இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி| Dinamalar

இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி

Added : மார் 06, 2014 | கருத்துகள் (1)
புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை வீரர்களுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் எனகோத்தபயவிடம்

புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை வீரர்களுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் எனகோத்தபயவிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் இந்திய கப்பல்களில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து சிவசங்கர் மேனன் கூறுகையில், இலங்கையிடம் அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பப்படும் நிலையில், அந்நாடுடன் ராணுவ ஒத்துழைப்பு தொடர்கிறது எனவும் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X