தே.மு.தி.க., 'அதிருப்தி'களை ஏமாற்றினாரா ஜெ.,?

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
நிறைய எதிர்பார்ப்புகளுடன், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, விஜயகாந்தின் அதிருப்தி மற்றும் கோபத்துக்கு ஆளாகினர். 'தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை தரப்படும், லோக்சபா தேர்தலில், 'சீட்' வழங்கப்படும்' என்பது உட்பட, பல வாக்குறுதிகள் தரப்பட்டதால், அ.தி.மு.க., பக்கம் தாவியதாக, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறினர்.
 தே.மு.தி.க., 'அதிருப்தி'களை ஏமாற்றினாரா ஜெ.,?

நிறைய எதிர்பார்ப்புகளுடன், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, விஜயகாந்தின் அதிருப்தி மற்றும் கோபத்துக்கு ஆளாகினர். 'தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை தரப்படும், லோக்சபா தேர்தலில், 'சீட்' வழங்கப்படும்' என்பது உட்பட, பல வாக்குறுதிகள் தரப்பட்டதால், அ.தி.மு.க., பக்கம் தாவியதாக, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறினர். ஆனால், தற்போது லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிரண்டு பேருக்கு கூட, வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் எல்லாம், விரக்தி மற்றும் அதிருப்தியில் இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதல்வர் ஆசைகாட்டி மோசம் செய்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மாறுபட்ட நிலைப்பாட்டில் இருக்கும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர், பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதோ:
tநாட்டின் வரலாற்றில், துரோகிகளுக்கு எங்கேயும் இடமில்லை. பல பேரரசுகளுக்கு, துரோகம் இழைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்பதை, வரலாற்றுப் பதிவுகள் பறைசாற்றுகின்றன. அதுபோலவே, தே.மு.தி.க.,வுக்கு துரோகம் இழைத்து விட்டு சென்றவர்களின் நிலையும் உள்ளது.'தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தோம். தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய, முக்கியப் பிரச்னைகளின் பட்டியலை, அவரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்து உள்ளார். சட்டசபை உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்வது, அவர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்ற தான். தே.மு.தி.க., தலைமை, இதற்கு தடையாக உள்ளது. எனவே, முதல்வரை நேரில் சந்தித்தோம்' என, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., பக்கம் சென்றதற்கு காரணம் கூறினர்.
'அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை' என, அவர்கள் இப்போது புலம்புவது விசித்திரமாக உள்ளது. ஒரு இயக்கத்தை துவங்கி, அதை வெற்றிகரமாக நடத்துவது, எவ்வளவு சிரமம் என்பது, அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். எங்கள் கட்சி தலைவர், புகழின் உச்சியில் இருப்பவர். அவர், நாட்டு மக்களுக்காக, தெருவில் இறங்கி போராட வருகிறார் என்றால், அவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இதை எதையும் அறியாமல், தங்களின் வாழ்வு உயர வேண்டும் என்பதற்காக, நேரடியான எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த ஆள் இழுக்கும் வேலையை செய்தது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை, தே.மு.தி.க.,வை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்னும் அனுபவிக்க வேண்டியது உள்ளது.பார்த்திபன் எம்.எல்.ஏ., - தே.மு.தி.க.,

மக்களால் தேர்வு செய்யப்பட்ட, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, நல்லாட்சி நடத்துகிறது. தமிழக முதல்வராக இருப்பவர், லோக்சபா தேர்தலுக்குப் பின், நாட்டை வழிநடத்த உள்ளார். அவருக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என்னைப் போன்றவர்கள் ஆதரவு அளிப்பதால், கூடுதலாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.ஆனால், அ.தி.மு.க., கூட்டணியுடன் வெற்றிபெற்ற, தே.மு.தி.க., ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்தனர். அந்த நோக்கம் நிறைவேற விடாமல், தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி, ஆளுங்கட்சி மீது களங்கம் கற்பிக்க, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்த் முயன்றார்.அரசின் நல்ல திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்க வேண்டும் என, அவர் செயல்பட்டார். 'அவரது நடவடிக்கைகள் சரியல்ல' என, ஆளுங்கட்சிக்கு எங்களது ஆதரவை தெரிவித்தோம். முதல்வரை சந்தித்தபோது, தொகுதியின் முக்கியப் பிரச்னைகளை பட்டியலிட் டோம். எங்களது கோரிக்கைகளை, முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தொகுதிக்கு நாங்கள் கேட்காத, பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க.,வுக்கு, நாங்கள் அளித்த ஆதரவு எந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அளிக்கப்படவில்லை. அதனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என, நாங்கள் வருத்தப்படவோ, ஆதங்கப்படவோ இல்லை. அ.தி.மு.க., தலைமை, எங்களை ஏமாற்றிவிட்டது என்பது போன்ற கருத்துக்கள், வேண்டு மென்றே பரப்பப்படுகிறது. அதில், துளியும் உண்மையில்லை.நாங்கள் லோக்சபா தேர்தலில், சீட் கேட்டோம். எங்களுக்கு அளிக்கப்படவில்லை என, சிண்டு முடியும் வேலையை, சிலர் செய்கின்றனர். இதனால், அ.தி.மு.க., தலைவர் மீது நாங்கள் கொண்டுள்ள மரியாதை, எந்நாளும் மாறாது.மைக்கேல் ராயப்பன்தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
06-மார்-201410:19:24 IST Report Abuse
Selvam Palanisamy மண்வெட்டி கையிலேடுப்பார், சிலபேர் மற்றவர்க்கு குழி பறிப்பார் அது தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார் (சிவப்பு எம்.ஜி.ஆர். படித்த பாட்டு இது )
Rate this:
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
28-பிப்-201419:35:51 IST Report Abuse
GUNAVENDHAN இப்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர்களுக்கு எப்படி பாராளுமன்ற சீட்டுக்களை வழங்கவேண்டும் என்று வீணாக புரளி கிளப்புகின்றவர்கள் நினைக்கின்றார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது . தேமுதிக வில் இருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முடிவெடுத்து, தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகமாகிவிட்டதால், இனியும் கட்சி தலைமையுடன் ஒத்துபோக முடியாது என்கிற நிலைமையில் வெளியே வந்தார்கள் , கட்சியில் விஜயகாந்த்தின் மனைவி, மச்சானின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதால் அதை ஏற்கமுடியாத சிலர் வந்தார்கள், வெளியே வந்தவர்கள் எல்லோருமே அவர்களாக வெளியே வந்தவர்கள் தானே ஒழிய , அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அழைத்து வரவில்லை என்பதை புரளி கிளப்பி வீணாக ஜெயலலிதாவின் பெயரை கெடுக்க நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் . மைக்கேல் ராயப்பன் தங்களுக்கு எவ்வித மன வருத்தமும் கிடையாது என்றும், யாரும் பாராளுமன்ற சீட்டு கேட்கவும் இல்லை இதெல்லாம் வீணான புரளி என்று தெளிவாக சொல்லியுள்ளார் . எனவே இப்படி வீணாக எதையாவது கானாக்கண்டு , அதையெல்லாம் அண்ணாதிமுக தலைமை செய்யவில்லை , அதனால் அவர்கள் வருத்தம், இவர்கள் வருத்தம் என்றெல்லாம் சொல்வது அபத்தம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X