அரசியல் செய்தி

தமிழ்நாடு

சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: கருணாநிதி

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு நீதியும், நியாயமும் விரைவில் கிடைக்க, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'பிப்.,25ம் தேதி, இலங்கை தமிழர்கள் நீதி கேட்கும் நாள்' என, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை அரசினால், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி,
Need, international, probe,Karunanidhi, சர்வதேச விசாரணை,  வேண்டும், கருணாநிதி

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு நீதியும், நியாயமும் விரைவில் கிடைக்க, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.



அவரது அறிக்கை:

'பிப்.,25ம் தேதி, இலங்கை தமிழர்கள் நீதி கேட்கும் நாள்' என, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை அரசினால், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி, ஒரு முழுமையான, சர்வதேச சுதந்திரமான விசாரணையை, ஐ.நா.,வில் அங்கம் வகிக்கும் நாடுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இன அழிப்பு போர் குற்றங்கள், மனித உரிமைகளுக்கு, எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. 'டெசோ' அமைப்பின் சார்பிலும், தி.மு.க., சார்பிலும், சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. டெசோ தீர்மானத்தை, தி.மு.க., எம்.பி.,க்கள், மன்மோகன் சிங்கிடம் நேரில் கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றனர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-மார்-201411:34:23 IST Report Abuse
Malick Raja இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் அகதிகளை விட நன்றாகவே இலங்கையில் இருக்கிறார்கள்... எனவே தயவு செய்து இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தமிழக அரசியல் வாதிகள் விலகி நிற்பது ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்க்கையை தந்துவிடும்.. சென்ற வாரம் இலங்கை விமானநிலையத்தில் இருந்த போது கண்ணால் கண்ட காட்சி இது... - தமிழர்கள் வரும்போது அவர்களை ஐக்கிய நாட்டு அமைப்பு (UNCHI ) அழைத்து அனைத்து விவரங்களையும் சேர்த்து கண்காணிக்கிறது.. சம்பந்தபட்ட அதிகாரிகளை அணுகியபோது இப்போது இலங்கை தமிழர்கள் அனைவரும் ஐக்கிய நாட்டு சபையின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.. இலங்கை அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது... இலங்கை தமிழர்கள் உலகம் பூராவும் பரவி தங்களின் நிலைமையை உலகுக்கு உணர்த்தி பயனடைந்த நிலையில் வீனனாக தமிழகத்தில் குளிர் காய நினைப்பது அறிவுடைமையா ? என்பதை உணர்ந்து தமிழக அரசியல் வாதிகள் ஒதுங்கி இருக்க வேண்டுகிறோம்..
Rate this:
Cancel
shankar - namakkal,இந்தியா
27-பிப்-201404:06:28 IST Report Abuse
shankar கண்டிப்பா நடத்தனும் சார் 2 ஜி ஊழல் முதல்ல ......................ஆச்சில்ல இருந்தப்ப என்ன பண்ணுனீங்க சார் இதுக்கு முதல்ல விசாரனை நடதுனும் சார்
Rate this:
Cancel
Prem Nevis - Singapore,சிங்கப்பூர்
27-பிப்-201403:59:02 IST Report Abuse
Prem Nevis இலங்கை தமிழர்களுக்கு நீதியும், நியாயமும் விரைவில் கிடைக்க, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்துவதற்கு முன்னால்....... தாங்கள் நடத்திய ..............காலை டிபன் முடித்து ,மதிய உணவு வேளைக்கு முன் வரை நடத்திய உண்ணாவிரத நாடகத்துக்கு விசாரணை தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X