உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்| TN seeks stay on Maduravoyal chennai fort corridor? | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (3)
Share
சென்னை: 'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனுத் தாக்கல் செய்துள்ளது.ரூ.1,816 கோடியில்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால
TN, seek,stay, Maduravoyal chennai fort corridor, உயர்நீதிமன்ற தீர்ப்பு, தமிழக அரசு, மேல் முறையீடு, துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை, திட்டம்

சென்னை: 'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனுத் தாக்கல் செய்துள்ளது.



ரூ.1,816 கோடியில்:

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப்பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வதாக, தமிழக அரசு தடை விதித்தால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கின. தமிழக அரசு விதித்த தடையை, கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த விஷயத்தில், மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யக்கூடாது' என, பல்வேறு வர்த்தக அமைப்புகள், பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தின. முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் விஜயகுமார் தலைமையிலான குழு, டில்லியில் முகாமிட்டுள்ளது. இதை அறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மேல்முறையீடு செய்யும் முன், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:




தடை விதிக்க வாய்ப்புள்ளது:

சென்னை உயர் நீதிமன்றம், பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சித்து வருகிறது. மேல் முறையீட்டை ஏற்று, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மேல் முறையீடு செய்தால், எதிர் தரப்பான எங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளோம். சாலைப்பணியை எந்த சிக்கலும் இன்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X