வந்தது போன் அழைப்பு; முடிந்தது ஆய்வு!| Dinamalar

வந்தது போன் அழைப்பு; முடிந்தது ஆய்வு!

Added : பிப் 27, 2014
Share
""முதல்வர் பிறந்த நாளை ஜே ஜேன்னு கொண்டாடுனாங்களாமே,'' என கேள்வி கேட்டவாறு, "டிவி'யை ஆன் செய்தாள், சித்ரா. ""ஆமாக்கா, எலக்ஷன் வருதில்ல. கட்சி நிர்வாகிகளெல்லாம், வீட்டுக்குள்ள முடங்கி இருக்காம, வெளியே வர ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு அணியும், ஒவ்வொரு விதமா விழா நடத்தியிருக்காங்க. கட்சி பங்ஷனா இல்லாம, மக்கள் விழாவா கொண்டாடியிருக்காங்க. பள்ளி கல்லூரி மாணவ, மாணவியரை
வந்தது போன் அழைப்பு; முடிந்தது ஆய்வு!

""முதல்வர் பிறந்த நாளை ஜே ஜேன்னு கொண்டாடுனாங்களாமே,'' என கேள்வி கேட்டவாறு, "டிவி'யை ஆன் செய்தாள், சித்ரா.


""ஆமாக்கா, எலக்ஷன் வருதில்ல. கட்சி நிர்வாகிகளெல்லாம், வீட்டுக்குள்ள முடங்கி இருக்காம, வெளியே வர ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு அணியும், ஒவ்வொரு விதமா விழா நடத்தியிருக்காங்க. கட்சி பங்ஷனா இல்லாம, மக்கள் விழாவா கொண்டாடியிருக்காங்க. பள்ளி கல்லூரி மாணவ, மாணவியரை திரட்டி, செஸ் போட்டி, மராத்தான் போட்டி, ஓட்டப்பந்தயம் நடத்துனாங்க. எல்லோருக்கும் தக்காளி சாதம், தயிர் சாதம், பாயாசம், இட்லி, சாம்பார் கொடுத்தாங்க. எச்சில் கையால் கூட காக்கா விரட்டாத கோஷ்டி ஒண்ணு இருக்கு. அந்த கோஷ்டி கூட, கொடியேற்று விழா மட்டும் நடத்தி, இனிப்பு கொடுத்துட்டு, வீதி வீதியா பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கு,'' என்று சொன்னவாறு, சுக்கு காபியை நீட்டினாள் மித்ரா.


காபியை ஒரு மடக்கு உறிஞ்சிய சித்ரா,""23வது வார்டு காலனி பகுதியில் கழிப்பறை கட்டி, டைல்ஸ் பதிச்சிருந்தாங்க. பக்கத்துல இருந்த எடத்துக்காரங்களுக்கு வாஸ்து கோளாறுன்னு சொல்லி, கோவை வி.ஐ.பி.,கிட்ட முறையிட்டிருக்காங்க. அவரும், உடனடியா, திருப்பூர் லேடி வி.ஐ.பி.,கிட்ட சொல்லி, இரக்கமே இல்லாம, கழிப்


பறையை இடிச்சு தள்ளிட்டாங்க. இன்னமும், கோயமுத்தூர் கன்ட்ரோல்லதான் திருப்பூர் இருக்கான்னு ஆளுங்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றாள்.


""ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோயமுத்தூருக்கு போயிருந்தேன். மொபட்டை நிறுத்த ஸ்டாண்டுக்கு போனப்போ, ஒரே ஷாக்,'' என மித்ரா சொல்ல, ""ஏன், என்னாச்சு,'' என படபடத்தாள் சித்ரா.


""அம்மா உணவகத்தை தாண்டி, ஸ்டாண்ட் பக்கமா திரும்பியதும், "இடம் இல்லை'ன்னு ஒருத்தன் வந்து வழிமறித்தான். அவனிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப, டூவீலரில் ஒருத்தர், ஸ்டாண்டுக்குள் போனார். உள்ளே எட்டிப்பாத்தா, ஒரு கும்பலே பைக்குகளுக்கு மத்தியில் காலியிடத்துல ஒக்கார்ந்து, பட்டப்பகலில் தண்ணி அடிச்சிட்டு இருந்துச்சு. போலீஸ்காரங்க, பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயும் ஒரு ரவுண்டு ரோந்து வரணும்,'' என்றாள் மித்ரா.


""போலீஸ்ன்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ரேஷன் கடையில் முறைகேடு நடக்குதுன்னு, உணவு கடத்தல் பிரிவு போலீசுக்கு தகவல் போயிருக்கு. போலீஸ்காரங்க, ஒடனடியா, ஜீப் எடுத்துக்கிட்டு பறந்து வந்தாங்க. அவுங்க வந்த நேரத்துல, கட்சிக்கறை வேட்டி கட்டியிருந்த ஒருத்தரு மண்ணெண்ணெய் வாங்கிட்டு போனதை பார்த்தாங்க. ஒடனே, அவரை அழைச்சு விசாரிச்சாங்க. கடை ஊழியரிடமும் விசாரிச்சாங்க. பதிவேட்டை ஆய்வு செஞ்சாங்க. இருப்பு லிஸ்ட் பார்த்தாங்க. அரை மணி நேரம், ரேஷன் கடை பரபரப்பா இருந்துச்சு. சுத்துவட்டாரத்துல இருக்குற மக்கள், வேடிக்கை பார்த்தாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியமான வி.ஐ.பி.,யிடம் இருந்து போன் வந்தது. அடுத்த நிமிஷம், ஆய்வு செய்தோம்; அனைத்து பதிவேடுகளும் ரொம்ப (!) சரியா இருக்கு; இருப்பு சரியா இருக்கு; இது, "ரொட்டீன்


செக்-கப்'ன்னு சொல்லி சமாளிச்சிட்டு, கௌம்பிட்டாங்க. சிரியா சிரிக்கிறாங்க, அந்த ஏரியாக்காரங்க,'' என்றாள் சித்ரா.


""பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைச்சிருச்சே. எலக்ஷன் தேதி எப்ப அறிவிப்பாங்க,'' என மித்ரா, அடுத்த மேட்டருக்கு தாவ, ""எப்படியும், இந்த மாசக்கடைசிக்குள்ள எலக்ஷன் தேதி அறிவிச்சிடுவாங்க. தேர்தல் கமிஷன் படுமும்முரமா தயாராகிட்டு இருக்கு. வாக்காளர் பட்டியல் தயாரா வச்சிருக்காங்க. ஓட்டுச்சாவடி லிஸ்ட் தயார்படுத்திட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை மையத்தையும் உறுதி செஞ்சு, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பில்டிங் முடிவு செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு பில்டிங்கிற்கும் ஒரு அதிகாரி நியமிச்சிருக்காங்க. ஓட்டு எண்ணிக்கையின்போது, அந்தந்த தொகுதிக்கு தேவையான


வசதியை அந்த அதிகாரி செய்யணும்னு சொல்லிட்டாங்க. இப்ப, பதற்றமான ஓட்டுச்சாவடி எவை எவை, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடி எவை எவை? பந்தோபஸ்துக்கு எவ்வளவு போலீஸ் தேவைப்படும்னு லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X