அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்: சதி திட்டம் காரணமா ?

Added : பிப் 26, 2014 | கருத்துகள் (30)
Advertisement
Smoke detected on Indian Navy submarine INS Sindhuratna off Mumbai coast, மும்பையில் நீர்மூழ்கி கப்பலில் மீண்டும் விபத்து : 5 ஊழியர்கள் பாதிப்பு

மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 6 மாதங்களில், கடற்படையில் 11 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 18 மாலுமிகள் பலியாகினர். இந்நிலையில், தற்போது, மும்பை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கி உள்ளது பெரும் சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷத் நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல், மும்பை கடற்கரையிலேயே விபத்தில் சிக்கி உள்ளது. மும்பை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல், நீர் மட்டத்திற்கு மேலே கொண்டு வரப்பட்டது. அப்போது கப்பலில் இருந்து புகை வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலின் பேட்டரியில் இருந்து வாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புகைமூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு, கப்பலில் பணியில் இருந்த 4 அல்லது 5 பணியாளர்கள் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள், ஹெலிகாப்டர் விமானம் மூலம் மீட்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் மொத்தம் 7 அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும், மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்திய கப்பற்படை தெரிவித்துள்ளது.

ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல், கடல் சோதனைக்கு பின் மும்பை கடற்கரையில் இருந்து 40 முதல் 50 கி.மீ., தூரத்தில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது கப்பலில் இருந்து புகை கசிந்துள்ளது. நீர்மூழ்கி கப்பலின் மேற்கு கடற்படை கமாண்டோ பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி அளித்த தகவலின் பேரில் கடற்படை மீட்புக் குழு மூலம் மீட்புப் பணி நடத்தப்பட்டது. விபத்து நடைபெற்ற போது நீர்மூழ்கி கப்பலில் ஆயுதங்களோ, வெடி பொருட்களோ இல்லை என கூறப்படுகிறது. தற்போது இந்த கப்பலின் சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இது இன்னும் கடற்படை பணிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து முழு தகவல் கிடைக்காத நிலையில், கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்திய கடற்படையில் நடைபெறும் 11வது விபத்து இதுவாகும் என்பதால், விபத்துக்களின் பின்னணியில் சதி திட்டம் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.Manoharan - madurai,இந்தியா
27-பிப்-201406:20:51 IST Report Abuse
E.Manoharan நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடு என்று நாடெங்கும் வியாபித்துள்ளது. ஒரு தேசபக்தி இல்லாத அந்நிய தலைமையின் கீழ் நாடு இருந்தால் இது சகஜமே. அது தொடர்ந்தால் இன்னும் என்னவெல்லாம் பயங்கரத்தை இந்தியா சந்திக்க போகிறதோ, மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. தேசபக்தி, நாட்டுநலன் இவையே பிரதானம். அதற்கு பிஜேபி-ஐ மக்கள் பெரும்பான்மை பெரும் வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க பாரதம் வெல்க பாரதம்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-பிப்-201405:21:45 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்திய ராணுவ தலைமையில் பெரும்பான்மையினர் தான் பெரும்பான்மையினர். கொள்ளையடிக்கும் அந்த மூதேவிகளை விட்டு விட்டு இதுக்கும் சிறுபான்மையினரை குற்றம் சொல்லி தப்ப நினைக்கும் நீயும், கொள்ளையடித்த அவர்களும் தான் என் கண்ணுக்கு தீவிரவாதிகளாக தெரிகிறீர்கள். உன் போன்றோர் உன்மதம் பிடித்து அலைவதால் தான் ஊழலும் பெருக்கெடுத்து ஓடுகிறது, இந்தியரின் ரத்தமும் பெருக்கெடுத்து ஓடுகிறது..
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-201403:35:04 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran இங்க கப்பலே மூழ்குது மானம் கப்பல் ஏறுது. இதுல அம்மாவா ஆயாவான்னு விவாதமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X