பயணிகள் லக்கேஜ் நடுவே பயங்கரம்| Dinamalar

பயணிகள் லக்கேஜ் நடுவே பயங்கரம்

Added : மார் 04, 2014 | கருத்துகள் (4)
Advertisement
பயணிகள் லக்கேஜ் நடுவே பயங்கரம்

படகைவிட்டு இறங்கியபோது அவர்கள் இரண்டு நபர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் யார் என்று அந்த இருவர் கேட்டதற்கு, மாணவர்கள் என்று பதில் சொன்னார்கள். இஸ்மாயில் அவர்களுடன் சண்டை பிடித்தான்.


காரில் வெடிகுண்டு:

இஸ்மாயில், கசாப் இருவரும் தங்கள் பைகளுடன் சாலையை நோக்கி நடந்தார்கள். ஒரு டாக்சி பிடித்தார்கள். முன் இருக்கையில் இஸ்மாயில் அமர்ந்தான். கசாப் பின்னால் அமர்ந்தான். விடி ஸ்டேஷனுக்குச் செல்லுமாறு டாக்சி டிரைவரிடம் கூறினார்கள். இஸ்மாயில் டிரைவருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். அதே சமயம் 2 ஒன்பது வோல்ட் பேட்டரிகளை வெடிகுண்டு டைமருடன் இணைத்தான். இதை அப்படியே டிரைவர் சீட்டுக்கு அடியில் வைத்தான். ஒரு மணி 15 நிமிடங்களுக்குப் பின்னர் வெடிக்குமாறு நேரம் குறித்திருந்தான்.

வி.டி.ஸ்டேஷனை சுமார் 20 நிமிடங்களில் அடைந்தனர். அவர்கள் சிடியில் பார்த்ததுபோல் கூட்ட நெரிசல் அங்கு இல்லாததைப் பார்த்துக் கவலைப்பட்டனர். தனது மொபைல் மூலம் அபுஹம்ஸாவுடன் தொடர்புகொள்ள முயற்சித்தான். நெட்வொர்க் வேலை செய்யவில்லை. கசாப் மொபைல் மூலம் முயற்சித்தான். அதுவும் இயங்கவில்லை. அதையும் தன்னுடன் வைத்துக்கொண்டு, பிளாட்பாரப் பாதையில் நுழைந்து, அங்கிருந்த படிக்கட்டுகளில் மக்கள் பெரிய பேக்குகளுடன் மேலேறிச் செல்வதைப் பார்த்து, அது நீண்ட தூர ரயில்களுக்கான பிளாட்பார்ம் என்று தெரிந்துகொண்டனர்.பயணிகள் லக்கேஜ் நடுவே

: அருகில் ஒரு டாய்லட் இருந்தது. தனது பையை இஸ்மாயிலிடம் கொடுத்துவிட்டு, டாய்லட்டுக்குள் சென்று திரும்பினான். பின்னர் இஸ்மாயில் தனது சிறிய வெடிகுண்டு பையுடன் டாய்லட்டில் நுழைந்து, திட்டப்படி அதில் பேட்டரிகளைப் பொருத்திக்கொண்டு திரும்பினான். அதைப் பயணிகள் லக்கேஜுக்கு நடுவில் வைத்துவிட்டுப் பின்னர் இருவரும் சைகை செய்துகொண்டனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடங்க முடிவு செய்தனர். கசாப் ஏகே 47ஐ எடுக்க, இஸ்மாயில் தனது பையில் இருந்து கைக்குண்டுகளை எடுத்து அதன் க்ளிப்பைக் கழட்டிப் பயணிகள் மீதுவீச, கசாப் பயணிகளைச் சுட ஆரம்பித்தான். இஸ்மாயில் இன்னொரு கைக்குண்டை எறிந்தான். இருவரும் தொடர்ந்து சுட்டனர். விடி ஸ்டேஷனில் பலர் கொல்லப்பட்டனர். மக்கள் பீதியில் மூலைக்கு மூலை ஓட ஆரம்பித்தனர். விரைவில் ஸ்டேஷன் காலியானது. அதே சமயம் போலீஸ் இவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக போலீசை நோக்கித் திருப்பிச் சுட்டனர்.பேலீஸ் எதிர் தாக்குதல்:

போலீசாரும் தொடர்ந்து தாக்கி இருவரையும் தடுக்க முயன்றனர். இஸ்மாயில், கசாப் இருவரும் திருப்பிச்சுட, போலீசார் இறந்துவிழுந்தனர். உடனே படிகளில் ஏறி, லோகல் லைன் பிளாட்பார்ம் ஒன்று மூலமாக வி.டி.ஸ்டேஷனை விட்டு வெளியே வந்துவிட்டனர். ஏறத்தாழ 6 மேக்கின்கள் சுட்டதாக கசாப் இஸ்மாயிலிடம் கூறினான்.


வெளியே வந்ததும் அவர்கள் அங்கு (பக்ருதீன் தாயாப்ஜி மார்க்) டாக்கி தேடினார்கள். ஏதும் இல்லை. அங்கேயிருந்த கார்களைத் திறக்க முயன்றனர். முடியவில்லை. அந்த சந்துக்குள் புகுந்து சுட ஆரம்பித்தார்கள். அதற்குள் பலமான போலீஸ் தாக்குதல் தொடங்கிவிடவே எதிரேயிருந்த கட்டிடத்துக்குள் புகுந்துவிடத் தீர்மானித்தனர். (இந்தக் கட்டிடமே காமா மருத்துவமனை) இக்கட்டிடத்தின் கூரைப் பகுதிக்கு (டெரஸ்) ஏறி, மேலே இருந்து கைக்குண்டுகளை எறியத் தீர்மானித்தார்கள்.வக குண்டுகள் வீச்சு:

அங்கு மூடியிருந்த கதவுகளைக் குதித்துத் தாண்டி உள்ளே புகுந்தனர். போலீஸ் அவர்களைத் தொடர்ந்தது. அவர்கள் மீதும் மக்கள் மீதும் இவர்கள் கைக்குண்டுகளை எறிந்தனர். போலீசாரும் சுட்டனர். கசாப், இஸ்மாயில் இருவரும் போலீசாரைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் இவர்கள் இந்தக் கட்டிடத்தில் இருந்தனர். அந்தக் கட்டிடம் ஒரு மருத்துவமனை என்பதைத் தெரிந்துகொண்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அலறிஅடித்துக்கொண்டு பீதியில் அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டு, ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து சுட்டுக்கொல்வது என்று தீர்மானித்தனர். அவர்கள் அறைக்குள் நுழைய முயன்றபோது கதவுகள் உட்புறம் தாழிடப்பட்டுவிட்டதையும் வெளியில் இரும்பு கேட்டும் பூட்டப்பட்டுவிட்டதையும் அறிந்தனர். எனவே அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேறி, கடைசி இலக்கை நோக்கிச் சென்றுவிடத் தீர்மானித்தனர். சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு நகர்ந்து வந்து, சுவற்றில் குதித்துத் தெருவுக்கு வந்து சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
04-ஏப்-201409:35:30 IST Report Abuse
v.sundaravadivelu இந்தப் பரதேசிப் பயலின் ஆத்மா எவ்ளோ பிறவி எடுத்தாலும் அவஸ்தைப் பட்டுட்டே தான் இருக்கணும்.. எமகாதகனை பொதுமக்களை விட்டு கல்லுல அடிச்சு சாகடிச்சு இருக்கணும்.. இவனுக்கெல்லாம் தூக்கு என்பதே மரியாதையான சாவு..
Rate this:
Share this comment
Cancel
Sudarsan. P - Chennai,இந்தியா
10-மார்-201410:10:08 IST Report Abuse
Sudarsan. P தயவு செய்து கசாப் படத்தை முதல் பக்கத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். தினமலர் .காம் திறந்தவுடன் இந்த மிருகத்தின் முகத்தை தினமும் பார்க்க வைக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X