அப்பா காட்டிய கல்விப் பாதை! - கணேஷ்| Dr. Ganesh interview | Dinamalar

அப்பா காட்டிய கல்விப் பாதை! - கணேஷ்

Added : மார் 02, 2014 | கருத்துகள் (7) | |
கல்வியில் 36 ஆண்டு காலச் சேவைக்காக, இத்தாலியின் மிலன் பல்கலை, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பி.இ., பட்டதாரி, கல்லூரித் தலைவர், செயலாளர் பதவிகளை வகித்தாலும், அதிர்ந்து பேசாத எளிமை. பணிபுரிவோரிடம் காட்டும் அன்பு, ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்... என, மதுரை மண்ணின் கலவையாக இருக்கிறார், மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லூரித் தலைவர் கே.என்.கே.கணேஷ்.
அப்பா காட்டிய கல்விப் பாதை! - கணேஷ்

கல்வியில் 36 ஆண்டு காலச் சேவைக்காக, இத்தாலியின் மிலன் பல்கலை, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பி.இ., பட்டதாரி, கல்லூரித் தலைவர், செயலாளர் பதவிகளை வகித்தாலும், அதிர்ந்து பேசாத எளிமை. பணிபுரிவோரிடம் காட்டும் அன்பு, ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்... என, மதுரை மண்ணின் கலவையாக இருக்கிறார், மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லூரித் தலைவர் கே.என்.கே.கணேஷ். பள்ளிப் பருவத்தில் இருந்தே, வெளிநாடுகளை சுற்றிப் பார்த்த அனுபவசாலியான இவரது மனம், மதுரை மண்ணைச் சுற்றியே நிற்கிறது. அதனாலேயே மண்ணும் மனசும் பகுதிக்காக... நம்மிடம் மனம் விட்டு பேசினார்.

தந்தை கே.எல்.என். கிருஷ்ணன், தாய் இந்திராவிற்கு நான்காவது பிள்ளையாக பிறந்தேன். மூத்தவர்கள் மூன்று சகோதரிகள், இளையவர் சகோதரர். இரண்டாம் வகுப்பு வரை, மதுரை செயின்ட் ஜோசப் கான்வென்டில் படிப்பு. பின் ஏற்காடு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். அங்கே படிப்பும், விளையாட்டும் இருகண்கள். திடீரென அப்பா ஒருநாள் வந்து, 'எல்லாவற்றையும் எடுத்து வை. நீ அமெரிக்கா போகவேண்டும்' என்றார்.ரோட்டரி யூத் எக்ஸ்சேஞ்ச் மூலம்


அமெரிக்கா செல்ல, நான் தேர்வாகியிருந்தேன். 15 வயதிருக்கும் போது, தனியாக அமெரிக்கா சென்றேன். ஆங்கிலம் அறிமுகமாகியிருந்ததால், மொழிப் பிரச்னையில்லை. முதலில் ஜெர்மனியில் இரண்டு வாரங்கள் ஊரைச் சுற்றி பார்த்தபின், நியூயார்க் ராக்பில் மையத்தில் ரோட்டரி குடும்ப மாணவர்களுடன் படித்தேன். காலையில், அங்குள்ள பாலிடெக்னிக்கில் 'மெஷின் ஷாப், டிராயிங்' கற்றுக் கொள்வதும், மதியம் படிக்கச் செல்வதுமாக இருந்தேன்.அதன்பின், ஜப்பானில் அப்பாவின் குரு சுகிஜோ நடத்தும் பம்ப்செட் தொழிற்சாலையில் பயிற்சியாளராக, ஆறுமாதங்கள் பயின்றேன். 18 வயது நிறைவடையாததால், வேலையில் சேரமுடியவில்லை. ஏற்காடு வந்தபோது, மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேரச் சொன்னார்கள். ஆனால் என் தம்பி, பத்தாம் வகுப்பு சென்று விட்டான். எனவே, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி., சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பி.இ., எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஐந்தாண்டு படிப்பை முடித்தேன்.


1983ல், அப்பா, கே.எல்.என்., நாகசாமி நினைவு பாலிடெக்னிக் துவக்கினார். 1992ல் கமிட்டி அமைத்து, 1994ல் கே.எல்.என்., இன்ஜினியரிங் கல்லுாரியை ஆரம்பித்தார். 2001ல் கே.எல்.என்., தகவல் தொழில்நுட்பக் கல்லூரி துவங்க திட்டமிட்ட நிலையில், இறந்துவிட்டார். அப்பா காட்டிய பாதை, கல்விப் பாதை. நாளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பாதை. மேலைநாடுகளில் நான் கற்ற கல்வி, அனுபவத்தை, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நினைத்தேன்.இங்கே, இத்தாலி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளோம். வரும் கல்வியாண்டு முதல், இத்தாலியில் ஓராண்டு கல்வி பயில வாய்ப்பு தரப்படும்.நம்நாட்டல், இன்ஜினியரிங் என்றால், குறிப்பிட்ட ஒரு பாடத்திட்டம் தான். மேலைநாட்டில், அதனோடு தொடர்புடைய அனைத்து துறைகளையும் சேர்த்து கற்றுத் தருவதால், எந்த வேலைக்கும் எளிதாக செல்ல முடியும். அத்தகைய பாடத்திட்டம் இங்கும் வரவேண்டும், என்றார்.இவரிடம் பேச:98430 53861. - எம்.எம்.ஜெ.,


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X