ரயில்வேயில் கோட்டை விடுகிறதா தமிழக அரசு?

Added : பிப் 28, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
"தமிழகத்தின் ரயில்வே துறை வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. அறிவித்த திட்டங்களுக்கு, மிக சொற்ப நிதியையே, ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்குகின்றனர். துவங்கப்பட்ட பல முக்கியத் திட்டங்கள், போதிய நிதியில்லாமல், நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளன' என, கடும் குற்றச்சாட்டுகளை, மத்திய அரசின் மீது சுமத்துகின்றனர். இதற்கிடையே, போடி - மதுரை இடையேயான அகல ரயில்பாதைத் திட்டத்தை
ரயில்வேயில் கோட்டை விடுகிறதா தமிழக அரசு?

"தமிழகத்தின் ரயில்வே துறை வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. அறிவித்த திட்டங்களுக்கு, மிக சொற்ப நிதியையே, ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்குகின்றனர். துவங்கப்பட்ட பல முக்கியத் திட்டங்கள், போதிய நிதியில்லாமல், நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளன' என, கடும் குற்றச்சாட்டுகளை, மத்திய அரசின் மீது சுமத்துகின்றனர். இதற்கிடையே, போடி - மதுரை இடையேயான அகல ரயில்பாதைத் திட்டத்தை பார்வையிட்ட, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசு 50 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும். தமிழக அரசு அதை அளிக்கத் தவறுவதால், ரயில் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என, கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து,
தமிழகத்தின் மூத்த எம்.பி.,க்கள் பரஸ்பரம் நடத்திக் கொண்ட கருத்து மோதல் இதோ:

இந்தியா மிகப்பெரிய நிலப் பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடு. போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அத்தியாவசியமான ஒன்று. உலகிலேயே, இந்தியாவில் தான், மிக அதிகளவில் ரயில் பாதை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 16 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, ரயில் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டினுடைய வளர்ச்சி, பரவலாக இருக்க வேண்டும். தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று. இருந்தாலும், கூடுதல் திட்டங்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என, பிரதமர் முதல், மத்திய அரசு அதிகாரிகள் வரை, காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராடி வருகிறோம். இதில், வெற்றியும் பெற்று வருகிறோம். பெரும் தொகையிலான திட்டங்களை, ரயில்வே துறையே முழுமையாக செய்யவேண்டும் என்றால், அது நடக்காத காரியம். அதற்கு தான் மாநில அரசுகளின் பங்களிப்பாக 50 சதவீதம் கோரப்படுகிறது. இதையேற்று, 10 மாநிலங்கள், தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், ரயில்வே திட்டங்களுக்கான, பங்களிப்பை அளித்துள்ளன. இதைத் தான், தமிழக அரசிடமிருந்தும், ரயில்வே துறை எதிர்பார்க்கிறது. ரயில்வே அமைச்சர் கார்கே, தமிழக அரசை குற்றம் சொல்லவில்லை. ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும், அந்த நடைமுறையையும் தான் கூறியுள்ளார். தமிழகம் மிக முக்கியமான மாநிலம், அதன் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு முழு அக்கறையுண்டு. யாரையும் குறை சொல்லி, அதிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.

ஜே.எம்.ஆரூண், எம்.பி., காங்கிரஸ்

ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகை, 50 சதவீதம் தர வேண்டும் என்பது, புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்குத் தான் பொருந்தும். ஏற்கனவே உள்ள மீட்டர் பாதையை, அகல ரயில்பாதை ஆக்குவது, ஒரு வழிப் பாதையை இரு வழிப் பாதையாக மாற்றுவது, மின் மயமாக்குவது போன்ற திட்டங்
களை, ரயில்வே துறை தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளின் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்ட ஆகும் மொத்த செலவில் 50 சதவீதத்தை அளிக்கும். இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, உண்மைக்குப் புறம்பான தகவலை, ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 500 கோடி ரூபாய் தான், ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக திட்டங்களுக்கு, குறைந்தது 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தளவுக்கு, கட்டுமானப் பொருள்களின் விலை, 10 ஆண்டுகளில் உயர்ந்து உள்ளது. இதை புரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ரயில்வே பட்ஜெட்டுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் பொது நல சங்க பிரதிநிதிகள் போன்றோர், பிரதமரை சந்தித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சர்வே கூட நடக்கவில்லை என, கூறினோம்.
இதைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர் மீட்டர் பாதையை, அகல ரயில்பாதையாக மாற்றும் 270 கோடி ரூபாய் திட்டத்துக்காக, வெறும் 2 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளனர். இதிலிருந்தே, தமிழக ரயில்வே திட்டங்கள் மீது, மத்திய அரசுக்குள்ள ஆர்வம் வெளிப்படுகிறது.

லிங்கம், எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
28-பிப்-201411:46:01 IST Report Abuse
Divaharan தலைப்பு சரியானது . சந்தேகம் இல்லை. தமிழ் நாட்டில் எல்லாம் இலவசமாக கிடைக்க வேண்டும்?
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
28-பிப்-201409:18:04 IST Report Abuse
Rajarajan இது மிகவும் வருத்தப்பட வேண்டிய செயல். இலவசம் மற்றும் தேவையற்ற திரையரங்கம் போன்றவற்றிற்கு செய்யும் செலவில், குறைந்தபட்சம் 10% நிதியை ரயில்வேக்கு தமிழக அரசு ஒதுக்கினால் போதும். திட்டங்கள் நிறைவேறி, தமிழகம் வளம் பெரும், அதி விரைவாக. பரந்த மனபான்மையுடன், சொந்த மாநில வளர்ச்சிக்கே நிதி ஒதுக்க மனம் இல்லை எனில், இவ்வளவு பெரிய இந்திய நாட்டை எவ்வாறு ஆள முடியும் ??? மாநில வளர்ச்சியில், நீ / நான் என்ற போட்டி மனப்பான்மை எதற்கு ??? மாநில வளர்ச்சிதானே முக்கியம். அதற்கு ஏன் மோதல் மனப்பான்மை ??? இதில் வேடிக்கை என்னவெனில், சம்பந்தப்பட்ட MP , திரு ஆரூண் அவர்கள், மாநில அரசை சந்தித்து ரயில்வே திட்டத்திற்கு நிதி கேட்பது சாத்தியமில்லை என்று மேடையிலேயே கூறி இருக்கிறார். இது வெட்கத்திலும் வெட்கபடவேண்டிய விஷயம். 5 வருடங்கள் பதவியில் இருந்த பிறகு, இப்போது தான் இவருக்கு தெரிந்ததா ??? மாநில அரசை சந்தித்து, நிதி கேட்க விருப்பம் / திறமை / பொறுப்பு இல்லை என்றால், இவர் அன்றே பதவி விலகி இருக்கலாமே ??? சம்பளம், சலுகைகள் போன்ற வகையில், இவருக்கு அளிக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் எல்லாம் வீண் தானே ?? இதுவே தனியார் என்றால் இப்படி சும்மா உட்கார வைத்து, இவருக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் தருவார்களா ???? திட்டங்கள் மற்றும் வேலைகளை நிறைவேற்ற பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பாரே ??? இல்லை எனில், அன்றே இவர் பதவி பறிக்கபற்றிருக்குமே ? ஒரு பொதுவான சந்தேகம். இந்த MP தன்னுடைய சொந்த வீடு அல்லது அலுவலக ஊழியர் இவ்வாறு வேலை செய்ய தெரியாமல் / பொறுப்பில்லாமல் இருந்தால், சும்மா உட்கார வைத்து அவருக்கு சம்பளம் வழங்குவாரா ??? அரசு பணம் என்றால், எவரோ வியர்வை சிந்தி உழைத்து, நமக்கு ஏன் அக்கறை என்ற எண்ணம் தானே ?? அவரவர் மனசாட்சியே இதற்க்கு விடை அளிக்கட்டும். ஏழைகளின் வைதேரிச்ச்சல் ஒரு நாள் நிச்சயம் இவர்களை சுட்டே தீரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X