அங்கங்கே முளைக்கும் ஆவின் பூத்து; ஆளுங்கட்சிக்குள்ள அடிதடி கூத்து! | Dinamalar

அங்கங்கே முளைக்கும் ஆவின் பூத்து; ஆளுங்கட்சிக்குள்ள அடிதடி கூத்து!

Added : பிப் 27, 2014
Share
''வரவர ஏரியாவுல இருக்க முடியலடி...எப்பப் பார்த்தாலும் 'மீட்டிங்' போட்டு நம்ம உயிரை வாங்குறாங்க; வண்டியை எடுத்துட்டு வர்றியா...பொட்டானிக்கல் கார்டன் வரை போயிட்டு வரலாம்...!,'' சித்ராவின் அவசர அழைப்பை ஏற்று, அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜரானாள் மித்ரா. கால் மணி நேரத்தில், தாவரவியல் பூங்காவில் கால் பதித்தார்கள் இருவரும். ''என்னக்கா! காதலர் தின மாசத்துல, ஒரு
அங்கங்கே முளைக்கும் ஆவின் பூத்து;  ஆளுங்கட்சிக்குள்ள அடிதடி கூத்து!
''வரவர ஏரியாவுல இருக்க முடியலடி...எப்பப் பார்த்தாலும் 'மீட்டிங்' போட்டு நம்ம உயிரை வாங்குறாங்க; வண்டியை எடுத்துட்டு வர்றியா...பொட்டானிக்கல் கார்டன் வரை போயிட்டு வரலாம்...!,''


சித்ராவின் அவசர அழைப்பை ஏற்று, அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜரானாள் மித்ரா.


கால் மணி நேரத்தில், தாவரவியல் பூங்காவில் கால் பதித்தார்கள் இருவரும்.


''என்னக்கா! காதலர் தின மாசத்துல, ஒரு ஜோடியையும் காணோம்,'' என்றாள் மித்ரா.


''இப்பதான் கொடிசியா ரோடு, வாலாங்குளம் ரோடு, ரேஸ்கோர்ஸ், வ.உ.சி., ஜூ...ன்னு அவுங்களுக்கு நிறைய்ய்ய இடம், சிட்டிக்குள்ள இருக்குதே...அதை விடு! எப்படி இருக்காம் யுனிவர்சிட்டி?,'' என்றாள் சித்ரா.


''இரண்டாம் குலோத்துங்க சோழன் மாதிரி, இரண்டாம் சாமி வந்த பிறகு, யுனிவர்சிட்டியில ஏகப்பட்ட 'சேஞ்சஸ்' இருக்காம்...இயற்கை விவசாயிகளெல்லாம் உள்ளே எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.... ஆனா...'' என்று மித்ரா நிறுத்த ''என்னடி ஆனா ஆவன்னான்னு இழுக்குற...?'' என்றாள் சித்ரா.


''ஆனா, பல விஷயங்கள்ல அவரை சுதந்திரமா இயங்க விடுறதில்லைன்னு ஒரு பேச்சு இருக்கு; சமீபத்துல 6 அசிஸ்டென்ட் புரபசர் போஸ்ட்டிங் போட்டதுல கூட, முடிவு பண்ணுனது எல்லாமே, விவசாயம் பார்க்குற வி.ஐ.பி.,யோட மருமகன்தான்கிறாங்க; ஒரு போஸ்ட்டிங்குக்கு 15 லட்ச ரூபா வரைக்கும் கை மாறிருக்கிறதா தகவல்,'' என்றாள் மித்ரா.


''அது சரி! கோயம்புத்துார்ல நேரடியாக களத்துல குதிக்கிறதுன்னு ஆளும்கட்சி முடிவு பண்ணிருச்சாம்; ஆளும் கூட தேர்வாயிட்டதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா! போன வாரம்தான் நடராஜனுக்குதான் 'சீட்டு'ன்னு அடிச்சுச் சொல்லிட்டு இருந்த... அதுக்குள்ள என்ன ஆச்சு?,''


''அதான் மித்து... அம்மா தி.மு.க.,; நாகராஜ்ங்கிற வக்கீல் ஒருத்தரைக் கூப்பிட்டு நேர்காணல் நடத்திட்டாங்க; அவர்தான் 'கேண்டிடேட்'ன்னு நேத்து அறிவிச்சுட்டாங்க. இங்க இருக்கிற 'டவுன்டாடி'க்கு தெரியாம, பை-பாஸ்ல அவர் போயிட்டார்ன்னு பல பேரு குதியா குதிக்கிறாங்க,''


''சந்தோஷத்துலயா? கோபத்துலயா?,'' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மித்ரா.


''அது தெரியலை...ஆனா, கோடநாடு கேஸ்ல ரொம்ப பாடுபட்டவர்ன்னு அவருக்கு ஒரு பேரு இருக்கு; மனோஜ் பாண்டியன் மூலமாத்தான் காய் நகர்த்திப் போனதா ஒரு தகவல்; ஆனா, வக்கீலு வாயே திறக்க மாட்டேங்கிறாரு; பேரு அறிவிக்கிறதுக்கு முன்னாடியே பெட்டிஷன் பறக்குற கட்சியாச்சே,'' என்றாள் சித்ரா.


''எப்புடிேயா...இந்த தடவை பெரிய கட்சிகள் போட்டி போட்டா ஊருக்கு நல்லது; அப்புறம்...நீ சொன்னியே பா.ஜ.,வுல வானதி சீனிவாசனுக்குதான் சீட்டுன்னு; அவுங்களை விட, சி.பி.ஆர்.,க்குதான் அதிகமான சான்ஸ் இருக்குன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


''அவரு மட்டுமா...ஜி.கே.செல்வக்குமார், எஸ்.ஆர்.சேகர்ன்னு ஏகப்பட்ட போட்டி இருக்கும் போலிருக்கே...!,'' என்றாள் சித்ரா.


''ஆவின் பூத் வைக்கிறதுக்கே அடிச்சுக்கிற ஆளும்கட்சிக்காரங்க, தேர்தல்ல ஒண்ணு சேர்ந்தா வேலை பார்ப்பாங்க?,''


''அதை ஆவின் பூத்ன்னு சொல்லாத...ஆக்கிரமிப்பு பூத்ன்னு சொல்லு; பால் விக்கிறதா சொல்லிட்டு, கார்ப்பரேஷன், ைஹவேஸ் இடங்களைப் பூராம் ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க; நீ சொல்ல வந்தது என்ன விவகாரம்?,''


''சிட்டிக்குள்ள 100 வார்டுலயும் காலி இடத்தைப் பார்த்து, பினாமி பேர்ல ஆவின் பூத் வைக்கிறதை மட்டுமே, முழு நேரத்தொழிலா செஞ்சிட்டு இருக்காங்க நம்ம டெபுடியம்மா. அவுங்க ஆள்களே நேரடியா 7 பூத் நடத்துறாங்களாம்; ஆனா, கட்சிக்கார லேடி ஒருத்தவுங்க, ஒரே ஒரு ஆவின் பூத் வைக்க அனுமதி கேட்டதுக்கு, 'ஒனக்கு தி.மு.க.,காரனோட தொடர்பு இருக்கு; அதனால அனுமதி தர முடியாது'ன்னு 'டவுன்டாடி' சொல்லிருக்காரு; அந்த அம்மிணி இப்போ, அமைப்புச் செயலாளரைப் பாத்து கெஞ்சிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''தி.மு.க., மாஜி கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், தன்னோட பொண்ணு கிருபா சபரிநாதனுக்கு பொள்ளாச்சியில 'சீட்' கேட்டிருக்காரு; பி.இ.,எம்.பி.ஏ., முடிச்சிருக்காங்க; படிச்சவுங்களுக்குதான் எம்.பி., சீட்டுன்னு தளபதி சொல்லிட்டதால, உடன் பிறப்புகள் பல பேரும், தங்களோட வாரிசுகளுக்குதான் 'சீட்' கேக்குறாங்க,'' என்றாள் சித்ரா.


''நீ சொல்றதைப் பார்த்தா, தி.மு.க.,வுல சீனியரெல்லாம் படிக்காதவங்க; ஜூனியரெல்லாம் படிச்சவுங்கன்னு சொல்ல வர்றியா?,'' என்று வெடித்துச் சிரித்தாள் மித்ரா.


''வெரைட்டியா ஏதாவது போலீஸ் நியூஸ் வச்சிருப்பியே...ஒண்ணுமில்லியா?,'' என்றாள் சித்ரா.


''அவ்ளோ இல்லை....ஆனா, சிட்டிக்குள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற லேடி எஸ்.ஐ.,யும், ெஹட்கான்ஸ்டபிளும் சேர்ந்து, 'வெரைட்டி'யா வசூல்


நடத்துறதா ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' வருது; நடிகையோட அந்த பேரைக்கொண்ட எஸ்.ஐ.,அம்மா, யாரையும் மரியாதையா பேசுறதேயில்லையாம்; பெட்டி கேஸ் போடுறதாச் சொல்லிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து வசூல் பண்ணுன காசை, அவுங்க பெட்டியில போட்டுக்கிறாங்களாம். அதுலயும் அந்த ஏரியாவுல 'சிடி' கடையில மட்டுமே செம்ம வசூலாம்,'' என்றாள் மித்து.


''நகைக்கடை மோசடியில, பிரதர்ஸ்சை மெரட்டி, பெருசா 'அமவுண்ட்' பறிச்ச போலீஸ் ஆபீசரைப் பத்தி சொன்னனே... ஆளைக் கண்டு பிடிச்சியா?,'' என்றாள் சித்ரா.


''முடியலைக்கா...கருப்புசாமி கோவில்லதான் போயி, குறி


கேக்கணும் போலிருக்கு....!,''


''ைஹய்யோ...! ஒனக்கு துப்பறியும் சாம்பு மூளைடி...சிட்டிக்குள்ள இனிமே 'கிரைம்' நடந்தா ஒங்கிட்டதான்டி குறி கேக்கணும்,'' என்றாள் சித்ரா.


''அக்கா! பா.ம.க.,வுல இருந்து அனுபவத்தோட ஆளும்கட்சிக்கு வந்த நகைக்கடைக்காரரைத் பத்தி பேசிட்டு இருந்தமே. அவரைப் பத்தி பி12ல்ல 'கம்பிளைன்ட்' ஆகி, ஆள் 'அப்ஸ்காண்ட்' ஆயிட்டாரு; ஆனா, அவரோட பொறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி, அதே பி 12 பக்கத்துலயே போஸ்டர் ஒட்டிருக்காங்க. இது எப்புடி இருக்கு?,''


''நீ சொல்றவரை...பேர்லயே நம்பர் வச்சிருக்கிற ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,தான், காப்பாத்துறதா சொல்றாங்க; நிஜமாவாா?,''


''அது எனக்குத் தெரியலை; நம்ம ஊரோட 101வது கவுன்சிலர் யார்ன்னு ஒனக்குத் தெரியுமா...?,'' என்று மித்ரா கேட்க, ''யாருடி அது... எனக்குத் தெரியாம?,'' என்று விழிகளை விரித்தாள் சித்ரா.


''யோசி....இப்போ எனக்குப் பசி...வா கிளம்பலாம்!,'' என்று சொல்லி விட்டு, மித்ரா வண்டியைக் கிளப்ப, பின்னால் ஏறி உட்கார்ந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X