசு, வாரிசு, ஓரங்கட்டுகிறார், ஸ்டாலின்

அ.தி.மு.க., வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், தி.மு.க.,வில் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 40 பேர் கொண்ட, ஆளுங்கட்சி பட்டியலில், 11 பேரை தவிர்த்து, மற்ற 29 பேர், புதுமுகங்கள் என்பதால், அதேபோன்ற எதிர்பார்ப்பு, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,விலும் எழுந்துள்ளது.



ஆதரவு:

பழைய முகங்களுக்கும், கட்சி நிர்வாகிகளின் வாரிகளுக்கும், 'சீட்' தரக் கூடாது எனவும், கட்சி யில் ஏராளமான படித்த இளைஞர்கள் இருக்கின்றனர்; அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் எனவும், அந்தக் கட்சியினர் மத்தியில், பரவலான கருத்து எழுந்துள்ளது. இந்த கருத்துக்கு, கட்சிப் பொருளாளரும், இளைஞரணி செயலருமான ஸ்டாலின், ஆதரவு தெரிவித்து உள்ளார். அதிரடிக்கு பெயர் போன, அ.தி.மு.க.,வில், நேற்று முன்தினம், லோக்சபா தேர்தலின், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், கூட்டணி பேச்சு நடத்திக் கொண்டிருக்கும், அதேவேளையில், 40 தொகுதிகளுக்கும், தன்னிச்சையாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 40 பேர் பட்டியலில், 'சிட்டிங்' எம்.பி.,க்கள் மூவர்; முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 8 பேர் உட்பட, 11 மட்டுமே, தேர்தலுக்கு அறிமுகமானவர்கள். மற்ற, 29 பேரும் புதியவர்கள்; படித்தவர்கள்; இளைஞர்கள் என்பது, குறிப்பிடத்தக்கது. இது, சும்மா இருந்த தி.மு.க.,வினர் மத்தியில், சூட்டை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக, நேர்காணல் நடத்தி வரும், தி.மு.க., தலைமையையும், இது யோசிக்க வைத்துள்ளது.

தி.மு.க.,வில், தற்போது, 16 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், பழனி மாணிக்கம், ராஜா, ஜெகத்ரட்சகன் என, அவர்களில் பலர் சீனியர்கள். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டிய கட்டாய நிலை, கட்சியில் காணப்படுகிறது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்களில் பலர், தங்களது வாரிசுகளுக்கு, இந்த முறை, 'சீட்' கேட்டு, தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, 'மாஜி' அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட செயலர் பெரியசாமி போன்றவர்கள், தங்கள் வாரிசுகளுக்கு, 'சீட்' கேட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவது போக, தமிழகம், புதுவையில், 35 தொகுதிகளில் தி.மு.க., போட்டி யிடும் நிலை உள்ளது. அதில், 'சிட்டிங்' எம்.பி.,க்கள், 16 பேரில், சீனியர்கள் பெரும்பாலோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், மீதியுள்ள இடங்களுக்கு, புதியவர்களை நிறுத்த வேண்டும் என்ற கருத்து, தி.மு.க., வட்டாரத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி நிறுத்தப்படும்போது, அதில், வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்ற, இளைஞர்களின் கருத்துக்கு, ஸ்டாலின் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து உள்ளார் என, கூறப்படுகிறது.




அதிருப்தி:

இளைஞர், புதுமுகம் என்ற போர்வை யில், வாரிசுகளை களம் இறக்கினாலும், 'மாஜி' அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் மீதான அதிருப்தியை மீறி, அவர்களால் வெற்றி பெற முடியாது என்பது தான், ஸ்டாலின் தரப்பு வாதம் என, கூறப்படுகிறது. 'மாஜி'க்கள் மீதான அதிருப்தி காரணமாக தான், கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. இந்த மூன்றாஆண்டுகளில், அந்த அதிருப்தி மறைந்து போயிருக்கும் என, நம்ப முடியாது; எனவே, மீண்டும் அவர்களது வாரிசுகளுக்கே, சீட் கொடுத்து, அதே அதிருப்தியை நீடிக்க செய்யும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், ஸ்டாலின் கருதுவதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
13-மார்-201415:54:21 IST Report Abuse
Bala அப்போ ஸ்டாலின் வாரிசு அரசியல்வாதியோ பழைய முகமோ இல்லையா? அப்படி பார்த்தல் கருணாநிதி குடும்பமே தி.மு.க.வில் இருந்து வெளியேற வேண்டும்.
Rate this:
Cancel
Srinivasan Karthikeyan - Calgary,கனடா
28-பிப்-201401:26:42 IST Report Abuse
Srinivasan Karthikeyan எனக்கு ஒன்னு புரியல. இவரே ஒரு வாரிசு தானே?ஊருக்கு பண்ற உபதேசம் இந்த குடும்பத்துக்கு இல்லையா? அதே பழசு லாஜிக் இவங்க குடும்பத்துக்கு ஒத்து வராதா?
Rate this:
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
27-பிப்-201400:32:04 IST Report Abuse
Cheenu Meenu மதுரை அழகிரி வேறு தனியாக ஓர் வேட்பாளார் லிஸ்ட் அறிவிக்க போகிறார். நல்ல கூத்துதான். இந்த தள்ளாத வயதிலும் கலைனருக்கு தேவையா ??? இந்த காட்சிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X