ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் அரசியலுக்கு வரலாமா?

Added : மார் 03, 2014
Share
Advertisement
வயது பிரச்னை காரணமாக, மத்திய அரசுடன் நீண்ட காலமாக மோதலை கடைபிடித்து வந்த, முன்னாள் ராணுவ தளபதி, ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன் தினம், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது, "பா.ஜ., ஒன்றுதான் தேசிய கட்சி. நாட்டில் நிலையான, வலிமையான, தேசிய அரசு அமைக்க, ராணுவத்தினர், பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். அரசுத் துறையில் பணியாற்றியவர்கள், ஓய்வு பெற்ற பின்,
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் அரசியலுக்கு வரலாமா?

வயது பிரச்னை காரணமாக, மத்திய அரசுடன் நீண்ட காலமாக மோதலை கடைபிடித்து வந்த, முன்னாள் ராணுவ தளபதி, ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன் தினம், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது, "பா.ஜ., ஒன்றுதான் தேசிய கட்சி. நாட்டில் நிலையான, வலிமையான, தேசிய அரசு அமைக்க, ராணுவத்தினர், பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். அரசுத் துறையில் பணியாற்றியவர்கள், ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இருந்தாலும், அவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பது தொடர்பான, சர்ச்சை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதுதொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

அரசுத் துறையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றியவர்கள், கடற்படை, விமானப்படை, தரைப்படையில் தளபதிகளாக பணியாற்றியவர்கள், முன்னாள் நீதிபதிகள் உட்பட, பல துறைகளில் பணியாற்றியவர்கள், பணி ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு வருவது என்பது, அவர்களுடைய அடிப்படை உரிமை. ஆனால், அவர் அரசுப் பணியில் இருந்த போது, ஒரு கட்சி சார்புடையவராக, நடுநிலை இல்லாமல் செயல்பட்டிருப்பாரோ என்ற சந்தேகங்கள், மக்கள் மத்தியில் எழலாம். ஏற்கனவே, ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலை யில், ஓய்வுக்குப் பின், ஒரு அதிகாரி நேரடியாக அரசியலில், ஈடுபடும் போது, அவர் நல்லவராக, நேர்மையானவராக, பணி செய்திருந்தாலும், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை, மக்கள் இழக்க நேரிடும். உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளாக பணியாற்றியவர்கள், பணி ஓய்வுக்குப் பின், உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியாது. வழக்கறிஞராக அவர் பணியாற்ற விரும்பினால், உச்சநீதிமன்றத்தில் தான்
பணியாற்ற வேண்டும். எதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றால், நீதிபதியாக இருந்தபோது, அவருக்கிருந்த ஆளுமையை, வழக்கறிஞராக பணியாற்றும் போது, அவர் பயன்படுத்தி விடக்
கூடாது. அதனால், நீதி பிறழ்ந்து விடக் கூடாது என்பதே காரணம். அதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தனியார் கமிஷன்களில் பங்குபெறக் கூடாது என்பது போன்ற கடுமையான விதி முறைகள் நீதித்துறையில் உள்ளன. இதுபோன்ற நடைமுறைகளை, பிற துறை மூத்த அதிகாரி களும் பின்பற்ற வேண்டும்.
அவர்களே, அவர்களுக் கான சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போது தான், சமூகத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால், அதையெல்லாம் கடைபிடிக்க மாட்டோம் என, ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு அதிகாரிகள் வருவது, ஏற்கனவே இருக்கும் அவப்பெயரை மேலும் அதிகரிக்கும்.

ஜி.ராமகிருஷ்ணன் , மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ராணுவ தளபதிகள், தேர்தலின் போது, ஓட்டு போடுகின்றனர். அந்த ஓட்டு ஏதாவது, ஒரு அரசியல் கட்சிக்கு தான் போகும். ஏன், ஜனாதிபதி கூட ஓட்டளிக்கிறார். அவர்களின் ஓட்டு ஒரு கட்சிக்கு செல்வதால், அவர்கள் அக்கட்சியை சேர்ந்தவர்கள் என, சொல்லிவிட முடியுமா? ஒருவர் பதவியில் இருக்கும் போது, ஒரு சார்பாக நடந்தார், நடுநிலையாக இல்லை என்று சொன்னால், அவர் தொழில் தர்மத்தை மீறிவிட்டார் என, சட்டமே நடவடிக்கை எடுக்கும். ஆனால், ஓய்வு பெற்றபின், எதிர்காலத்தை முடிவு செய்ய, அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதை சட்டம் எதிர்க்காது. பெரும்பாலும், ஓய்வு பெற்றவர்கள் எந்த பணியையும் தொடர்ந்து மேற்கொள்ளாமல், ஓய்வு காலத்தை தன் மகிழ்ச்சிக்காக செலவிடுவர். ஆனால், ஓய்வு காலத்தையும், மக்கள் சேவைக்காக செலவிடுகிறேன். அதற்கு, அரசியல் ஒரு வழி என, அந்த பாதையை ஒருவர் தேர்வு செய்கிறார் என்றால், அதை கொச்சைப்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியில் சேர்வதாலேயே, அவரின் பணிக்காலம், சந்தேகத்துக்கு உரியது என, கூறுவதை ஏற்க முடியாது. பா.ஜ.,வில் முன்னாள் ராணுவ தளபதி இணைந்துள்ள போது, அவர் பணியில் இருக்கும்போது, நாட்டுக்கு விசுவாசமாக இருந்தாரா, பாதுகாப்பை உறுதி செய்வதில் பாரபட்சம் காட்டாமல் செயல்பட்டாரா என்று தான் பார்க்க வேண்டும். தன் சவாலான பணிக் காலத்தை வெற்றிகரமாக முடித்த பின், மக்கள் சேவைக்காக அவர் அரசியலுக்கு வருகிறார். அவரது பணிக் காலத்தில் கிடைத்த அனுபவங்களை யாருக்கும் பயன்படாமல் அவர் வைத்திருப்பதை விட, மக்களுக்கு கிடைக்க வேண்டும் என, அவர் அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. மக்கள் சேவைக்காக, அவர், எந்தக் கட்சியை தேர்வு செய்திருந்தாலும் அது பாராட்டுக்குரியதே. அது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருந்தாலும் சரி. அதை விமர்சிப்பதோ, சந்தேகப்படுவதோ நியாயமற்றது.

கே.டி.ராகவன் , பொது செயலர், தமிழக பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X