கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
TN, seek,stay, Maduravoyal chennai fort corridor, உயர்நீதிமன்ற தீர்ப்பு, தமிழக அரசு, மேல் முறையீடு, துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை, திட்டம்

சென்னை: 'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனுத் தாக்கல் செய்துள்ளது.



ரூ.1,816 கோடியில்:

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப்பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வதாக, தமிழக அரசு தடை விதித்தால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கின. தமிழக அரசு விதித்த தடையை, கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த விஷயத்தில், மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யக்கூடாது' என, பல்வேறு வர்த்தக அமைப்புகள், பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தின. முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் விஜயகுமார் தலைமையிலான குழு, டில்லியில் முகாமிட்டுள்ளது. இதை அறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மேல்முறையீடு செய்யும் முன், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:




தடை விதிக்க வாய்ப்புள்ளது:

சென்னை உயர் நீதிமன்றம், பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சித்து வருகிறது. மேல் முறையீட்டை ஏற்று, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மேல் முறையீடு செய்தால், எதிர் தரப்பான எங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளோம். சாலைப்பணியை எந்த சிக்கலும் இன்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mag - Salem,இந்தியா
27-பிப்-201401:57:32 IST Report Abuse
Mag அரசியல் லாபத்துக்காக மக்களுக்கு போய்சேரவேண்டிய நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஜெயலலிதாவை பதவியில் அமர்த்திய மக்கள் சிந்திக்க வேண்டும். ஏன் நிறுத்துகிறாய் என்று கேள்வி கேட்கவேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதில் தரவேண்டும். ஹ்ம்ம். இந்த கனவு என்று நிறைவேறுமோ கடவுளே கடவுளே.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
26-பிப்-201403:58:59 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மக்களுக்கு நல்லது நடக்காம இருக்குறதுக்கு மேல் முறையீடு செய்யிற அரசாங்கம் அம்மா அரசாங்கம்தான் , இனி அம்மா ஹெல்மெட் போட்டுக்குறது நல்லது திரும்புன பக்கமெல்லாம் கோர்ட் கொட்டு வெக்குதாமுல்ல ? பேப்பர திறந்தா இதேதான் நியுஸ்
Rate this:
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
26-பிப்-201403:18:38 IST Report Abuse
தங்கவேல்  இதற்கெல்லாம் ஒருநாள் பதில் கூறியே ஆகவேண்டும்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X