பொது செய்தி

தமிழ்நாடு

உண்டியலில் பணம் போட கமல்ஹாசன் எதிர்ப்பு

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (320)
Share
Advertisement
சென்னை: கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும்'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக, புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல்
put,money,hundi,Kamal hassan, உண்டியல், பணம், கமல்ஹாசன், எதிர்ப்பு

சென்னை: கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும்'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக, புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல் ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர். வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும். இவ்வாறு, அவர் பேசினார்.

வருமான வரித் துறை இணை கமிஷனரும், கலை விழா தலைவருமான, ஆறுமுகம், கலை விழா செயலர், ஜெயராகவன் ஆகியோர், நன்றி கூறினர். இன்று இரண்டாம் நாள் விழாவில், நாடகம் மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரதநாட்டிய கலைஞர், பத்மா சுப்ரமணியம், வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், அனிதா குப்தா ஆகியோர், பரிசு வழங்குகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (320)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jhon - tirunelveli,இந்தியா
19-ஜன-201518:59:41 IST Report Abuse
jhon கமல் சார் மொதல்ல உங்க டாட்டருக்கு நடிகிறத சொல்லிகொடுங்க அதைவிட்டுவிட்டு ஹிந்துக்களின் நம்பிகையுடன் விளையாடதிங்க
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-மார்-201406:25:30 IST Report Abuse
g.s,rajan ஊருக்கு உபதேசம் மொதல்ல உங்க சினிமா உலகுல இருக்கறவங்களை எல்லாம் உண்மையான வருமானத்தை காட்டுகிறார்களா ???வருமானத்துக்கு ஈற்ற வரியை அரசுக்கு கட்டுகிறார்களா ???விலைவாசியும் வீடும் நிலமும் உங்களைப்போன்ற சினிமா உலகினர் தான் எங்கும் வாங்கிக்குவிக்கிரார்கள் இதனால் சாமானியர்கள் எதையும் வாங்க முடியவில்லை மேலும் உங்கள் ஆட்கள்தான் மிக மிகக்குறுகிய காலத்தில் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர் .வருமான் வரி என்றால் என்ன என்றுபலர் கேட்பார்கள் .சாதாரண நடுத்தர மக்கள் மாதம் முழுவதும் உழைத்து வாங்கும் சம்பளத்தில் அவர்களை கேட்காமலேயே அவர்களின் அனுமதி இல்லாமலே வருமான வரியை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கும் வருமான வரித்துறையின் கேவலமான வெட்கங்கெட்ட செயலை என்னவென்று சொல்வது ???அதே நேரத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் வருமான வரியே கட்டாமல் இருக்கும் உங்கள் சினிமா உலகினரை என்ன செய்யலாம் ???என்ன தண்டனை கொடுக்கலாம் ???ஊருக்கு உபதேசம் செய்யாதீர்கள் ,உங்களின் பகுத்தறிவை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் இந்து மதத்தை தவிர மற்ற மதங்களில் தலையிட உங்களுக்கு "தில்" இருக்கிறதா ??? தில் இருந்தால் அவர்களிடம் உங்கள் மேலான கருத்துக்களை கூறிப் பாரும். ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
27-பிப்-201407:41:02 IST Report Abuse
Vaduvooraan கமலோட பேச்சுக்கு மட்டும் ஒரு உச்சவரம்பு கொண்டுவந்தால் நமது ஜனநாயகம் செழிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X